மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன?
 /   Blog /  Created by Kingslin R Last updated Thu, 01-Jan-1970



மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன?

மத்தேயு 16:26  மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்?

மைக்கேல் ஜாக்சன் எந்த உலகின் முன்னணி பாப் இசை பாடகர் தன்னுடைய குரல்வளம் ,தனது நடனத் திறமையினாலும் உலகத்திலே அநேக கோடிக்கணக்கான மக்களை தனக்கு ரசிகர்களாக கொண்டு உலகத்தில் ஒரு பெரிய வாழ்க்கை வாழ்ந்தவர். ஆனால் அவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் மிகப்பெரிய ஒரு தோல்வி. திறமையோடு நற்பண்புகள் இணையாவிட்டால் உண்மையான வெற்றியை காண முடியாது. 

  கல்வி ,திறமை ,தொழில் முன்னேற்றம் அவசியமே .ஆனால் அவைகள் ஒரு மனிதனுடைய வாழ்க்கையை வெற்றி ஆக்கிவிட முடியாது.கர்த்தரால் ஒரு மனிதன் பண்படுத்த பட்டு தேவ ஆவியினால் நற்பண்புகளை பெற்று வாழ்க்கையில் உண்மையான வெற்றியின் சிகரத்தை கண்டு மகிழ வேண்டும். ஆம் வாழ்க்கையில் நாம் எவ்வளவு பெரிய திறமைகளை பெற்றிருந்தாலும் ,எவ்வளவு பெரிய வசதிகளை பெற்றிருந்தாலும், கர்த்தருக்கு முதல் இடம் கொடுப்போம் உண்மையான வாழ்க்கையில் வெற்றியை அனுபவிப்போம். ஆமென். 

  




  :   34 Likes

  :   124 Views