இதோ சீக்கிரமாய் வருகிறேன்
 /   Blog /  Created by Kingslin R Last updated Thu, 01-Jan-1970



இதோ சீக்கிரமாய் வருகிறேன்

இதோ சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது.  (வெளி 22:12 )  

ஆண்டவராகிய இயேசுவை தன் இரட்சகராக அறிந்த மனிதன், தேவனுக்காக தன் வாழ்க்கையைச் செலவு செய்யும்படியாக எதிர்பார்க்கப்படுகிறான். இந்த வாழ்க்கையில் தேவனுக்காக உழைக்கிற உழைப்பு , படுகிற பிரயாசம், தேவனுடைய பலத்தைக்கொண்டு அவருடைய ராஜ்யத்திற்கென்று ஏறெடுக்கிற முயற்சி ஒருபோதும் வீணல்ல. இந்த உலகத்திலேயும் அதற்கேற்ற பலனை தேவன் கொடுக்கிறார். வரப்போகிற உலகிலும் அதற்கேற்ற பலனை பலமடங்குகளாகத் தருகிறார். இம்மையிலே அதிகமானவைகளையும், மறுமையிலே நித்திய ஜீவனையும் அடையாமற்போவதில்லையென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.' (லூக்கா 18:30)  

நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிற இந்த காலத்தில் அவருக்கென்று பிரயாசப்படாமல், உலகத்திற்காகவே பிரயாசப்படுவோமானால், அவருடைய வருகையின் வேளையிலே நாம் ஆயத்தமாய் இருப்போமா. இந்த வாழ்நாளில் நாம் இயேசுவுக்காக ஆத்துமாக்களை ஆதாயம் செய்யும்படி நியமிக்கப்பட்டிருக்கிறோம்.  

நாம் ஒரு ஆத்துமாவை இயேசுவுக்கென்று ஆதாயப்படுத்தினால் அதனுடைய பலனை அனுபவிப்போம். நாம் அநேகரை இரட்சிப்பின் வழியில் நடத்துவது, நம்மைப் பிரகாசமுள்ள நட்சத்திரமாகவும் தேவன் விரும்புகிற, அவருடைய சித்தத்தை செய்கிற பிள்ளையாகவும் அவருடைய சேனை வீரராகவும் மற்றும் நாம் இரட்சிப்புக்கு கருவியாகக் இருந்தோமானால், தேவனும் மகிமை படுவார், சந்தோஷப்படுவார் . கர்த்தருடைய வருகை சமீபமாக இருக்கிறது, அனேகர் இரட்சிப்புக்காக நடத்த முயற்சிப்போம். ஆமென். 





  :   31 Likes

  :   158 Views