உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக
 /   Blog /  Created by Kingslin R Last updated Thu, 01-Jan-1970



உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக

"உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக; கர்த்தர் தம்முடைய நாமத்தை வீணிலே வழங்குகிறவனைத் தண்டியாமல் விடார்"(யாத்திராகமம் 20:7).

"கர்த்தர் ஒரு மேகத்தில் இறங்கி, அங்கே அவன் அருகே நின்று, கர்த்தருடைய நாமத்தைக் கூறினார்." "கர்த்தர் அவனுக்கு முன்பாகக் கடந்துபோகிறபோது, அவர்: கர்த்தர், கர்த்தர்; இரக்கமும், கிருபையும், நீடிய சாந்தமும், மகா தயையும், சத்தியமுமுள்ள தேவன்." "ஆயிரம் தலைமுறைகளுக்கு இரக்கத்தைக் காக்கிறவர்; அக்கிரமத்தையும் மீறுதலையும் பாவத்தையும் மன்னிக்கிறவர்; குற்றவாளியைக் குற்றமற்றவனாக விடாமல், பிதாக்கள் செய்த அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்திலும், பிள்ளைகளுடைய பிள்ளைகளிடத்திலும் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவர் என்று கூறினார்."(யாத்திராகமம் 34:5-7).

"கர்த்தாவே, உம்மைத் தேடுகிறவர்களை நீர் கைவிடுகிறதில்லை; ஆதலால், உமது நாமத்தை அறிந்தவர்கள் உம்மை நம்பியிருப்பார்கள்." (சங்கீதம் 9:10)

"நான் கர்த்தரை அவருடைய நீதியின்படி துதித்து, உன்னதமான கர்த்தருடைய நாமத்தைக் கீர்த்தனம் பண்ணுவேன்." (சங்கீதம் 7:17)

"அப்பொழுது ஜாதிகள் கர்த்தருடைய நாமத்துக்கும் பூமியிலுள்ள ராஜாக்களெல்லாரும் உம்முடைய மகிமைக்கும் பயப்படுவார்கள்." (சங்கீதம் 102:17)

"அல்லேலுூயா, கர்த்தருடைய ஊழியக்காரரே, துதியுங்கள்; கர்த்தருடைய நாமத்தைத் துதியுங்கள்." "இதுமுதல் என்றென்றைக்கும் கர்த்தருடைய நாமம் ஸ்தோத்திரிக்கப்படக்கடவது." "சூரியன் உதிக்கும் திசைதொடங்கி, அஸ்தமிக்கும் திசைமட்டும் கர்த்தருடைய நாமம் துதிக்கப்படுவதாக." (சங்கீதம் 113:1-3).

"சிலர் இரதங்களைக்குறித்தும், சிலர் குதிரைகளைக் குறித்தும் மேன்மைபாராட்டுகிறார்கள்; நாங்களோ எங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைக்குறித்தே மேன்மைபாராட்டுவோம்." (சங்கீதம் 20:7).

"நீர் உலகத்தில் தெரிந்தெடுத்து எனக்குத் தந்த மனுஷருக்கு உம்முடைய நாமத்தை வெளிப்படுத்தினேன். அவர்கள் உம்முடையவர்களாயிருந்தார்கள், அவர்களை எனக்குத் தந்தீர், அவர்கள் உம்முடைய வசனத்தைக் கைக்கொண்டிருக்கிறார்கள்" (யோவான் 17:6).

வேதாகமத்தில் தேவனுடைய நாமங்கள் மற்றும் அதின் அர்த்தங்கள்

1 எல்,ஏலோகே (EL, ELOAH)

தேவன் வலிமைமிக்கவர், பலமுள்ளவர், முக்கியத்துவம் வாய்ந்தவர் (நெகேமியா 9:17, சங்கீதம் 139:19) சொற்பிறப்பியல் வாயிலாக, "எல் என்பதற்கு வல்லமை" இவ்விதமாக வசனத்தில் "உங்களுக்குப் பொல்லாப்புச் செய்ய எனக்கு வல்லமை உண்டு(ஆதியாகமம் 31:29) என கொடுக்கப்பட்டுள்ளது. "எல்" என்கிற வார்த்தை வேறு சில பண்புகளோடு தொடர்புடையது. அவை "நேர்மை",(எண்ணாகமம் 23:19), "பொறாமை" (உபாகமம் 5:9), மற்றும் "இரக்கம்" (நெகேமியா 9:31). ஆனால் இந்த வார்த்தையின் மூலம் "வலிமை" என்கிறதான கருத்து எஞ்சியுள்ளது.

2. ஏலோகீம் (ELOHIM) : தேவன் "சிருஷ்டிகர்த்தா, வலிமைமிக்கவர் மற்றும் பலமுள்ளவர்" (ஆதியாகமம் 17:7, எரேமியா 31:33).  பன்மையில் "ஏலோகே" என்பது திரித்துவத்தின் கோட்பாட்டிற்கு இணங்குகிறது. வேதாகமத்தின் முதல் வரிகளில் தேவனுடைய வல்லமையின் உயர்ந்த தன்மை (ஏலோகீம்) தேவன் உலகத்தை வார்த்தையின் மூலம் உருவாக்கினார் என்பது தெளிவாக தெரிகிறது (ஆதியாகமம் 1:1).

3. எல்ஷடாய் (EL SHADDAI) "சர்வ வல்லமையுள்ள தேவன்"(ஆதியாகமம் 17:1, ஆதியாகமம் 28:3, ஆதியாகமம் 35:11). "யாக்கோபின் வல்லவர்" (ஆதியாகமம் 49:24: சங்கீதம் 132:2,5) முழுவதுமாக தேவனுடைய உச்சக்கட்ட வல்லமையைப் பற்றிக்  கூறுகிறது.

4. அடோனாய் (ADONAI): "ஆண்டவர்" (Lord) (ஆதியாகமம் 15:2; நியாயாதிபதிகள் 6:15) யாவேக்கு (YHWH) பதிலாக  உபயோகப்படுத்தப்பட்டதுஏனென்றால் பாவமுள்ள மனிதர்கள் இந்த வார்த்தையை உச்சரிப்பார்கள் என்று யூதர்கள் மிகவும் பயந்தபடியால் இவ்வாறு நினைத்தனர். பழைய ஏற்பாட்டில், தேவன் தம்முடைய ஜனங்களிடத்தில் பேசும்போது "யாவே" என்கிற நாமம் அதிகம் உபயோகப்படுத்தப்பட்டது. அதேசமயம், தேவன் புறஜாதிகளிடத்தில் பேசும்போது "அடோனாய்" என்கிற நாமம் அதிகம் உபயோகப்படுத்தப்பட்டது.

5. YHWH / யாவே / யேகோவா (YHWH / YAHWEH / JEHOVAH): ''ஆண்டவர்" (உபாகமம் 6:4: தானியேல் 9:14)- கண்டிப்பாக சொன்னால். ஒரே முறையான நாமம். ஆங்கில வேதாகமத்தில் "LORD" க்கும்(all capitals) அடோனாய் "Lord" க்கும் உள்ள வித்தியாசத்தை காணலாம். இந்த நாமத்திற்கான வெளிப்பாடு  முதலில் மோசேவுக்கு கொடுக்கப்பட்டது. "இருக்கிறவராக இருக்கிறேன்" (யாத்திராகமம் 3:14) இந்த நாமம் அடுத்தபடியாக அவருடைய பிரசன்னத்தைக்  குறிக்கிறது. யாவே இருக்கிறவரும், அனுகத்தக்கவரும்,  நோக்கி விடுவிக்கும்படி தம்மை கூப்பிடுகிறவர்களுக்கு  சமீபமாகவும் இருக்கிறார்(சங்கீதம் 107:13), "மன்னித்தல்"(சங்கீதம் 25:11) மற்றும் "வழிநடத்தல்" (சங்கீதம் 31.3).

6.யாவே - யீரே (YAHWEH-JIREH) : "கர்த்தருடைய பர்வதத்திலே பார்த்துக்கொள்ளப்படும்" (ஆதியாகமம் 22:14): பலியிட, ஈசாக்குக்கு பதிலாக தேவன் கிடாரியை கொடுத்ததினால், ஆபிரகாமால் இந்த பெயர் நினைவாக்கப்பட்டது.

7. யாவே - ரப்பா (YAHWEH- RAPHA) : "சுகமளிக்கும் தேவன்" (யாத்திராகமம் 15:26) - "நானே உன் பரிகாரியாகிய கர்த்தர்" சரீரத்திலும், ஆத்துமாவிலும் உள்ள வியாதியிலிருந்துசுகப்படுத்துதல், காப்பாற்றுதல் மற்றும் ஆத்துமாவில் உள்ள  அக்கிரமங்களை மன்னிதல் ஆகியவற்றைக் குறிக்கிறது.

8. யாவே - நிசி (YAHWEH-NISSI) : "கர்த்தரின் யுத்தம்" (யாத்திராகமம் 17:15). கர்த்தரின் யுத்தம் என்பது அணிகள் திரளுகின்ற ஒரு இடம் என்று புரிந்துக்கொள்ள வேண்டும். இந்த நாமம் வனாந்திரத்தில் நடந்த அமலேக்கின் யுத்தத்தின் வெற்றிக்கான நாமமாக நினைவுகூரும்பொருட்டு வைக்கப்பட்டது.

9.யாவே - மெக்கதேஷ் (YAHWEH-M'KADDESH): "நான் உங்களைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தர்" (லேவியராகமம் 20:8: எசேக்கியல் 37:28). நியாயப்பிரமாணம் அல்ல, தேவன் மாத்திரமே தம்முடைய ஜனங்களை கழுவி, அவர்களை பரிசுத்தப்படுத்த முடியும் என்று தெளிவாக கூறியிருக்கிறார்.

10. யாவே - ஷாலோம் (YAHWEH-SHALOM) : "சமாதானத்தின் தேவன்"(நியாயாதிபதிகள் 6:24), கிதியோன் கர்த்தருடைய தூதனை முகமுகமாய்க் கண்டதினால், தான் மறித்து போவேன் என்று அவன் நினைத்த போது கர்த்தருடைய தூதன் நீ சாவதில்லை என்று சொன்ன பின்பு கிதியோன் ஒரு பலிபீடத்தைக் கட்டினான்.

11. யாவே - ஏலோகிம் (YAHWEH-ELOHIM): "கர்த்தராகிய தேவன்" (சங்கீதம் 2:4, 59:5), 'YHWH' என்பது தேவனுடைய தனித்துவமான மற்றும் பொதுவான பெயரின் சேர்க்கையாகும். இது அவர் ஒருவரே தேவாதி தேவன் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது.

12. யாவே -சிட்கேனு  (YAHWEH-TSIDKENU) - "நீதியாயிருக்கிற கர்த்தர்" (எரேமியா 33:16) "யாவே - மெக்காதேஷ்" போல. தேவன் மாத்திரமே, நமக்காக பாவமாக்கிய தம்முடைய குமாரன் இயேசு கிறிஸ்துவின் மூலம் நமக்கு நீதியை தரிப்பிக்க முடியும். "நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு,  பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்" (2 கொரிந்தியர் 5:21).

13. யாவே - ரோஹி (YAHWEH-ROHI) : "கர்த்தர் என் மேய்ப்பரராயிருக்கிறார்" (சங்கீதம் 23:1)After David pondered his relationship as a shepherd to his sheep, he realized that was exactly the relationship God had with him, and so he declares, "யாவே - ரோஹி என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன்.” (Psalm 23:1).

14. யாவே - ஷம்மா (YAHWEH-SHAMMAH): "ஆண்டவர் என் கூடவே இருப்பீர்" (எசேக்கியல் 48:35) - இந்த நாமம் எருசலேம் தேவாலயத்திலிருந்து ஒரு முறை புறப்பட்டு போன தேவனுடைய மகிமை மறுபடியுமாக வந்தது என்பதை குறிப்பிடுகிறது (எசேக்கியல் 8-11, எசேக்கியல் 44:1-4).

15. யாவே - சபோத் (YAHWEH-SABAOTH): "சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார்" (ஏசாயா 1:24; சங்கீதம் 46:7). சேனைகள் என்பது ஒரு மாபெரும் கூட்டத்தைக் குறிக்கிறது (தேவதூதர்கள் மற்றும் மனிதர்கள்). வானத்திற்கும், பூமிக்கும் அதின் நிறைவுகளுக்கும், யூதர்களுக்கும் புறஜாதிகளுக்கும். ஏழைக்கும் பணக்காராருக்கும், எஜமானனுக்கும் அடிமையானவனுக்கும் அவர் சேனைகளின் கர்த்தராயிருக்கிறார். இந்த நாமம் ஒரு உணர்ச்சிபூர்வமாகவும், மாட்சிமை நிறைந்தவராகவும், வல்லமையுள்ளவராகவும், அதிகாரமுடையவராகவும் மற்றும் அவர் தீர்மானித்தபடியே அதை செய்து முடிப்பவராகவுமே இருக்கிறார் என்பதைக் காட்டுகிறது.

16. எல் - ஏலியோன் (EL ELYON) : "உன்னதமான தேவன்" (2 26:19), derived from the Hebrew root for "go up" or "ascend," so the implication is of that which is the very highest. El Elyon denotes exaltation and speaks of absolute right to lordship.

17.எல் - ரோயீ (EL ROI): "காண்கிற தேவன்" (ஆதியாகமம் 16:13), சாராளினால் துரத்தி அடிக்கப்பட்ட போது வனாந்திரத்தில் நம்பிக்கையற்ற சூழ்நிலையில் இந்த நாமத்தை தேவனுக்கு சுமத்தினாள். (ஆதியாகமம் 16:1-14). ஆகார் தேவனுடைய தூதனை கண்ட போது தேவனே அவளுக்கு தரிசனமானார் என்று அறிந்தாள் மற்றும் அவளுடைய துயரத்தில் "எல் ரோயீ " அவளை கண்டார் என்றும் இந்த தேவனே என்னை காண்கிற ஜீவனுள்ள தேவன் என்று சாட்சிக்கொடுத்தாள்.

18. எல் - ஓலாம்  (EL-OLAM) : "Everlasting God" (Psalm 90:1- 3) God's nature is without beginning or end, free from all constraints of time, and He contains within Himself the very cause of time itself. "From everlasting to everlasting. You are God”

19. எல் - கிபோர் (EL-GIBHOR): "வல்லமையுள்ள தேவன்" (ஏசாயா 9:6), ஏசாயாவின் தீர்க்கதரிசனப் பகுதியில் மேசியாவாகிய இயேசு கிறிஸ்துவை விவரிக்கிறது. மேசியாவும் மகாதேவனுமாகிய சர்வவல்லமையுள்ள தேவன் அவருடைய எதிரிகளை அழித்து இருப்புக்கோலால் அவர்களை அரசாளுவார். (வெளிப்படுத்தின விசேஷம் 19:15). கர்த்தர் பரிசுத்தமுள்ளவராயிருக்கிறபடியால் நாமும் பரிசுத்தமாய் வாழ வேண்டும் அப்போஸ்தலனாகிய பேதுரு கட்டளையிடுகிறார் (1பேதுரு 1 : 13-21).

ஆபிரகாம் தன் மனைவியை குறித்து இரண்டு முறை பொய் சொல்லுகிறான் (ஆதியாகமம் 12 & 20, ஆதியாகமம் 20:11), ஈசாக்கும் தன் மனைவியை குறித்து பொய் சொன்னான் (ஆதியாகமம் 26). யாக்கோபும் தன் சொந்த சகோதரனை ஏமாற்றி தன் தகப்பனிடம் போய் சொன்னான், ஏனென்றால் அவன் தாய் ரெபெக்காள் அப்படி செய்ய சொன்னாள் (ஆதியாகமம் 27), ஆதியாகமம் 32 ஆம் அதிகாரத்தில் யாக்கோபு, ஏமாற்றுபவன் என்கிற அர்த்தம் மாறி மற்றவர்களை ஆசீர்வதிப்பவன் என்கிற பெயர் கொண்டவனாக மாற்றப்படுகிறான். தேவனோடு அவன் கொண்ட ஒரு அனுபவமே அப்படி அவனை மாற்றியது.

"பின்பு கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி: இஸ்ரவேல் புத்திரரின் கண்களுக்கு முன்பாக என்னைப் பரிசுத்தம் பண்ணும்படி, நீங்கள் என்னை விசுவாசியாமற் போனபடியினால், இந்தச் சபையாருக்கு நான் கொடுத்த தேசத்திற்குள் அவர்களைக் கொண்டுபோவதில்லை என்றார்" (எண்ணாகமம் 20: 12).

தேவனுடைய நாமத்தை எவ்வாறு பரிசுத்தமாக்குவீர்கள்?

"கர்த்தராகிய தேவனை உங்கள் இருதயங்களில் பரிசுத்தம்பண்ணுங்கள்; உங்களிலிருக்கிற நம்பிக்கையைக்குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் உத்தரவுசொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள்" (1 பேதுரு 3:15).

1. தேவன் இருக்கிறார் என்பதை நீங்கள் விசுவாசிக்க வேண்டும்:

"விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்க வேண்டும்" (எபிரேயர் 11:6).

2. அவருடைய பிரசன்னத்தை உணர்ந்து வாழ வேண்டும்:

"கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்; அவர் என் வலதுபாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை" (சங்கீதம் 16:8).

3. உங்களுடைய வாழ்க்கையில் ஒவ்வொரு செயல்களும் அவருடைய நாமத்தை மகிமைப்படுத்துவதாக இருக்க வேண்டும்:

"ஆகையால் நீங்கள் புசித்தாலும், குடித்தாலும், எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள்" (1 கொரிந்தியர் 10:31).

"வார்த்தையினாலாவது கிரியையினாலாவது, நீங்கள் எதைச் செய்தாலும், அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து, அவர் முன்னிலையாகப் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள்" (கொலோசெயர் 3:17).

"இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது" (மத்தேயு 5:16).




  :   24 Likes

  :   123 Views