தேவ கிருபை
 /   Blog /  Created by Kingslin R Last updated Thu, 01-Jan-1970



தேவ கிருபை

உன் பிராணனை அழிவுக்கு விலக்கி மீட்டு, உன்னை கிருபையினாலும் இரக்கங்களினாலும் முடிசூட்டி (சங்கீதம் 103 :4)  

தேவன் செய்திருக்கிற மகத்துவமான காரியத்தை அடிக்கடி நினைவு கூற வேண்டும். அது நம்முடைய இருதயத்தை நன்றி உணர்வினால் நிரப்பும். நம் ஆத்துமாவை அழிவுக்கு விலக்கி மீட்டிருக்கிறார். நரக ஆக்கினைக்கு, பாவத்தின் தண்டனைக்கு தேவன் நம்மை மீட்டிருக்கிறார்                      

அவர் நம்மை சகல அக்கிரமங்களினின்று மீட்டுக்கொண்டு, தமக்குச் சொந்த ஜனங்களாகவும், நற்கிரியகளைச் செய்ய பக்திவைராக்கியமுள்ளவர்களாகவும் நம்மை சுத்திகரிக்கும்படி, நமக்காக தம்மைதாமே ஒப்புக்கொடுத்தார்  (தீத்து 2:14)  அவர் நம்மை மீட்டது மாத்திரமல்ல,  தமக்கு சொந்தமாக்கிக் கொண்டார். அநேகர், ஒருவேளை உங்களை சொந்தமென்று சொல்லக்கூட வெட்கப்பட்டிருக்கலாம். ஆனால் பாவியாகிய ஒரு மனிதனை உரிமையோடு தமக்குச் சொந்தமாக்கிக்கொள்வதுதான் கிருபை அதோடு மாத்திரமல்ல, முடிசூட்டி என்று சொல்லப்படுவது தம்முடைய கிருபையை, இரக்கத்தைத் தொடர்ந்து  நம்மேல் பொழிந்தருளுகிறார்.  

கிருபையினால் இரட்சித்த தேவன், தொடர்ந்து கிருபையினால் காத்து வழிநடத்துகிறார். இந்தக் கிருபை நமக்கு உன்னத மாற்றத்தை ஏற்படுத்துகிறது. நாம் நற்கிரியை செய்ய மாற்ற படுகிறோம் . நம்மை ஒரு புதிய மனிதனாக உருவாக்கினதே தேவன் நம்மேல் வைத்த  கிருபை. ஆமென். 





  :   28 Likes

  :   103 Views