உன்னதப்பாட்டு 8 : 9
 /   Blog /  Created by Kingslin R Last updated Thu, 01-Jan-1970



உன்னதப்பாட்டு 8 : 9

"அவள் ஒரு மதிலானால், அதின்மேல் வெள்ளிக்கோட்டையைக் கட்டுவோம்; அவள் கதவானால், கேதுருப்பலகைகளை அதற்கு இணைப்போம்.”

மதில் மற்றும் வாசல் என்பது இரட்சிப்பையும், துதியையும், இதயங்களை கிறிஸ்துவுக்கு நேராக திறப்புவதையும், உயர்த்துவதையும் குறிக்கிறது. ஏசாயா தீர்க்கதரிசியின் மூலம் ஆண்டவர் நமக்கு இதனுடைய ஆவிக்குரிய அர்த்தத்தை சொல்லிக் கொடுக்கிறார். மதில் இரட்சிப்பு எனவும், வாசல் துதி எனவும் ஆண்டவர் சொல்லுகிறார். ஏசாயா 60 : 18 "உன் மதில்களை இரட்சிப்பென்றும், உன்வாசல்களைத் துதியென்றும் சொல்லுவாய்.” மேலும் (சங். 24 : 7, 9) இல் "வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்; அநாதி கதவுகளே, உயருங்கள்; மகிமையின் ராஜா உட்பிரவேசிப்பார்." என்று கூறப்பட்டிருக்கிறது.

இவர்களுக்குறிய இரட்சிப்பையும் துதியையும் பலப்படுத்த வேண்டும் என்று பேசப்படுகிறது. ஏனென்றால்? ஒருவன் முடிவு பரிந்தும் இரட்சிப்பை காத்துக் கொள்ள வேண்டும் (மத்தேயு 10: 22)  என்று வேதம் கூறுகிறது. அதேபோல் ஏசாயா 43:21  ல் "இந்த ஜனத்தை எனக்கென்று ஏற்படுத்தினேன்; இவர்கள் என் துதியை சொல்லிவருவார்கள்.”  என்றும் ஆண்டவர் தனது ஜனத்தை குறித்து வேதத்திலே சாட்சி கூறியிருக்கிறார். அப்படியானால் கடைசி வரைக்கும் இரட்சிப்பைக் காத்து,  துதியை சொல்லி வர வேண்டும் அதற்காக அவர்கள் அதிலே பலப்படுத்த பட வேண்டும்.

இந்த வசனத்தில் மணவாட்டி சபை சொல்லுகிறார்கள், அவள் ஒரு மதிலானால் அதின் மேல் வெள்ளிக்கோட்டையை கட்டுவோம் என்பதாக சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது அவர்கள்  முழுமையாக இரட்சிப்பை அடைந்திருந்தால் வெள்ளிக்கோட்டையை கட்டுவோம் என்பதாக கூறுகிறார்கள்.  வெள்ளி என்பது கர்த்தருடைய வசனத்தை குறிக்கும் (சங்கீதம் 12: 6). வசனம் என்பது சத்தியம். அதாவது சத்தியத்திலே அவர்களை பலப்பட செய்திருப்போம் என்பதாக கூறுகிறார்கள்.மேலும் கர்த்தர் ஏற்படுத்தின ஜனங்கள் துதிகளை சொல்லி வருவது போல் இவர்கள் சொல்லி இருந்தால், நீதியில் வளர்ந்து நீதிமான்களாக இருந்திருப்பார்கள் என்று கூறுகிறார்கள். இந்த வசனத்தில் கேதுரு பலகை நீதிமான்களோடு ஒப்பிடப்படுகிறது (சங்கீதம் 92: 12). சபை கிறிஸ்துவினால் இரட்சிப்பை பெற்று நீதிமான்கள் ஆக்கப்படுகிறார்கள் என்று வேதம் குறிப்பிடுகிறது (ரோமர் 3:24).

நீங்கள் கிறிஸ்துவினால் இரட்சிப்பைப் பெற்றுக்கொள்கிறீர்கள் என்று விசுவாசிக்கிறீர்களா?

குறிப்பு வசனம்:  வெளி 21 : 12-19, ஏசா 58 : 12, ஏசா 61 : 4





  :   32 Likes

  :   96 Views