உன்னதப்பாட்டு 6 : 2
 /   Blog /  Created by Kingslin R Last updated Thu, 01-Jan-1970



உன்னதப்பாட்டு 6 : 2

"தோட்டங்களில் மேயவும், லீலிபுஷ்பங்களைக் கொய்யவும், என் நேசர் தமது தோட்டத்துக்கும் கந்தவர்க்கப் பாத்திகளுக்கும் போனார்.”

இந்த வசனத்தில் தமது தோட்டம் என்பது, பரதீசியில் (சபை எடுத்துக்கொள்ளப்பட)  இருக்கும் மணவாட்டியையுடைய இடம். தேவனுடைய ராஜ்யத்தில் ஏதேன் என்கிற தோற்றம் செயல்படுவதாக (ஏசாயா 51:3, எசேக்கியல் 28:13) கூறப்படுகிறது.

தோட்டங்களில் மேயவும், லீலிபுஷ்பங்களைக் கொய்யவும் அவரை இனி நாம் தேடிக் கண்டுபிடிக்க முடியாதென்று,  கைவிடபட்டசபை உணர்ந்து சொல்லுகிறதாவது,  இயேசு கிறிஸ்து தமது ஜனங்களை மேய்த்து, அவர்களை எல்லாம் வழிநடத்துவதை வெளி 7 : 17 -ல் பார்க்கிறோம். அவர் தனது மணவாட்டியாகிய சபையைக் கூட்டிக்கொண்டு நிரந்தரமாக பரத்தில் இருக்கும் தோட்டத்திற்குச் சென்றுவிட்டார். அங்கே தனது மணவாட்டியாகிய சபையோடு உலாவிக் கொண்டு இருக்கிறார். இப்பொழுது அவர்  துதிகளின் மத்தியில் வாசம் செய்து கொண்டிருக்கிறார். அவர் இனி பூமிக்கு சபையைத் தேடி வரமாட்டார்.ஆளுகை செய்யவே வருவார்  என்பதை கைவிடப்பட்ட சபை உணர்ந்து இதைச் சொல்கிறது. மணவாளனாகிய இயேசு கிறிஸ்து எடுத்துக் கொள்ளப்பட்ட தனது சபையோடு இருப்பதை தான்,  கிறிஸ்து தோட்டங்களில் மேயவும், லீலிபுஷ்பங்களைக் கொய்யவும் என்று கவிதை நடையிலே இங்கே கூறப்பட்டிருக்கிறது.

என் நேசர் தமது தோட்டத்துக்கும் கந்தவர்க்கப் பாத்திகளுக்கும் போனார். கந்தவர்க்கங்களைக் கொண்டு வாசனை தைலங்களை தயார் செய்வார்கள். யாத் 30 : 34 -இல்   சுத்த வெள்ளைப்போளமும், குங்கிலியமும், அல்பான் பிசினுமாகிய கந்தவர்க்கம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்த கந்தவர்க்கங்களைக் கொண்டு பரிசுத்த தூபவர்க்கம் செய்யப்பட வேண்டுமென்று கர்த்தர் கட்டளையிட்டதை யாத் 30 : 35,36 இல் பார்க்க முடிகிறது. இப்பொழுது கிறிஸ்துவின் பிரசனைத்தையும், பரிசுத்தத்தையும் முழுமையாக  பெற்று இருக்கிற சபையின் மத்தில் கிறிஸ்து இருப்பதை இந்த வசனம் குறிப்பிடுகிறது. மேலும் பரிசுத்தவான்களுடைய ஜெப  தூபங்கள் கந்தவர்க்கப் பாத்திகளுக்கும் ஒப்பிடப்படுகிறது.

அன்பானவர்களே! இன்று வாழ்ந்து கொண்டிருக்கிற நாம், இதை உணர்ந்து செயல்பட அழைக்கப்படுகிறோம். 

இந்தப் பாக்கியம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளதா?

குறிப்பு வசனம்: பிரச 2: 5, செப் 3: 17, வெளி 7: 17




  :   17 Likes

  :   99 Views