உற்பவகாலத்திட்டத்தில் உன்னிடத்திற்குத் திரும்ப வருவேன்; அப்பொழுது சாராளுக்கு ஒரு குமாரன் இருப்பான் என்றார் ஆதியாகமம்-18:14
ஒரு நாள் தேவதூதர்கள் ஆபிரகாம் வீட்டிற்கு வந்து உற்பவக் காலத்திலே உன் மனைவி ஒரு குமாரனை அணைத்துக் கொண்டிருப்பாள் என்று சொன்னவுடன், சாராளுக்கு அடக்கிக் கொள்ள முடியாத அளவு சிரிப்பும், நகைப்பும். காரணம் நான் கிழவி, என் ஆண்டவன் முதிர் வயதுள்ளவன். என்று சரீர பெலவீனத்தை எண்ணினாள்.
இன்று அநேகர் இப்படித்தான் சூழ்நிலைகளை வைத்துத் தங்களை தேற்றிக் கொள்கிறார்கள். அதன் மூலம் தேவ வல்லமையை அற்பமாக எண்ணுகிறார்கள். சாராள் வெளிப்புறம் நகைத்தாலும் அவள் உள்ளத்தின் குமுறுதலை கர்த்தர் அறிந்திருந்தார். நம் உணர்ச்சியை தவறாக வெளிப்படுத்தினாலும் நம் தேவன் நம் உள்ளக் குமுறுதலை அறிவார். நம்மை எல்லா நேரத்திலும் புரிந்து கொள்ளும் நண்பர் அவர் ஒருவரே. அதனால் தான் ஒவ்வொரு நாளும் நம் மன பாரங்களை அவரிடம் இறக்கி வைக்க வேண்டும்.
"கர்த்தரால் ஆகாத காரியம் உண்டோ” என்று கர்த்தர் கூறினார். மேலும், அடுத்த வருடம் அவளுக்கு ஒரு குமாரன் இருப்பான் என்றும் வாக்குரைத்தார். கர்த்தர் சொன்னது போல், சாராள் ஒரு குமாரனை பெற்றாள். அவனுக்கு ஈசாக்கு என்று பேரிட்டனர். முடியாது என்று மனிதர்கள் எண்ணினாலும், தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை.
இதேபோல், மிகபெரிதானவாக்குறுதிகளானபரலோக மேன்மைகளையும், நித்திய ஆசீர்வாதங்களையும் கிறிஸ்துவின் சீடர்களுக்கு தேவன் கொடுத்துள்ளார். ஆனால், சில நேரங்களில், நம்மால் இத்தகைய மேன்மையான ஆசீர்வாதங்களை பெற முடியுமா என்று சந்தேகம் அடைகிறோம். நாம் இந்த ஆசீர்வாதங்களுக்கு தகுதியானவர்கள் அல்ல என்று எண்ணுகிறோம். ஆனால், கர்த்தரால் ஆகாத காரியம் உண்டோ? அவரே நம்மை அழைத்துள்ளார், எனவே நிச்சயம் அதனை வாய்க்கச் செய்வார். ஆகவே, நாம் தேவனையும் அவரின் வாக்குறுதிகளையும் முழுமையாக விசுவாசித்து அதன்படி வாழ்வோமாக. ஏற்ற காலத்தில் தேவன் நம்மை உயர்த்துவார்.
சகோத,சகோதரியே! அவரால் பழுது பார்க்க முடியாத குடும்ப நிலை உண்டோ?
அவரால் சுகமளிக்க முடியாத நோய் உண்டோ?
அவரால் நீ ஏங்கி தவிக்கும் குழந்தையை கொடுக்க முடியாதா?
உன் பிள்ளைகளை நல்ல வழியில் கொண்டுவர முடியாதா?
உடைந்து போன உன் திருமண வாழ்க்கையை ஒன்று படுத்த முடியாதா?
அவர் அதிசயமானவைகளை செய்யப்போகிறார். எனவே நாம் கலங்கி நிற்க வேண்டிய அவசியம் இல்லை.
பலவிதமான பாடுகள் வேதனைகள் மத்தியில் யோபுவிற்கு தேவன் பதில் கொடுத்த பின் யோபு சொல்லுகிறார்; “தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன்’’ (யோபு 42:2).
கர்த்தரின் வாய் இதைக் கூறிற்று. கர்த்தரால் ஆகாதது ஒன்றுண்டோ?
இல்லவே இல்லை! விசுவாசத்தில், மனநிறைவோடு சிரி!
கர்த்தர்; என்னாலே செய்யக் கூடாத அதிசயமானகாரியம் ஒன்றுண்டோ? (எரேமியா 32:27).
ஆபிரகாம் முதிர்வயதாயிருக்கையில், சாராள் கர்ப்பவதியாகி, தேவன் குறித்திருந்த காலத்திலே அவனுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள்’’ (ஆதி 21:1,2). வாக்கு பண்ணின தேவன் தாம் சொல்லியபடியே அவைகளை நிறைவேற்றிக்கொடுத்தார்.
தேவனுடைய சித்தத்திற்கு நம்மை முழுமையாக அர்ப்பணிப்பதில் தான் உண்மையான மனநிறைவைக் காணலாம்.
ஆமென்!
Write a public review