கிறிஸ்துவின் வல்லமையில் பலப்படுதல்
 /   Blog /  Created by Kingslin R Last updated Thu, 01-Jan-1970



கிறிஸ்துவின் வல்லமையில் பலப்படுதல்

எபேசியா 6:10. "கடைசியாக, என் சகோதரரே, கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள்."  

 வீட்டில் அநேக மின்சாதனங்கள் டிவி, ஃபேன், வாஷிங் மெஷின் போன்ற சாதனங்கள் இருந்தாலும் அதற்கு மின் இணைப்பு இல்லையென்றால் அவைகள் இயங்குவதில்லை. 

 அதேபோல் தான் சில நல்ல போதனைகளை கேட்கிறார்கள், வேத அறிவு பெறுகிறார்கள், விசுவாசம் உள்ளது ஆனாலும் அவர்கள் பிரகாசிக்கவில்லை. ஏனென்றால் அவர்களிடம் கிறிஸ்துவினுடைய வல்லமை இல்லை. அவர்கள் தங்களை கர்த்தருக்கு அர்ப்பணித்து இரட்சிப்பின் அனுபவம் பெறவில்லை. 

 மனிதர்கள் பாவமன்னிப்பின் நிச்சயத்தை பெற்று இரட்சிப்பின் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அப்பொழுது தான் இயேசு கிறிஸ்துவின் வல்லமை ஒரு மனிதனுக்குள் செயல்படும். கிறிஸ்துவின் வல்லமையை கொண்டு தான் ஒரு மனிதன் போதனைகளை பின்பற்ற முடியும், நற்கிரியைகளில் பிரகாசிக்க முடியும், பரிசுத்தமான ஒரு வாழ்க்கை வாழ்ந்து காட்ட முடியும். 

 இயேசு கிறிஸ்துவின் வல்லமையில் பலப்படுவோம், கிறிஸ்துவுக்குள் ஜெயம் பெறுவோம். ஆமென். 





  :   30 Likes

  :   173 Views