எப்பொழுதும் கர்த்தரை சார்ந்து இருப்பது
 /   Blog /  Created by Kingslin R Last updated Thu, 01-Jan-1970



எப்பொழுதும் கர்த்தரை சார்ந்து இருப்பது

 சங்கீதம் 16:8.   "கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்; அவர் என் வலதுபாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை."  

  சோதனைக் காலங்களில் கர்த்தரை எல்லோரும் தேடுவார்கள் இது இயல்பு. அவர் துக்கங்களிலும், கஷ்டங்களிலும் இருந்து மட்டும் விடுவிக்கிற ஆண்டவர் அல்ல. எல்லா சூழ்நிலையிலும் நம்மை வழிநடத்துகிற ஆண்டவர். சந்தோஷமான காலங்களை உலகத்தோடும், துக்கமான காலங்களை கர்த்தரோடு பகிர்ந்து கொள்வது உண்மையான தெய்வ பக்தி அல்ல. சந்தோஷமான நேரங்களிலும் தேவனோடு நம்முடைய சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ளும் போது சந்தோஷம் மிகவும் பெருகும். 

 தாவீதுக்கு எல்லா சூழ்நிலைகளிலும் கர்த்தரை தனக்கு முன்பாக வைக்கும் பழக்கம் உள்ளவராக இருந்தார். யோபு தன்னுடைய நல்ல நாட்களில் தேவனோடு தேவ பக்தியுடன் வாழ்ந்தான். எனவே சோதனைகள் பல வந்தபோதும் அவன் தேவபக்தி சார்ந்து ஒரு புதிய வாழ்வு பெற முடிந்தது. 

 நம்முடைய வாழ்வில் எல்லா சூழ்நிலைகளிலும் கர்த்தரை நமக்கு முன்பாக வைத்து நாம் எல்லா காரியங்களையும் செய்யும் பொழுது, நாமும் நம்முடைய காரியங்களும்  அசைக்கப்படுவதில்லை. ஆமென். 





  :   31 Likes

  :   108 Views