ஜெபம்
-1
தேவனுடைய
ராஜ்யத்தில், இறையியலில் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட ஒரு முக்கியமான தலைப்புகளில்
ஒன்று.
ஜெபம்
என்பது தேவனோடு உரையாடுவது. இது ஒரு "உரையாடல்",
தனிமையில் பேசுவது அல்ல.
ஜீவனுள்ள
தேவன் நமக்குள்ளே வாசம் பண்ணி அதில் நாம் வளருவதற்கு ஜெபம்
ஒரு வழியாயிருக்கிறது. ஜெபத்தை பற்றிய நம்முடைய கருத்துக்கள் புதிய ஏற்பாட்டில் காணப்படவில்லை. பொருள் வழங்கும் இயந்திரம் போல நம்முடைய தேவைகளை
பெற்று கொள்வதற்கு. ஜெபத்தை ஒரு வழிமுறையாக மட்டுமே
பார்க்கிறோம். ஆனால் இறையியல் வாயிலாக ஜெபத்தின் நோக்கம் என்னவென்றால். தேவனையே அறிந்துகொள்ளவும் மற்றும் அவரை தெரிந்து கொள்வதின்
மூலம் அவரோடு நடந்து அவர் விருப்பத்தை நிறைவேற்ற
முடியும்.
ஜெபம் என்பது நோவா தன் பேழையிலிருந்து
வெளியே விட்ட புறாவைப் போல. அது போல
ஒரு ஒலிவமரத்தின் இலையை கொத்திக்கொண்டு திரும்ப வந்து அவனை ஆசீர்வதித்தது " அதுமாத்திரம் அல்லாமல்
அவனிடத்திற்குத் திரும்ப வரவில்லை.
வேதாகமத்தில்
ஜெபத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி ஒத்த வாக்கிய அகராதியில்(Concordance)
காணலாம். [ஜெபத்தை குறிக்கிற (ஜெபித்தல், விண்ணப்பம் செய்தல். வேண்டுதல் செய்) போன்ற வார்த்தைகள் KJV யில் 545முறை குறிப்பிடப்பட்டுள்ளது. நான் அறிந்த
ஒரு பெரும் அறிஞரின் மேற்கோள் இப்படியாய் சொல்லுகிறது. "நாம் வேலை செய்யும்
போது வேலை நடக்கும். ஆனால்
நாம் ஜெபிக்கும் போதோ தேவன் நம்முடைய
காரியங்களை செய்வார்"
தேவன்
சகலத்தையும் ஆள்பவர்! அப்படியானால் நீங்களும் நானும் எதற்காக ஜெபிக்க வேண்டும்.?
நீங்கள்
ஜெபிப்பதினால் தேவன் தன்னுடைய மனதை மாற்றி கொள்வாரா?
சகலத்தையும்
அறிந்த தேவன்: தேவன் நம் எல்லோரையும் அறிவார்!!
தேவன்
நம்மை அறிந்திருக்கிறபடியால் நாம் பிறப்பதற்கு முன்னே
நம்முடைய வாழ்வுக்கான திட்டங்களை வைத்திருக்கிறார்.
நம்மை
பற்றி நமக்கு தெரிந்ததை விட அவருக்கு நன்றாக
தெரியும். பிறகு, எதற்கு நான் ஜெபிக்க வேண்டும்?
இயேசுவோடு
வாழ்ந்து அவர் செய்த அற்புதங்களை
கண்ட சீஷர்கள் அவரிடத்தில் "எவ்வாறு ஜெபிக்க வேண்டும்?" என்பதை கற்று தர வேண்டும் என்று
ஒன்றை மாத்திரமே கேட்டார்கள் . லூக்கா 11:1,அவர் ஒரு இடத்தில்
ஜெபம்பண்ணி முடித்தபின்பு அவருடைய சீஷரில் ஒருவன் அவரை நோக்கி ஆண்டவரே.
யோவான் தன் சீஷருக்கு ஜெபம்
பண்ணப் போதித்ததுபோல நீரும் எங்களுக்குப் போதிக்கவேண்டும் என்றான்.
இயேசு
எவ்வாறு ஜெபம் பண்ணினார்?
இத்தனை
வருடமாய் நீங்கள் கிறிஸ்தவர்களாய் இருந்தும் கூட இந்த கேள்விக்கான
விடையின் மூலம் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். இயேசு எப்பொழுதும் தனித்தே ஜெபம் பண்ணினார்!! லூக்கா 5:16, அவரோ வனாந்தரத்தில் தனித்துப்
போய், ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்.
மத்தேயு
6:6. நீயோ ஜெபம்பண்ணும்போது, உன் அறைவீட்டுக்குள் பிரவேசித்து,
உன் கதவைப்பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி
ஜெபம்பண்ணு; அப்பொழுது அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய்
உனக்குப் பலனளிப்பார்.
ஆகவே
இரகசியத்தை கண்டுபிடிக்க. இயேசு இப்பூமியில் வாழ்ந்த போது எவ்வாறு ஜெபம்
பண்ணினார் என்பதை இந்த வேதபாடம் வாயிலாக
கற்றுக்கொள்ளலாம்
1. இயேசு
ஞானஸ்நானம் எடுக்கும் பொழுது ஜெபம் பண்ணிக்கொண்டிருந்தார்.
லூக்கா
3:21-22, "ஜனங்களெல்லாரும்
ஞானஸ்நானம் பெற்றபோது, இயேசுவும் ஞானஸ்நானம் பெற்று. ஜெபம்பண்ணுகையில், வானம் திறக்கப்பட்டது. "பரிசுத்த ஆவியானவர் ரூபங்கொண்டு புறாவைப்போல் அவர்மேல் இறங்கினார். வானத்திலிருந்து ஒரு சத்தமும் உண்டாகி:
நீர் என்னுடைய நேசகுமாரன், உம்மில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது..”
2.கலிலேயாவிற்கு
போவதற்கு முன் காலையில் தனிமையில் ஜெபம் பண்ணினார்.
மாற்கு
1:35-36. "அவர் அதிகாலையில் இருட்டோடே எழுந்து புறப்பட்டு, வனாந்தரமான ஓரிடத்திற்குப்போய், அங்கே ஜெபம்பண்ணினார். சீமோனும் அவனோடே இருந்தவர்களும் அவரைப் பின் தொடர்ந்துபோய்,
3. 12 சீஷர்களை
தெரிந்தெடுப்பதற்கு
முன் இரா முழுதும் ஜெபம் பண்ணும்படி வெளியே போனார்.
லூக்கா6:12-13,
அந்நாட்களிலே. அவர் ஜெபம்பண்ணும்படி இராமுழுதும்
ஒரு மலையின்மேல் ஏறி. தேவனை நோக்கி
ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்.
"பொழுது விடிந்தபோது, அவர் தம்முடைய சீஷர்களை
வரவழைத்து. அவர்களில் பன்னிரண்டுபேரைத் தெரிந்துகொண்டு, அவர்களுக்கு அப்போஸ்தலர் என்று பேரிட்டார்.
4. யோவான்
ஸ்நானகனின் தலை துண்டிக்கப்பட்ட பின்பும் 5,000 பேரை போஷிப்பதற்கு முன்பும்.
மத்தேயு
14:23, அவர் ஜனங்களை அனுப்பிவிட்டபின்பு, தனித்து ஜெபம்பண்ண ஒரு மலையின்மேல் ஏறி.
சாயங்காலமானபோது அங்கே தனிமையாயிருந்தார். அவர் அதை கேட்ட
போது தனிமையாய் இருக்கும்படிக்கு படவில் ஏறி அங்கிருந்து புறப்பட்டு
போனார் அப்போது ஜனங்கள் கேள்விப்பட்டு அவரை பின் தொடர்ந்து
போனார்கள்
5. இயேசு
தேவனுடைய குமாரன் என்று பேதுரு வெளிப்பாடு பெறுவதற்கு சற்று முன்பு.
லூக்கா
9:18, பின்பு அவர் தமது சீஷரோடே
கூடத் தனித்து ஜெபம்பண்ணிக்கொண்டிருக்கையில்
அவர்களை நோக்கி: ஜனங்கள் என்னை யார் என்று சொல்லுகிறார்கள்
என்று கேட்டார்.
6. மறுரூபமடைதல்
லூக்கா
9:28-29. இந்த வார்த்தைகளை அவர் சொல்லி ஏறக்குறைய
எட்டு நாளானபின்பு, அவர் பேதுருவையும் யோவானையும்
யாக்கோபையும் கூட்டிக்கொண்டு, ஜெபம்பண்ணுகிறதற்கு ஒரு மலையின்மேல் ஏறினார்.
*அவர் ஜெபம்பண்ணுகையில், அவருடைய முகரூபம் மாறிற்று. அவருடைய வஸ்திரம் வெண்மையாகிப் பிரகாசித்தது.
7. கெத்செமனே
தோட்டத்தில் ஜெபம்
மத்தேயு
26:36-46,அப்பொழுது, இயேசு அவர்களோடே கெத்செமனே என்னப்பட்ட இடத்திற்கு வந்து சீஷர்களை நோக்கி: நான் அங்கே போய்
ஜெபம்பண்ணுமளவும் நீங்கள் இங்கே உட்கார்ந்திருங்கள் என்று சொல்லி, * பேதுருவையும். செபதேயுவின் குமாரர் இருவரையும் கூட்டிக்கொண்டுபோய் துக்கமடையவும். வியாகுலப்படவும் தொடங்கினார். "அப்பொழுது, அவர் என் ஆத்துமா
மரணத்துக்கேதுவான துக்கங்கொண்டிருக்கிறது: நீங்கள் இங்கே தங்கி. என்னோடே கூட விழித்திருங்கள் என்று
சொல்லி, சற்று அப்புறம்போய், முகங்குப்புற விழுந்து: என் பிதாவே. இந்தப்பாத்திரம்
என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படி செய்யும், ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே
ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார். “பின்பு, அவர் சீஷர்களிடத்தில் வந்து,
அவர்கள் நித்திரைபண்ணுகிறதைக்கண்டு. பேதுருவை நோக்கி: நீங்கள் ஒரு மணி நேரமாவது
என்னோடேகூட விழித்திருக்கக்கூடாதரி
"நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு
விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள். ஆவி உற்சாகமுள்ளதுதான். மாம்சமோ பலவீனமுள்ளது என்றார்.
அவர் மறுபடியும்
இரண்டாந்தரம் போய் என் பிதாவே. இந்தப் பாத்திரத்தில் நான் பானம்பண்ணினாலொழிய இது என்னை
விட்டு நீங்கக்கூடாதாகில் உம்முடைய சித்தத்தின்படி ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார்
"அவர் திரும்ப வந்தபோது, அவர்கள் மறுபடியும், நித்திரைபண்ணுகிறதைக் கண்டார். அவர்களுடைய
கண்கள் மிகுந்த நித்திரைமயக்கம் அடைந்திருந்தது. “அவர் மறுபடியும் அவர்களைவிட்டுப்
போய், மூன்றாந்தரமும் அந்த வார்த்தைகளையே சொல்லி ஜெபம்பண்ணினார் "பின்பு அவர்
தம்முடைய சீஷர்களிடத்தில் வந்து: இனி நித்திரைபண்ணி இளைப்பாறுங்கள், இதோ, மனுஷகுமாரன்
பாவிகளுடைய கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுகிற வேளைவந்தது. என்னைக் காட்டிக்கொடுக்கிறவன்.
இதோ வந்துவிட்டான். எழுந்திருங்கள் போவோம் என்றார்."(மற்றும் லூக்கா
22:39-46, மாற்கு 14:32-42)
8. சிலுவையில்
ஜெபம்
லூக்கா
23:34, அப்பொழுது இயேசு இவர்களுக்கு மன்னியும், தாங்கள் "பிதாவே செய்கிறது இன்னதென்று
அறியாதிருக்கிறார்களே" என்றார். லூக்கா 23:46, இயேசு “பிதாவே, உம்முடைய கைகளில்
என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச்சொன்னார். ஜீவனைவிட்டார்"
இப்படிச் சொல்லி,
மேலே
குறிப்பிட்டதை தவிர, 5000 பேருக்கு போஷிப்பதற்கு முன்னும் அதே போல் 4000 பேருக்கு
போஷிப்பதற்கு முன்னும் உணவுக்கான ஆசீர்வாத ஜெபத்தை சொல்லி ஜெபம் பண்ணினார். மேலும், மேல் அறையில் இராபோஜனப்
பந்தியில் அப்பத்தை பிட்கும் முன் அதற்காக நன்றி
செலுத்தி ஜெபம் பண்ணினார்.
யோவான்
17:1-26 ல், இயேசு, பிரதான ஆசாரிய ஜெபத்தை பண்ணினார்.
டி.எ.கார்சன்ஸ் (D.A. Carson's) புத்தகத்திலிருந்து தழுவிய காரியங்கள்..
பிதா
குமாரனைக் கொடுத்தார்.. யோவான் 17 நித்திய ஜீவனை கொடுக்கும் அதிகாரம் வச. 2 உலகத்தில்
மக்கள் தெரிந்தெடுக்கப்பட்ட வச. 2, 6, 9, 24 செய்து முடிக்க வேண்டிய காரியங்கள் வச. 4 வார்த்தைகள் வச 8, அவர் நாமம் வச.
11, 12, மகிமை
வச. 22, 24
குமாரன்
விசுவாசிகளுக்கு
கொடுத்தார்... யோவான் 17
நித்திய
ஜீவன் வச. 2, பிதாவினுடைய
வார்த்தை வச. 8, 14 பிதாவினுடைய நாமத்தை வெளிப்படுத்துதல் வச .
6, 22 மகிமை வச. 22
குமாரன்
பிதாவிடம் கேட்டு கொண்டார்...
யோவான் 17
குமாரனை
மகிமைப்படுத்த வேண்டும் வச. 1,5 விசுவாசிகளை உம்முடைய நாமத்தினாலே காத்துக்கொள்ளும். வச. 11 விசுவாசிகளை தீமையினின்று காத்துக்கொள்ளும் வச.15 சத்தியத்தினாலே பரிசுத்தமாக்கும் விசுவாசிகளை வச. 17 விசுவாசிகள் ஒன்றாயிருக்கவும் வச. 21
இயேசுவைப்
பின்பற்றுபவர்கள் மற்றும்
உலகம் யோவான் 17, அவர்கள் உலகத்திற்குள் அனுப்பப்பட்டார்கள். வச. 18, அவர்கள் உலகத்திலிருக்கிறார்கள் வச.. 11 அவர்களும் உலகத்தாரல்ல வச. 16 உலகம் அவர்களைப் பகைத்தது வச. 14, அவர்களெல்லாரும் ஒன்றாயிருப்பதாலும், அவர்களெல்லாரும் நம்மில் ஒன்றாயிருப்பதாலும், பிதா, தன்னுடைய குமாரனை அனுப்பினார் வச. 21 என்கிற விசுவாத்தை ஏற்படுத்தியது.
ஆண்டவராகிய
இயேசு கிறிஸ்துவின் ஜெபத்தின் மற்றொரு அற்புதமான காரியம். "வாசம் பண்ணுதல்" என்ற கருத்து எண்ணற்ற
வழிகளில் ஒருமைப்பாட்டை நிலைநிறுத்துகிறது. இயேசு நமக்கு கற்றுக்கொடுப்பது என்னவென்றால்:
1. பிதா
குமரனில் இருக்கிறார். (வச. 21, 23)
2. குமாரன்
பிதாவில் இருக்கிறார். (வச. 21)
3. விசுவாசிகள்
பிதாவிலும் , குமாரனிலும் இருக்கிறார்கள்.
(வச 21)
4. குமாரன்
விசுவாசிகளிடத்தில் இருக்கிறார். (வச. 23, 26)
|
தமக்கு (1-5) |
அவருடைய சீஷர்கள் (6-19) |
வருங்கால விசுவாசிகள் (20- 26) |
|
இயேசு சிலுவையின் மகிமையை உறுதிப்படுத்து கிறார் (வச 1-2) |
அவர்களுடைய அறிவிற்காக ஜெபம் பண்ணினார் (6-9) |
பிதாவிலும் |குமாரனிலும் ஒன்றாயிருக்க (20-22) |
|
நித்தியஜீவனை அறிதல் (3-4) |
விடாமுயற்சி (10-12) |
ஒருமைப்பாட்டி ல் தேறினவர்களாக (23) |
|
பிதாவினுடை ய மகிமையில் பங்கு
கொள்வதில் மகிழ்ச்சி (5) |
அவர்களுடைய சந்தோஷத்திற்காக (13) |
அவரோடு இருக்க விரும்புகிறார்
(24-25) |
|
தீமையினின்று பாதுகாவல் (14-16) |
ஒருவருக்கொரு வர் அன்பை பரிமாற்றம் செய்தல் (26) |
சுத்திகரித்தல் (14-17) |
வேதாகமங்களில்
கிறிஸ்துவானவர் கூட பரலோகத்திலே பிரவேசித்திருக்கிறார்
என்றும். இயேசுகிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார் என்று சுட்டிக் காட்டுகிறது.. (ரோமர் 8:34, எபிரேயர் 7:25 & 9:24 and
1 யோவான் 2:1).
Write a public review