உன்னதப்பாட்டு 3 : 8
 /   Blog /  Created by Kingslin R Last updated Thu, 01-Jan-1970



உன்னதப்பாட்டு 3 : 8

"இவர்களெல்லாரும் பட்டயம் பிடித்து, யுத்தத்துக்குப் பழகினவர்களாயிருக்கிறார்கள்; இராக்கால பயத்தினிமித்தம் அவனவனுடைய பட்டயம் அவனவன் அரையிலிருக்கிறது.”

இவர்களெல்லாரும் என்று ந்த வசனத்தில் கூறப்பட்டிருப்பவர்களைக்  குறித்து முந்தைய வசனத்தில் நாம் பார்த்திருந்தோம்.  அவர்கள் தேவனுடைய நிறைவான சேனையைக் குறிக்கிறது.  இந்த சேனை என்பது,  அவர் ராஜாவாக இருக்கும் பொழுது, யுத்த சேனை கூட்டம் அவரோடு கூட இருக்கும். அவர் மணவாளனாக இருக்கும் பொழுது மணவாளனின் தோழர்கள் கூட்டம் அவரோட கூட இருக்கும். 

இங்கு பட்டயம் என்பது  கர்த்தருடைய வார்த்தையை குறிக்கும் ஆவிக்குரிய பட்டயம்  (எபே 6:17), மேலும் ரு முனைகள் கொண்ட வாளை விடக் கூர்மையானது என்று கூறப்படுகிறது. (எபே 6 : 17, எபி 4 : 12). கிறிஸ்துவின் சேனைகள் அனைவரும் தங்கள் கைகளில் வைத்திருக்கிறார்கள். இந்த பட்டயத்தை அவர்கள் தக்கவைத்துக் கொள்வதையும், அதை உறுதியாகப் பின்பற்றுவதையும் குறிக்கிறது. இச்செயல் தேவனுடைய சேனையை, ஒரு வீரமிக்க சேனையாக காட்டுகிறது. அவரோடு கூட வருகின்ற சேனை, சாத்தானாகிய அந்திக்கிறிஸ்துவை பிடித்து 1000 வருடம் கட்டிப்போடுவார்கள். இவர்கள் எல்லாரும் பட்டயம் பிடித்து, யுத்தத்திற்குப் பழகினவர்களாக இருக்கின்றார்கள். இது இயேசு கிறிஸ்துவோடு வருகின்ற சேனை. வெளி 19: 14,19 ,ல் இந்த சேனை கூட்டத்தை குறித்து சொல்லப்பட்டிருக்கிறது. இவர்கள் சாத்தானின் தந்திரங்களில் வெற்றிப் பெற்ற சேனை.

இராக்காலப் பயத்தினிமித்தம் அவனவனுடைய பட்டயம் அவனவன் அரையிலிருக்கிறது. 2சாமு 20 : 8 -ல் சேனையின் பட்டயம் அரைகளிலே தொங்கவிடுதலை பார்க்க முடிகிறது. உலகத்திற்கு பயத்தைக் கொடுக்கிற சாத்தானைப் பிடித்து கட்டிப் போடுகிற சேனையின் அரையில் பட்டயம் இருக்கிறது.

அன்பானவர்களே! இன்று வாழ்கின்ற நமக்கும் சாத்தானை மேற்கொள்வதற்கு ஆவியின் பட்டயம் கொடுக்கப்பட்டிருக்கிறது. எபே 6: 11-17 -ல் சொல்லப்பட்டிருக்கிற ஆவியின் பட்டயத்தைக்கொண்டு சாத்தானை ஜெயிக்கிற ஒரு சேனையாக நாம் மாறுவோம்.

இன்று ஜெயிக்கிற சேனையாக இருக்கிறீர்களா?

குறிப்பு வசனம்: சங் 45: 3,சங் 149: 5-9,வெளி 19:14





  :   20 Likes

  :   85 Views