நீதிமொழிகள் 20:3 "வழக்குக்கு விலகுவது மனுஷனுக்கு மேன்மை." பகைவிரோதம், மிகப் பெரிய அழிவை உண்டாக்கக்கூடிய ஒரு சக்தியாக இருக்கின்றது.சாத்தான், பாம்பின் வடிவில் ஏதேன் தோட்டத்திற்குள் ஊர்ந்து நுழைந்ததுபோல, இது உறவுகளுக்குள் யாருக்கும் பெரிதாகத் தெரியாத விதத்தில் மெல்ல நுழைகின்றது.
நீங்கள் பகைவிரோதத்தை எவ்வாறு தவிர்க்க முடியும்? அன்பு சகல பாவங்களையும் மூடும் என்று வேதவசனம் நமக்குச் சொல்கிறது. தேவ அன்பு நமக்குள் காணப்படவேண்டும். அப்பொழுதுதான் பகை விரோதங்களை நாம் முழுமையாக தவிர்த்திட முடியும்.
தேவ வழிகளில் நடந்து, பகைவிரோதங்களை நாம் தவிர்க்கும் படி ஜெபம் செய்யும் பொழுது, தேவனுடைய கரம் வல்லமையாய் நம்முடைய வாழ்க்கையில் செயல்படுவதை நாம் பார்க்க முடியும். அப்பொழுது சமாதானத்திலும், ஒற்றுமையிலும் வாழ கர்த்தர் நமக்கு உதவி செய்கிறார். ஆமென்.
Write a public review