வேதம் என் மனமகிழ்ச்சி
 /   Blog /  Created by Kingslin R Last updated Thu, 01-Jan-1970



வேதம் என் மனமகிழ்ச்சி

சங்கீதம் 119:92. "உமது வேதம் என் மனமகிழ்ச்சியாயிராதிருந்தால், என் துக்கத்திலே அழிந்துபோயிருப்பேன்."  

  உலக மனிதர்கள் அனேகர் ஏதோ ஒரு காரியத்தில் தோல்வியை பெற்று, அதிலிருந்து மீளமுடியாமல், மிகவும் ஒரு துக்கத்திலே அவர்கள் வாழ்வதை பார்க்க முடியும்.கர்த்தரை  தேடுகிறவர்கள் வாழ்க்கையில் தோல்விகள் வந்தாலும் , அவர்கள் கர்த்தருடைய வார்த்தைகளால்  பெலன் பெற்று அதிலிருந்து வெற்றி பெறுகிறார்கள். 

தாவீது இங்கே சொல்கிறதை பார்க்கிறோம். வேதம் எனக்கு மகிழ்ச்சியாக இல்லாவிட்டால் நான் துக்கத்திலே அழிந்து போய் இருப்பேன் .இந்த வசனம் என்னுடைய வாழ்க்கையிலும் ஒரு சாட்சியாக இருந்து, நான் எந்த சூழ்நிலையில் இருந்தாலும், வேத வசனமே என் வாழ்வில் மகிழ்ச்சியை கொடுக்கிறது . 

 சங்கீதம், 119:165. "உம்முடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானமுண்டு; அவர்களுக்கு இடறலில்லை."  

ஒருவேளை யாருக்காவது இப்படி பட்ட அனுபவம் இல்லை என்றால் ,இன்று முதல் கர்த்தருடைய வசனத்தை தியானித்து, கீழ்ப்படிந்து, அதன்படி நடவுங்கள். உங்களுடைய வாழ்க்கையில் மிகுந்த சமாதானத்தை தர கர்த்தர் வல்லவராக இருக்கிறார் .ஆமென். 





  :   36 Likes

  :   128 Views