உன்னதப்பாட்டு 4 : 16
 /   Blog /  Created by Kingslin R Last updated Thu, 01-Jan-1970



உன்னதப்பாட்டு 4 : 16

"வாடையே! எழும்பு; தென்றலே! வா  கந்தப்பிசின்கள் வடிய என் தோட்டத்தில் வீசு; என் நேசர் தம்முடைய தோட்டத்துக்கு வந்து, தமது அருமையான கனிகளைப் புசிப்பாராக.”

முந்தைய வசனங்களில் இயேசு கிறிஸ்து சபையைப் பாதுகாத்து, போஷித்ததைப் பார்த்தோம். இயேசு கிறிஸ்து சபையின் மணவாளனாக இருந்தாலும். கர்த்தராகிய பரிசுத்த ஆவியானவர் இன்று  நமக்குள் வாசம் செய்து நம்மை எல்லா விதத்திலும் நடத்தி வருகிறார். 

"வாடையே! எழும்பு; தென்றலே! வா ” என்பது என்னவென்றால், இயேசு கிறிஸ்து தன்னுடைய தோட்டமாகிய சபையில் பரிசுத்த ஆவியானவரை அனுப்புவதைப் பற்றிக் கூறுவதாகும் (யோவான் 16 : 7).

"கந்தப்பிசின்கள் வடிய என் தோட்டத்தில் வீசு;” இயேசு கிறிஸ்து தேற்றரவாளனை அனுப்பி, நம்மேல் அவர் வருவதைக் கூறுகிறார் (அப் 2: 2- 4).  பரிசுத்த ஆவியானவர் சபையில் வந்து நம்மோடு வாசம் செய்யவும், நம்மை சகல சத்தியத்திற்குள்ளும் நடத்தி, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும் உணர்த்தியும் (யோவான் 16 : 8 - 13), பரிசுத்த ஆவியானவர் நம்மேல் வீசும் போது, அதாவது நம்மேல் வரும்போது நாம் பெலனடைந்து அவருக்கு சாட்சிகளாக இருப்போம் (அப் 1 : 8).  ஆவியானவர் துணையோடு, நாம் இயேசு கிறிஸ்துவுக்கு பிரியமானவர்களாய் மாறி, கிறிஸ்துவின்  வழிநடத்துதலின் படி நடப்போம்.

"தோட்டத்துக்கு வந்து, தமது அருமையான கனிகளைப் புசிப்பாராக” சபை சொல்லுகிறதாவது, இயேசு கிறிஸ்து அவரது தோட்டமாகிய சபையில் வந்து, கனி கொடுக்கிற கிறிஸ்தவர்களைத் தம்முடைய மணவாட்டியாக சேர்த்துக் கொள்ளுவார் என்பதாக. நாமும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு, சத்தியத்தில் உறுதியாக இருந்து, கனியுள்ள வாழ்க்கை வாழ்ந்து கிறிஸ்துவின் மணவாட்டியாக மாறுவோம். பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு, சத்தியத்தில் உறுதியாக இருந்து, கனியுள்ள வாழ்க்கை வாழ்ந்து கிறிஸ்துவின் மணவாட்டியாக மாறுவோம்.

உங்களுக்குள் பரிசுத்த ஆவியானவர் இருக்கிறார் என்ற நிச்சயம் இருக்கிறதா?

குறிப்பு வசனம் : அப் 2: 1,2, அப் 4: 31,  1கொரிந்தியர் 12: 1




  :   24 Likes

  :   104 Views