வாக்குத்தத்தம்
 /   Blog /  Created by Kingslin R Last updated Tue, 01-Oct-2024



வாக்குத்தத்தம்

1 யோவான், 2: 25.  "நித்திய ஜீவனை அளிப்பேன் என்பதே அவர் நமக்குச் செய்த வாக்குத்தத்தம்." 

என்றென்றும் தேவனோடும் பேரானந்தத்தோடும்  நித்தியத்தில் வாழ்வதை நித்திய வாழ்வு என்கிறோம். இரட்சிக்கப்படும் பொழுது இதை உணர்கிறோம். பாவத்திலிருந்து மனம் திரும்பி கர்த்தருக்குள் வாழ்கிற எல்லோருக்கும் இந்த நித்திய ஜீவனுக்காக வாக்குத்தத்தத்தை தேவன் நமக்குத் தருகிறார். இது கர்த்தருடைய கிருபையால் நமக்கு அளிக்கப்படுகிறது. 

தேவனுடைய முன்குறித்தலின் படி, சிலர் கர்த்தரால் ஆசீர்வாதமாக இருக்கிறார்கள். ஆனால் இன்று இயேசுவை ஏற்றுக்கொண்டால் பணக்காரராக மாறலாம், நோய்கள் எதுவும் இல்லாமல் சுகமாக வாழலாம் என்ற வாக்குத்தத்தங்கள் மக்களுக்கு மனிதர்களால் போதிக்கப்படுகிறது. இது முற்றிலும் தவறு. உலக மனிதர்களும் ஆசீர்வாதமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கிறார்கள்.  

கர்த்தருடைய பிள்ளைகளுக்கும் இந்த உலகத்திலேயே உபத்திரவம் உண்டு. ஆனாலும் தேற்றரவாளர்  நம்மை ஒவ்வொரு இக்கட்டில் இருந்து விடுவித்து, கர்த்தருடைய சித்தத்தை செய்து முடிக்க நமக்கு உதவி செய்கிறார். அப்போஸ்தலர்களின் வாழ்வில் இதை நாம் பார்க்கிறோம்.  நாம் பெற்றுக்கொண்ட இரட்சிப்பு தேவ சித்தத்தை நிறைவேற்றுவதற்கு தான். உலக ஆதாயத்தை நிறைவேற்றுவதற்கு அல்ல. 

கிறிஸ்தவராக இருந்தாலும், இரட்சிப்பின் பரிபூர்ணம் அடைந்து, தேவ சித்தத்தை நிறைவேற்றி முடிப்பவர்களுக்கு, நித்திய ஜீவனை அளிப்பேன் என்று வாக்கு பண்ணி இருக்கிறார் . அதை மட்டும் நம் முன்பாக வைத்து  நாம் செயல்படுவோம். நித்தியஜீவனை பெறுவோம். ஆமென். 





  :   12 Likes

  :   39 Views