உன்னதப்பாட்டு 3 : 9
 /   Blog /  Created by Kingslin R Last updated Thu, 01-Jan-1970



உன்னதப்பாட்டு 3 : 9

"சாலொமோன் ராஜா தனக்கு லீபனோனின் மரத்தினால் ஒரு , இரதத்தைப் பண்ணுவித்தார்.”

கிறிஸ்துவின் மூலம் வரும் வலிமையான மகிமையுள்ள, அவருடைய வார்த்தை உலகம் முழுவதும் கொண்டு செல்லப்படுதலை குறிக்கிறது.

லீபனோன் மரம்  என்பது கேதுரு  மரத்தை குறிக்கும் (சங்கீதம் 92 : 12). கேதுரு மரம் வலிமையானது (சங்கீதம் 29 : 5), மகிமையானது (எசேக் 17: 23).

 இரதம் என்பது  இரட்சிப்பைக் குறிக்கிறது (ஆபகூக் 3 : 8) சாலொமோன் என்பது இயேசு கிறிஸ்துவைக் குறிப்பிடுகிறதாகும் (முந்தைய வசனங்களில் பார்த்திருக்கிறோம்). லீபனோன் மரம் பிரபலமானது, அது என்றென்றும் நிலைத்திருக்கும் நற்செய்தியின் வார்த்தையாகிய இரட்சிப்பைக் குறிக்கிறது. மேலும் இது நித்திய நற்செய்தி என்று அழைக்கப்படுகிறது. இயேசு கிறிஸ்துவினால் ஜனங்களுக்கு அறிவிக்கப்படும். 

இயேசு கிறிஸ்து எருசலேமை தலைநகராகக் கொண்டு உலகம் முழுவதையும் ஆயிரம் வருடம் ஆட்சி செய்யப்போகிறார். அவருடைய ஆட்சியில், அவருடைய வார்த்தை உலகம் முழுவதும் கொடுக்கப்படும். இயேசு கிறிஸ்துவும், அவரோடுள்ள சேனைக் கூட்டமும் சேர்ந்து உலகில் வெற்றிகரமாக நற்செய்தியை கொண்டு செல்வார்கள். அவருடைய எதிரிகளை வென்று, உலகத்தை நற்செய்தியின் கீழ்ப்படிதலுக்கு உட்படுத்தி, அனைத்து ஜனங்களையும், இயேசு கிறிஸ்து தமது திட்டப்படி சமாதானத்துடனும், பரிசுத்தத்துடனும், ஆறுதலுடனும் மற்றும்  பாதுகாப்புடனும் ஆட்சி செய்வார். இத்தனை ஆண்டு காலம் சாத்தானுடைய ஆளுகையில் இருந்த உலகம், இப்பொழுது முழுமையாக இயேசு கிறிஸ்துவின் ஆளுகைக்குள் வருகிற நேரம், இப்பொழுது ஜனங்கள் கர்த்தருடைய வார்த்தையை முழுமையாக பெறுகிற ஒரு காலமாகவும், கிறிஸ்துவின் ஆட்சியை ஜனங்கள் ருசி பார்க்கின்ற ஒரு காலமாகவும் இது இருக்கும். இரதம் இராஜாவை ஏற்றிச் செல்வது போல் கர்த்தருடைய வார்த்தை உலகம் முழுவதும் ஸ்தாபிக்கப்படும் என்பதை இந்த வசனம் குறிப்பிடுகிறது.

கிறிஸ்துவின் இரதத்தை இழுக்கிறவர்களாக இருக்கிறீர்களா?

குறிப்பு வசனம்: 1இராஜா 5: 13,14




  :   19 Likes

  :   73 Views