நாவு
 /   Blog /  Created by Kingslin R Last updated Thu, 01-Jan-1970



நாவு

மோசம்போகாதிருங்கள்; ஆகாத சம்பாஷணைகள் நல்லொழுக்கங்களைக் கெடுக்கும் (1கொரி 15:33).  

நாவு மிக வலிமையான ஆயுதம். அது நம்முடைய வாழ்க்கையில் சரியாக உபயோகப் படுத்தப்படுமானால், அதனுடைய வலிமை மிகப் பெரியது. பலரை ஆண்டவருடைய சத்தியத்தில் கொண்டு வருவதற்கு அது பயன்படுகிறது. நாம் ஆண்டவருடைய சமூகத்தில் துதிப்பதற்கும் ஜெபிப்பதற்கும் நாவை பயன்படுத்துகிறோம். ஆனால் இந்த நாவால் நாம் ஆண்டவரை அறிந்த பின்பு, பரியாசத்திற்கும், கேலிக்கும் உபயோகப் படுத்துவோமானால், அது நம்முடைய நல்ல ஒழுக்கங்களை பாதிக்கும். நம்முடைய சாட்சியைப் பாதிக்கும். மிகுதியான சொற்களில் பாவம் இராமல் போகாது என்று வேதம் சொல்லுகிறது. ஆகவே நாம் நம்முடைய நாவைக் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 

நம் கடந்த வாழ்க்கையில் கேலி பரிகாசம்  பேசியிருந்தால், மறுபடியும் அவ்வாறாக நம்மை பேசும்படியாக தூண்டச் செய்யும். ஆகவே நம்முடைய நாவை அடக்கியாளப் பழகுவோமாக. நம் நாவினாலே தேவனைத் துதிக்கவும், அவருடைய நாமத்தை மகிமைப்படுத்தவும், அவருடைய சத்தியத்தைப் பேசுவதுமே தேவை. நம்முடைய நாவு நாம் அவருடைய பிள்ளைகள் என்று சாட்சியிடுகிறது. தேவனும் அதையே எதிர்பார்க்கிறார்.  நாம் இந்த நாவினால் தேவனை  மகிமை படுத்தலாம் அல்லது துக்கப்படுத்தலாம். ஆகவே நம் நாவை எச்சரிப்புட்ன் உபயோகிக்க கற்றுக்கொள்வோம். ஆமென். 





  :   34 Likes

  :   102 Views