உன்னதப்பாட்டு 2 : 9
 /   Blog /  Created by Kingslin R Last updated Thu, 01-Jan-1970



உன்னதப்பாட்டு 2 : 9

"என் நேசர் வெளிமானுக்கும் மரைக்குட்டிக்கும் ஒப்பாயிருக்கிறார இதோ, அவர் எங்கள் மதிலுக்குப்புறம்பே நின்று, பலகணி வழியாய்ப் பார்த்து, கிராதியின் வழியாய்த் தமது மலர்ந்த முகத்தைக் காண்பிக்கிறார்.”

இயேசு கிறிஸ்துவினுடைய இரகசிய வருகையை இந்த பகுதி நமக்கு குறிப்பிடுகிறது. 

என் நேசர் வெளிமானுக்கும் மரைக்குட்டிக்கும் ஒப்பாயிருக்கிறார்; இங்கே இயேசு கிறிஸ்து வருவதை வெளிமானுக்கும், மரைக்குட்டிக்கும் வேதம் ஒப்பிடுகிறது. வெளிமானின் வேகம் மிகவும் வேகமாக இருக்கும் என்று 1நாளா 12 : 8 -ல் சொல்லப்பட்டிருக்கிறது. அதேபோல் மரைக்குட்டியும் வேகமாக ஓடுகிற  மிருகம்,  இங்கே கிறிஸ்துவின் வருகை இந்த மிருகங்களின் வேகத்திற்கு ஒப்பிடப்படுகிறது. அதாவது கிறிஸ்து தனது மணவாட்டியாகிய சபையை அழைத்துச் செல்வதற்கு அவ்வளவு வேகமாக வருகிறார் என்று இந்தப் பகுதி கூறுகிறது. 

"இதோ, அவர் எங்கள் மதிலுக்குப்புறம்பே நின்று, பலகணி வழியாய்ப் பார்த்து, கிராதியின் வழியாய்த் தமது மலர்ந்த முகத்தைக் காண்பிக்கிறார்.”   1தெச 4 : 16 -ல் பரலோகத்திலிருந்து புறப்பட்டு வருகிற இயேசுவானவர் மத்திய ஆகாயத்தில் வருகிறதை "மதிலுக்கு புறம்பே” என்று இந்த பகுதி நமக்கு குறிப்பிடுகிறது. அவர் அங்கே நின்று நம்மை பொன் முகத்தோடு பார்க்கிறதை "பலகணி வழியாக” பார்ப்பதற்கும், "கிராதியின் வழியாய்” பார்ப்பதற்கும் ஒப்பிடப்படுகிறது.

அந்த வேளையில் இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்டு மீட்கப்பட்டோர் எல்லோரும்,  மேகங்கள் நடுவினிலே, தூதர்கள் கூட்டம் சூழ நிற்கும் வேளையில், நான் அவரோடு ஸ்தோத்திர கீதம் பாடிப் பறந்து விடுவோம். ஒரு நொடிப் பொழுதில் நடு வானத்தில் இயேசுவின் கைகளில் நான் இருப்பேன். இயேசுவின் புன்னகை முகம் என் கண்களிலும் உள்ளத்திலும் நிறைந்து நிற்கும். என்ன ஒரு அருமையான நாளது, கண்ணீர் துன்பம் எல்லாம் நம்மை விட்டு கடந்து போகும். கண்ணிமைக்கும் பொழுதில் இது நடக்கக் கூடும், இயேசுவின் ரகசிய வருகையின் நாளன்று நாம் அவரோடு பறந்து செல்வோம். அந்த நாள் திருடனின் வருகையைப் போலிருக்கும் என்று வேதம் சொல்லுகின்றது. எந்த நேரமாக இருந்தாலும் நான் அவரோடு பறந்து சென்று விடுவேன் என்ற நம்பிக்கை எனக்குள் இருக்கிறது. அந்த நாள் வெகு சமீபம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அந்த நாளுக்காக சபையே ஆயத்தமாகு. 

நீங்கள் இயேசு கிறிஸ்துவின் வருகைக்கு தகுதியாக இருக்கிறீர்களா?    

 குறிப்பு வசனம்:   சங் 70 : 5,1 கொரி 13 : 12, வெளி 22 : 7                                          





  :   23 Likes

  :   83 Views