கிருபை
 /   Blog /  Created by Kingslin R Last updated Thu, 01-Jan-1970



கிருபை

தேவனிடத்தில் இருந்து எதையாகிலும் பெற்றுக் கொள்வதற்கு எந்தவித தகுதியும் நமக்கு இல்லாத போதும், தேவனுடைய அன்பு, இரக்கம், மன்னிப்பு போன்றவைகளை நாம் பெறும்படி தேவன் விரும்புவதே கிருபை ஆகும்.

இயேசு இந்த பூமியில் வந்தபோது கிருபை நிறைந்தவராக வந்தார் (யோவான் 1:14). அவருடைய பரிபூரணத்தினால் நாம் அனைவரும் கிருபையின் மேல் கிருபை பெற்றோம். (யோவான் 1:16). நமக்கு நித்தியஜீவன் என்பது கிருபையினால் வருகிற பரிசு ஆகும்.

"நீங்கள் நியாயப்பிரமாணத்திற்கு கீழ்பட்டிராமல் கிருபைக்கு கீழ்பட்டிருக்கிறபடியால் பாவம் உங்களை மேற்கொள்ள மாட்டாது"(ரோமர் 6:14). பாவம் நம்மை விட வலிமையானது, ஆனால் தேவனுடைய கிருபையை காட்டிலும் வலிமையானது அல்ல.

கதை: ஒரு நாய் கடிக்க முயற்சிக்கும்போது, ஒரு சிங்கம் நம்மோடு இருந்தால் அது நம்மைவிட்டு ஓடி விடும். அது போல தேவ கிருபை நம்மில் இருக்கும் போது பாவம் நம்மை மேற்கொள்ள முடியாது.

கிருபை எப்படிப்பட்டது

"மலைகள் விலகினாலும், பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும், என் கிருபை உன்னைவிட்டு விலகாமலும், என் சமாதானத்தின் உடன்படிக்கை நிலைபெயராமலும் இருக்கும் என்று, உன்மேல் மனதுருகுகிற கர்த்தர் சொல்லுகிறார்" (ஏசாயா 54 : 10).

தாவீது சவுலுக்கு பயந்து ஓடி கொண்டிருந்தான் அப்போது சிலர் அவனோடு இருப்பதாக கூறி வந்தார்கள், ஒரு காலத்தில் அவனுக்கு விரோதமாய் கல்லை தூக்கி கொண்டிருந்தார்கள். வேதம் சொல்கிறது தாவீது கர்த்தருக்குள் தன்னை திடப்படுத்தினான். "ஜீவனைப் பார்க்கிலும் உமது கிருபை நல்லது; என் உதடுகள் உம்மை துதிக்கும்" (சங்கீதம் 63:3).

கிருபையை பெற்று எப்படி இழக்கிறோம்:

"தேவனுடைய கிருபைவரங்களும், அவர்களை அழைத்த அழைப்பும் மாறாதவைகளே" (ரோமர் 11:29). "பொய்யான மாயையைப் பற்றிக் கொள்ளுகிறவர்கள் தங்களுக்கு வரும் கிருபையை போக்கடிக்கிறார்கள்" (யோனா 2 : 8).

"ஒருவனும் தேவனுடைய கிருபையை இழந்து போகாதபடிக்கும் யாதொரு கசப்பான வேர் முளைத்தெழும்பிக் கலக்கமுண்டாக்குகிறதினால் அநேகர் தீட்டுப்படாதபடிக்கும்", "ஒருவனும் வேசி கள்ளனாகவும், ஒருவேளைப் போஜனத்துக்காகத் தன் சேஷ்டபுத்திரபாகத்தை விற்றுப்போட்ட ஏசாவைப்போலச் சீர்கெட்டவனாகவும் இராதபடிக்கும் எச்சரிக்கையாருங்கள்" (எபிரேயர் 12 : 15, 16).

கிருபையை எப்படி பெற்றுக்கொள்வது?

(i) தாழ்த்தும் போது

"பெருமையுள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார். தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்" (1பேதுரு 5:5). மழை தண்ணீர் தாழ்ந்த இடத்தில் தான் போகும் மேடான இடத்திற்கு போகாது. நாம் நம்மை தாழ்மையானவர்களாக கருதுகிறோம் ஆனால் அப்படி இல்லை, அனேகர் அதை அறிவதில்லை தெரியாததை எப்படி கண்டுபிடிப்பது. வேதம் சொல்லுகிறது இயேசுவை நோக்கி பார்க்கவேண்டும்.

கதை:

மாணவர்களின் மதிப்பெண்களை ஒப்பிடுதல்:

குறைந்த மார்க் உள்ளவரை பார்க்கும்போது பெருமை வருகிறது, அதிகமான  மார்க் வாங்கியவரை பார்த்தால் பொறாமை வருகிறது. நாம் பரிபூரணமுள்ள இயேசுவை நோக்கி பார்க்க வேண்டும். அப்பொழுதுதான் நமக்குள் ஒரு தாழ்மை வரும், பிசாசு தாழ்மையானவர்களை பார்த்து பயப்படுகிறான்.

இயேசுவின் தாழ்மை : பிலிப்பியர் 2 : 7 - 11

Ref : யாக்கோபு 4 : 6

(ii) ஸ்தோத்திரத்தினால் கிருபை பெருகும்

"தேவனுடைய மகிமை விளங்குவதற்கேதுவாகக் கிருபையானது அநேகருடைய ஸ்தோத்திரத்தினாலே பெருகும்படிக்கு, இவையெல்லாம் உங்கள்நிமித்தம்   உண்டாயிருக்கிறது" (2 கொரிந்தியர் 4:15).

(iii) காத்திருக்கிறவர்களுக்கு கிருபை 

"தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்கள்மேல் கர்த்தர் பிரியமாயிருக்கிறார்" (சங்கீதம் 147:11). 

"தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்களின் ஆத்துமாக்களை மரணத்திற்கு விலக்கி விடுவிக்கவும்" (சங்கீதம் 33:18).

(i) கர்த்தருக்கு பயப்படுகிறவர்கள்

"பூமிக்கு வானம் எவ்வளவு உயரமாயிருக்கிறதோ, அவருக்கு பயப்படுகிறவர்கள்மேல் அவருடைய கிருபையும் அவ்வளவு பெரிதாயிருக்கிறது" (சங்கீதம் 103:11).

"கர்த்தருடைய கிருபையோ அவருக்குப் பயந்தவர்கள்மேலும், அவருடைய நீதி அவர் பிள்ளைகளுடைய பிள்ளைகள் மேலும் அநாதியாய் என்றென்றைக்கும் உள்ளது" (சங்கீதம் 103:17).

வேதத்தில் யாருக்கு கிருபை கிடைத்தது.

நோவா : ஆதியாகமம் 6:8

(i) நோவா எச்சரிப்பு பெற்றான்   (எபிரெயர் 11)

(ii) கர்த்தர் ஆலோசனை கொடுத்தார் (ஆதியாகமம் 6:14, சங்கீதம் 16:7, சங்கீதம் 139:17)

(iii) கீழ்படிதல் (ஆதியாகமம் 7:5)

(iv) நோவா போஷிக்கபட்டான்

1 வருடம் 1 மாதம் 

(v) பாதுகாத்தார்

(vi) ஆசிர்வதித்தார் (ஆதியாகமம் 9:1)

யோசேப்பு 

(i)தேவனுக்கு  விரோதமாய் பாவம் செய்யவில்லை (ஆதியாகமம் 39:9)

(ii)யோசேப்பு செய்ததை கர்த்தர் வாய்க்கபண்ணினார் (ஆதியாகமம் 39:23)

(iii) யோசேப்பால் மன்னிக்க முடிந்தது.




  :   14 Likes

  :   133 Views