ஓசன்னா
 /   Blog /  Created by Kingslin R Last updated Thu, 01-Jan-1970



ஓசன்னா

ஆண்டவரின் வெற்றி பவனி இங்கு சொல்லப்பட்டுள்ளது.

சரித்திரம்:

எகிப்திலிருந்து மோசேயினால் வழிநடத்தப்பட்டு கொண்டு வரப்படுகிறார்கள். பின்பு நியாதிபதிகளால் வழிநடத்தப்படுகிறார்கள். பின்பு தீர்க்கதரிசிகளால் நடத்தப்படுகிறார்கள் அதன் பின்பு எங்களுக்கு ராஜா வேண்டும் என்றார்கள் சவுல், தாவீது, சாலோமோன் அதன் பிறகு தேசம் இரண்டாக பிரிந்து அவர்கள் செல்வ செழிப்பில் இருந்தார்கள். சாலமோனால் அந்நிய தெய்வங்கள் இஸ்ரவேலுக்கு வர காரணமாய் இருந்தான். அதன் பிறகு தீர்க்கதரிசியின் மூலம் எச்சரிப்பு பெறுகிறார்கள்.யாரும் கேட்கவில்லை.

மொத்த தேசமும் ரோமாபுரியின் கட்டுபாட்டில் வந்து விடுகிறது. இவர்கள் ஆட்சியின் கீழ் இருக்கும் போது இஸ்ரவேல் மக்கள் நம்மை மீட்க ஒரு இரட்சகர் வரமாட்டாரா என்று ஏங்கி கொண்டிருந்தார்கள். அந்த காலகட்டத்தில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வருகிறார் நான் தேவ குமாரன் என்று சொல்லி கொண்டு வருகிறார். அநேக அற்புதம் செய்கிறார். மரித்த லாசருவை எழுப்பினார் யோவான் 12 : 17 மக்கள் அவர் மேல் நம்பிக்கையாயிருந்தார்கள்.

இவர் நம்மை ரோம அரசிடம் இருந்து விடுவித்து யூத ராஜ்ஜியம் வரும் என்று நம்பிக்கை வைக்கிறார்கள்.(மாற்கு 11 : 10) மத்தேயு 21 : 1 - 19 ஒலிவ மலையில் இருந்து எருசலேமுக்கு வருகிறார். அப்பொழுது கழுதையை கொண்டு வர சொல்லுகிறார்.

ஏன் கழுதை:

வெற்றி பவனி வரவேண்டும் என்றால் குதிரையில் தான் வருவார்கள். குதிரை வலிமை மிக்கது, வெற்றிக்கான ஒரு அடையாளமாக பார்க்கப்படுகிறது. ஆனால் இவர் கழுதையின் மேல் வருகிறார். சகரியா தீர்க்க தரிசியினால் தீர்க்க தரிசனம் நிறைவேறும் படி(சகரியா 9 : 9)

இயேசு வெற்றி பவனி வருகிறார். என்ன மாதிரியான வெற்றி பவனி என்றால் ‘மக்களை இரட்சிப்பதற்கான வெற்றி பவனி” சகரியா 9 : 9 ல் சொல்லப்படுகிறது இரட்சிக்க வருகிறார்.  இன்றும் ஆண்டவர் கழுதையை போன்று சமுதாயத்தில் நலிந்தவர்களை தேர்ந்தெடுக்கிறார்.

துணிகளை ரோட்டில் போட்டு குருத்தோலை காட்டுகிறார் வெற்றிக்காக காட்டப்படுகிறது (குருத்தோலை). இப்பொழுது தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா, ஓசன்னால் என்றால் எங்களை இரட்சியும்   (சங்கீதம் 118 : 25)

ஆண்டவர் சிலுவை மரணத்தின் மூலம் தேவனுடைய அரசாட்சி அமையும் என்பது அவருக்கு தெரியும். தீர்க்க தரிசனம் நிறைவேறும் படி  ஆண்டவரே எங்களை இரட்சியும் என்று அவர்கள் ஆர்ப்பரிக்கிறார்கள். மக்கள் அவரை ரோமாபுரியின் ஆட்சியில் இருந்து இரட்சிக்க வந்த இராஜா என்று கருதி ஆர்ப்பரிக்கிறார்கள்.

லூக்கா 19 : 39, 40 யோவான் 12 : 19 வெளி 7 : 9, 10 அன்று அவர்கள் மாம்ச பிரகாரமான இரட்சிப்புக்கு குருத்தோலை பிடித்தார்கள். இன்று நாம் பரலோகத்தில் சிங்காசனத்தில் வீற்றிருக்கும் இராஜாதி இராஜாவுக்கு குருத்தோலை ஏந்தி அவரை துதிப்போம். அதை நினைவில் வைத்து இந்த குருத்தோலை நாளை அனுசரிப்போம்.





  :   19 Likes

  :   62 Views