முள்வேலி
சங்கீதம் 119:118 சங்கீதம் 119:75
ஒரு மான் ஒன்று பெரிய கம்பிகளை தாண்டும்போது கம்பியில் மாட்டிக் கொண்டு அங்கே வயிறு கிழிக்கப்பட்டு மரித்த நிலையில் தொங்கிக் டிருந்தது. பாதுகாப்பிற்கான வேலியே அதனுடைய உயிரைப் பறித்தூவிட்டது. ஆன்மீக வாழ்க்கை என்பது. மனம் போன போக்கில் சுதந்திரமாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு நிலையைவிட்டு தேவனுடைய பாதுகாப்பின் சமூகத்திற்கு வருகின்ற ஒன்றாகும். ஆனால் அது ஒரு முள்வேலிக்குள் நம்மை உட்படுத்தும் வாழ்க்கையும் ஆகும்.
ஆனால் இந்த வேலிக்குள் பாதுகாப்பான சுதந்திரம் உண்டு காட்டில் அலைந்து திரியும் ஆட்டிற்கு முள்வேலிகள் இல்லை. அது எங்கு வேண்டுமானாலும் விடுதலை யோடு உலாவலாம். ஆனால் ஆபத்து எங்கே? எப்போ? எப்படி? வரும் என்று கூற முடியாது. ஆனால், முள்வேலி நாம் தவறான இடத்திற்குப் போகாமல் நம்மைத் தடுக்கின்றது. தவறானவைகளால் நாம் பாதிக்கப்படாமலும் அது நமக்கு உதவுகின்றது. ஆனால், இந்த முள்வேலியைத் தாண்டிச் செல்ல விரும்பும்போது, அதே முள்வேலியே நம்மை காயப்படுத்திவிடும். நாம் ஆண்டவரை அறியாமல் வாழும்போது பல தவறுகள் குற்றங்கள் செய்தாலும், அதனால் நாம் அதிகமாகப் பாதிக்கபடாமலும், குற்ற உணர்வு அடையாமலும் இருப்பதுண்டு.
ஆனால், மனந்திரும்பி கர்த்தருக்குப் பிரியமாக வாழ முன்வந்த பின்னரோ. சிறு சிறு தவறுகளும் குறைவுகளும் நம்மைக் காயப்படுத்தும்.தேவ கட்டளையை மீறும் போதெல்லாம் அது நமக்குள் பாவத்தின் பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே தான், சிலர் பாவ வாழ்க்கையின் நாட்களைவிட பரிசுத்த வாழ்க்கையின் நாட்களிலே அதிக மன பாரமுடையவர்களாகவும், சுமை உடையவர்களாகவும் விளங்குகின்றனர்.
ஆனால், இந்த முள்வேலிகள் நம்முடைய நன்மைக்கே. இவைகள் நம்மைக் குத்தவில்லையெனில், நம்முடைய கால்கள் எல்லைகளைக் கடந்து போய்விடும். நம் முடைய இருதயம் கட்டுப்பாடுகளை இழந்து போய்விடும். ஆம், தேவன் அமைத்த முள் வேலிகளுக்காக நன்றி சொல்வோம். அதன் விளைவாக நாம் தவறுகளையும் குற்றங்களையும் தவிர்க்க, நல்ல வாய்ப்பைப் பெறுகின்றோம்.
Write a public review