எல்லாம் மாயை
 /   Blog /  Created by Kingslin R Last updated Thu, 01-Jan-1970



எல்லாம் மாயை

பிரசங்கி 2:17. எல்லாம் மாயையும் மனதுக்குச் சஞ்சலமுமாயிருக்கிறது.

 உலகத்தில் எல்லா சந்தோஷத்தையும் அனுபவித்த சாலமோன் ஆல் எழுதப்பட்டது.

 சிலர் அறிவில் உயர்ந்தவர்களாக இருப்பார்கள் அதனால் நடத்தையில் மோசமாக இருப்பார்கள்.சிலர் அழகாக இருப்பார்கள் ஆனால் உள்ளத்தில் அழகு இல்லாதவர்களாக இருப்பார்கள்.சிலர் வாழ்க்கையில் ஆடம்பரமாக இருப்பார்கள் ஆனால் பண்புகளில் ஏழைகளாக இருக்கிறார்கள். சிலர் செல்வ வளத்தோடு இருப்பார்கள் ஆனால் அவர்களுக்குள் சந்தோஷம் இருக்காது. எல்லாம் மாயை ஆகவே இருக்கிறது. 

 ஒரு மனிதன் தனது வாழ்க்கையில் எல்லாம் இருந்தாலும், தேவனோடு ஒரு ஐக்கியம் இல்லையென்றால், இறுதியாக இந்த சாலமோன் போல எல்லாம் மாயையும் , மனதுக்கு சஞ்சலமும் மாய் இருக்கிறது என்றுதான் சொல்ல முடியும். தேவ ஐக்கியத்தில் இல்லாதவர்கள், எல்லாம் இருந்தாலும் வெறுமையே உணருகிறார்கள். 

எவ்வளவுதான் சாலமோன் போல அனுபவிக்க இருந்தாலும், உள்ளத்தில் தாவீதைப் போல தேவனோடு இருந்தால்தான் வாழ்க்கை அர்த்தமுள்ளதாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும். 

 கர்த்தருடைய பிள்ளைகள் நாம் தேவ ஐக்கியத்தில் ஒவ்வொரு நாளும் இருந்து கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்தரிப்பேன் அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும் என்று சொல்லி அவருக்கு நன்றி சொல்வோம். ஆமென். 





  :   33 Likes

  :   118 Views