மத்தேயு 6:9-13. நீங்கள் ஜெபம்பண்ணவேண்டிய விதமாவது: பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக:
10. உம்முடைய
ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக
11. எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்.
12. எங்கள்
கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்
13. எங்களைச்
சோதனைக்குட்படப்பண்ணாமல்
தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும் ராஜ்யமும், வல்லமையும்,மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே, ஆமென். என்பதே.
லூக்கா
11:2-4, அதற்கு அவர் நீங்கள் ஜெபம்பண்ணும்
போது பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே. உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக உம்முடைய ராஜ்யம் வருவதாக உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக:
3. எங்களுக்கு
வேண்டிய ஆகாரத்தை அன்றன்றும் எங்களுக்குத் தாரும்.
4. எங்கள்
பாவங்களை எங்களுக்கு மன்னியும்: நாங்களும் எங்களிடத்தில் கடன்பட்ட எவனுக்கும் மன்னிக்கிறோமேஎங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல்,
தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும் என்று சொல்லுங்கள் என்றார்
முதல் மூன்று
தேவனுக்கடுத்தவைகள்
1. தேவனுடைய
மகிமை
2. தேவனுடைய
நாமம் பரிசுத்தப்படுவதாக
3. தேவனுடைய
ராஜ்யம் வருவதாக; தேவனுடைய சித்தம் செய்யப்படுவதாக
அடுத்த மூன்றும்
நம்மைக்குறித்தவைகள்
1. எங்களுக்கு
வேண்டிய ஆகாரத்தை தாகும்
2. எங்கள் கடன்களை
எங்களுக்கு மன்னியும்.
3. எங்களைச்
சோதனைக்குட்படப்பண்ணாமல்
<!--[if !supportLists]-->Ø
<!--[endif]-->இந்த
அறுபத்தி ஆறு வார்த்தைகள் கொண்ட ஜெபத்தில், நான். எனது. என்னுடைய எனக்கு என்பதன் எந்த
ஒரு பதமும் இல்லை.
<!--[if !supportLists]-->Ø
<!--[endif]-->இதில்
எப்போதும் நாம். எங்கள் எங்களுக்கு மற்றும் உம்முடைய என்பதான பதங்கள் மாத்திரமே உண்டு.
<!--[if !supportLists]-->Ø
<!--[endif]-->இந்த
ஜெபத்தை நாம் திரும்ப சொல்லவேண்டுமென்று அவர் சொல்லவில்லை காரணம் இந்த பகுதியை குறித்து
இயேசு சொல்லும்போது அவர் தொடங்கியவிதத்தை கவனித்து பாருங்கள். மத்தேயு 6:7, அன்றியும்
நீங்கள் ஜெபம்பண்ணும்போது, அஞ்ஞானிகளைப்போல வீ வார்த்தைகளை அலப்பாதேயுங்கள். அவர்கள்
அதிக வசனிப்பினால் தங்கள் ஜெபம் கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள்
ரோமர்
8:26, அந்தப்படியே ஆவியானவரும்
நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார் நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ள வேண்டியதின்னதென்று
அறியாமலிருக்கிறபடியால் ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக
வேண்டுதல்செய்கிறார்.
ஆவியானவர்
நமக்கு உதவி செய்கிறார்.
1. "எங்கள்"
இது சுயநலமற்ற ஆவியை குறிக்கின்றது
2. "பிதாவே"
இது குடும்பத்தின் ஆவியை குறிக்கின்றது
3. "உம்முடைய
நாமம் பரிசுத்தப்படுவதாக"இது பக்திமரியாதையின் ஆவியை
குறிக்கின்றது
4. "உம்முடைய
ராஜ்யம் வருவதாக" இது விசுவாசத்தின் ஆவியை
குறிக்கின்றது
5. "உம்முடைய
சித்தம் செய்யப்படுவதாக" இது கீழ்படிதலின் ஆவியை
குறிக்கின்றது
6. "எங்களுக்கு
வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்" இது சார்ந்துஇருத்தலின் ஆவியை குறிக்கின்றது
7. "எங்கள்
பாவங்களை எங்களுக்கு மன்னியும்" இது மனத்திரும்புதலின் ஆவியை குறிக்கின்றது
8. "எங்களைச்
சோதனைக்குட்படப்பண்ணாமல்"
இது பாதுகாப்பின் ஆவியை குறிக்கின்றது
9. "ராஜ்யம்
உம்முடையவைகளே” இது திடநம்பிக்கையின் ஆவியை
குறிக்கின்றது
10. "வல்லமை
உம்முடையவைகளே” இது வெற்றிகளிப்பின் ஆவியை
குறிக்கின்றது
11. "மகிமை
என்றென்றைக்கும் உம்முடையவைகளே”இது அதி மகிழ்ச்சியின்
ஆவியை குறிக்கின்றது
இந்த
ஜெபத்தின் மூலமாய் நமக்கு எந்தவகையான ஆசீர்வாதங்கள் உண்டாகிறது என்பதை நாம் காண்போம்.
1. எங்கள்
பிதாவே' இது நமது தந்தை
மகனுக்குரிய உறவைக்காட்டுகிறது.
2. 'உம்முடைய
நாமம் பரிசுத்தப்படுவதாக இது நம்முடைய தெய்வீக
மற்றும் ஆராதிக்கும் உறவைக்காட்டுகிறது.
3. "உம்முடைய
ராஜ்யம் வருவதாக இது நாம் அவருடைய
ராஜ்யத்தின் பிரஜைகள் என்பதான உறவைக்காட்டுகிறது.
4. * உம்முடைய
செய்யப்படுவதாக இது ஒரு முதலாளி
தொழிலாளியின் உறவைக்காட்டுகிறது.
5. எங்களுக்கு
வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும் இது யெகோவா யீரேயின் உறிவினால் நாம்
பயனாளிகளை இருப்பதை காட்டுகிறது.
6. எங்கள்
பாவங்களை எங்களுக்கு மன்னியும் இது ஒரு பாவிக்கும்
ரட்சகருக்கும் உண்டான உறவைக்காட்டுகிறது
7. எங்களைச்
சோதனைக்குட்படப்பண்ணாமல்
தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும் இது நம்முடைய ஆவிக்குரிய
வாழ்க்கையில் தின்தோறும் நம்மை வழிநடத்தும் ஒரு உறவைக்காட்டுகிறது.
|
கடந்த காலம் |
நிகழ்காலம் |
எதிர்காலம் |
|
நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டது |
இந்த நாளுக்குரிய ஆகாரம் |
சோதனைக்குட்படப் பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும் |
8 P's of PRAYER
a) "Our Father who art in heaven," that's God's PATERNITY.
b) "Hallowed be Your name," that's God's PRIORITY.
c) "Your kingdom come," that's God's PROGRAM.
d) "Your will be done," that's God's PURPOSE.
e) "Give us this day our daily bread," that's
God's PROVISION.
f) "Forgive us our debts," that's God's PARDON.
g) "And lead us not into temptation," that's God's
PROTECTION. And,
h) "Yours is the kingdom, the power, and the glory
forever," that's God's PREEMINENCE.
Write a public review