தாழ்மையும்; மேன்மையும்
 /   Blog /  Created by Kingslin R Last updated Thu, 24-Oct-2024



தாழ்மையும்; மேன்மையும்

தாழ்மை - (MEEKNESS, HUMILITY) என்பது, தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையோடும் மனுஷரிடத்தில் அன்பாகவும் நடந்துகொள்வது.

தேவனே சர்வத்தையும் ஆளுகை செய்கிறவர் என்பதை அங்கீகரித்து மனத்தாழ்மையோடு இருப்பது.  மனத்தாழ்மை என்பது பலவீனம் அல்ல. மனத்தாழ்மையும் அன்பும் சேர்ந்திருக்கும் போது அது மிகுந்த தைரியத்தையும் பலத்தையும் கொடுக்கும்.

சபைத்தலைவர்களிடம் மனத்தாழ்மை இருக்கவேண்டும் (கலா 61; 5:22-23). தேவனே எல்லாவற்றையும் ஆளுகை செய்கிறவர் என்பதை உணர்ந்து துன்மார்க்கரிடமும்கூட, தேவமனுஷன் தாழ்மையுடன் நடந்துகொள்ளவேண்டும்.

இயேசு கிறிஸ்து நாம் மனத்தாழ்மையோடு இருக்கவேண்டும் என்று உபதேசிக்கிறார்.(மத் 5:5; 11:29), கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்கள் தாழ்மையை தரித்துக்கொள்ளவேண்டும்  {2கொரி 10:1; கலா 5:23; 6:1; எபே 4:1-2).


தாழ்மையினால் வரும் ஆசீர்வாதங்கள்:

1. சிருஷ்டியின் மகிமை (வெளி 4:11; லூக்கா 17:10)

2. மீட்பு (பிலி 2:5-8)

3. ஐசுவரியமும், கனமும் (நீதி 15:33; நீதி 22:4; மத் 5:3)

4. தாவீது (2சாமு 7.18-19; 1நாளா 17.17)

5. ஐக்கியம் (ஏசா 57:15; ஏசா 66:2)

6. ஆத்துமாவின் இளைப்பாறுதல் (மத் 11:29)

7. இரட்சிப்பு (மத் 18:3; லூக்கா 18)

7. மேன்மை (மத் 20:26-27; லூக்கா 22:26)

8. உயர்த்தப்படுதல் (மத் 23.12; லூக்கா 14:11)

9. வெளிப்பாடு (மத் 11:25; லூக்கா 10:21)

10. ஒற்றுமை (எபே 4.1-3; எபே 5:21; 1பேதுரு 5:5)

11. ஜெயஜீவியம் (ரோமர் 12.10,16; 1கொரி 13; கலா 5:26; பிலி 2:1-4; கொலோ 3:5-14; 1யோவான் 4:20; 1தீமோ 1:15; தீத்து 2.11-14)

12. விசுவாசம் (மத் 8:8; மத் 15:28; யோவான் 4:50)


தாழ்மையுள்ளவர்களுக்கு எடுத்துக்காட்டுக்கள்:

1. ஆபிரகாம் (ஆதி 18:27.32 )

2. யாக்கோபு (ஆதி 32.10-11)

3. மோசே (யாத் 4.10; எண் 12)

4. தாவீது (2சாமு 7.18-19; 1நாளா 17.17)

5. யோபு (யோபு 42:4-6)

6. ஏசாயா (ஏசா 6:5)

7. நூற்றுக்கதிபதி (மத் 8:8)

8.  யோவான் ஸ்நானன் (யோவான் 3:30)

9. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து

10. பவுல் (எபே 38; 1தீமோ 115)

பெருமையுள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார் - (நீதி 3:34)




  :   14 Likes

  :   43 Views