நமது இலக்கு
 /   Blog /  Created by Kingslin R Last updated Thu, 01-Jan-1970



நமது இலக்கு

எபிரேயர் 12:1  "ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்;" 

இலக்கு என்பது ஒரே நேரத்தில் பல விஷயங்களின் மேல் கவனம் வைப்பது அல்ல. ஒருவர் ஒரே நேரத்தில் டாக்டர் , இன்ஜினியர், ஆசிரியர் என்று பல துறைகளில் ஓடினால் அவரால் ஒன்றும் எட்ட முடியாது. 

அனேகர் தேவனுக்கு பிரியமாக வாழ நினைத்தும் வாழ விரும்பியும் வெற்றி பெற முடிவதில்லை. ஏனென்றால் தேவனுக்கு பிரியமாக வாழ விரும்புகிற அதேவேளையில் பணம் ,பொருள், வசதி ,கௌரவம் என பல விஷயங்களில் மனம் அலை மோதுகிறது . 

தானியேல் தன்னை தீட்டு படுத்தாமல் தேவனுக்கேற்றவனாக இருப்பதே இலக்காக வைத்திருந்தார். நெகேமியா இடிந்துபோன எருசலேம் சுவர்களை கட்டியெழுப்புவதே இலக்காக வைத்து இருந்தார். இவர்கள் பல இலக்குகளை வைக்காமல் தேவ சித்தத்திற்கு ஏற்ற ஒரே இலக்கில் ஓடினார்கள். வெற்றியும் பெற்றார்கள். 

நாம் நமது இலக்கை தேவனிடமிருந்து பெற்று, இயேசுவின் மேல் பார்வையை வைத்து, நாம் ஓடும்போது, வெற்றி பெற்றவர்களாக வாழ முடியும். அந்த இலக்கை நோக்கிய ஓட்டம் உயர்ந்த நன்மைகளுக்கு நம்மை தகுதியாக்கும். ஆமென். 





  :   32 Likes

  :   122 Views