மாறுபாடான சந்ததி நடுவில்
 /   Blog /  Created by Kingslin R Last updated Thu, 01-Jan-1970



மாறுபாடான சந்ததி நடுவில்

கோனலும் மாறுபாடான சந்ததியின் நடுவிலே குற்றமற்றவர்களும் கபடற்றவர்களும், தேவனுடைய மாசற்ற பிள்ளைகளுமாயிருக்கும்படிக்கு ( பிலி2 : 15)  

நாம் வாழும்படியான இந்த உலகம், தேவனுக்கு உகந்தவர்களாக வாழும்படியான சூழ்நிலையை கொண்ட ஓர்  இடமல்ல. தேவனை அறியாத ஜனங்கள் மத்தியில் வாழ்கிறோம், தேவனை உதாசினப்படுத்துகிற, தேவனுக்கு பிரியமல்லாத செய்கைகளைச் செய்யும் மக்கள் நடுவே தேவன் நம்மை ஒரு நோக்கத்திற்கென்று, குறிக்கோலோடே வாழும்படியாக தெரிந்துக் கொண்டுள்ளார்.  

ஆனால் இவர்கள் மத்தியில் தேவன் நாம் எப்படி வாழவேண்டுமென்று சொல்லுகிறார்.  உலகத்திலே சுடர்களைப்போல பிரகாசிக்கிர நம்முடைய வாழ்க்கை , இருண்ட பாதையில்  கடந்துச் செல்லும் மக்கள் மத்தியில் அவ்விதம், சுடர்களைப்போல பிரகாசிக்கிறதா? இன்று அநேக கிறிஸ்தவர்களுடைய வாழ்க்கையைப்பார்த்து மற்ற புறஜாதி மக்கள் சொல்லும் சாட்சி என்ன? என்னுடைய வாழ்க்கை அவர்களுடைய வாழ்க்கையைக் காட்டிலும் மேலானதாக இருக்கிறது.நாம் குற்றமற்ற, கபடற்ற, தேவனுடைய மாசற்ற  பிள்ளையாய் இருக்கிறோமா? வேத வசனம் பொய்யல்ல. இல்லையென்றால் அவ்விதம் வாழவேண்டுமென்றாவது விரும்புகிறோமா?  நாம் எல்லோரும் ஜீவவசனத்தைப் பிடித்துக்கொண்டு உலகத்திலே சுடர்களைப் போல பிரகாசிக்கவேண்டுமென்று வேதம் சொல்லுகிறது. மாறுபாடான சந்ததி நடுவில்  . தேவனே என்னை அவ்விதம் மாற்றும். ஆமென்.





  :   33 Likes

  :   115 Views