ஒருவர் ஞானஸ்நானம் எடுக்கையில் அவர் பெயர் Selvi. ஆனால் அந்த பெயரோடு தொடர்ந்து அவர் கிறிஸ்தவ ஓட்டத்தை ஓட விரும்பாமல் தன் பெயரை Sarah என்று மாற்றிக்கொண்டதாக வைத்து கொள்ளுவோம். இப்பொழுது ஜீவ புஸ்தகத்தில் அவர் பெயர் Selvi என்று பதிவிடப்பட்டிருக்குமா?? அல்லது Sarah என்று பதிவிடப்பட்டிருக்குமா?
வெளி 2:17 மற்றும் வெளி 3:12ன் அடிப்படையில் பலர் நமக்கு புதிய பெயர் இடப்படுவதாக சொல்கின்றனர்.
என் தேவனுடைய நாமத்தையும் என் தேவனால் பரலோகத்திலிருந்திறங்கிவருகிற புதிய எருசலேமாகிய என் தேவனுடைய நகரத்தின் நாமத்தையும், என் புதிய நாமத்தையும் அவன்மேல் எழுதுவேன் என்று (வெளி 3:12)ல் பார்க்கிறோம்.
அப்படியென்றால் பரலோகத்தில் நம்முடைய தற்போதைய பெயர்களால் அழைக்கப்படுவோமா?
தேவ பிள்ளைகளின் பெயர்கள் ஆட்டுக்குட்டியானவரின் ஜீவ புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன (வெளி 20:15; 21:27).
அவை எங்கள் பூமிக்குரிய பெயர்கள் என்று நான் நம்புகிறேன். ஆதாம் விலங்குகளுக்கு கொடுத்த பெயர்களை தேவன் சரியானதாக அங்கீகரித்தார்.
தேவன் தம் மக்களை பூமிக்குரிய பெயர்களால் அழைத்திருக்கிறார்.
உதாரணமாக, ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் யாக்கோபு போன்ற பெயர்களால் தான் அழைத்தார்.
இஸ்ரவேல் கோத்திரத்தின் பெயர் மற்றும் அப்போஸ்தலர்களின் பன்னிரண்டு பெயர்கள் அப்படியே எழுதப்பட்டிருக்கும் என்று (வெளி 21:12-14)ல் பார்க்கிறோம்.
பெயர்கள் அவரவர் தனித்துவத்தை பிரதிபலிக்கின்றன. ஒரே பெயரை இந்த பூமியில் மற்ற அநேகர் தாங்கியிருக்க அதிக வாய்ப்பு உள்ளது.
உதாரணத்திற்கு : தாவீது, ஆபிரகாம், ஜான்சன் மற்றும் ஏராளமான பொது பெயர்கள் உள்ளனவே... அந்த சூழ்நிலையில் ஆபிரகாம் என்று அழைக்கும் போது எத்தனை பேர் வருவார்கள்?
என்னை பொருத்தவரையில் இந்த குழப்பம் மேலே இல்லாதவாறு நிச்சயமாக தேவன் அதற்கான வழியை செய்திருப்பார் ஆனால் அதற்கான தெளிவான வசன ஆதாரத்தை வேதத்தில் இதுவரை என்னால் காண முடிவதில்லை.
பெயர் மாற்றம் என்பது அவரவர் சம்பந்தப்பட்டது. அவரவர் சமுதாயத்தின் மற்றும் உள்ளார்ந்த மனபக்குவத்தின் அடிப்படையில் அவரவர் மாற்றிக்கொள்கிறதேயன்றி பெயரை மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியத்தை வேதம் புதிய ஏற்பாட்டில் வலியுறுத்தவில்லை இருதயம் புதியதாவதே அவசியம்.
தமிழில் இயேசு என்றும் ஆங்கிலத்தில் ஜீசஸ் என்றும் அரபியில் ஈசா என்றும் எபிரேயத்தில் ஈசு அல்லது யோசு / யோசுவா என்றும் இப்படி பலவகையிலே பல மொழிகளில் உச்சரிக்கப்படுகிறது.
ஆகவே அவரவர் அறிந்த வண்ணமே அவரவர் அடையாளம் பரலோகத்தில் இருக்கும் என்பது என் புரிதல்.
உலகத்தில் பல கோடி ஜனங்கள் இருந்தாலும் கை ரேகை எப்படி தனித்துவமாக தேவன் ஒவ்வொருவருக்கும் வைத்திருக்கிறாரோ பெயரிலும் நிச்சயமாக வித்தியாசத்தை தேவன் முன்னிலையில் நாம் நம் பெயரை அவர் உச்சரிக்கும் போது நமக்கு தெளிவாக புரியும்.(1யோ 3:2 )
பிரியமானவர்களே, இப்பொழுது தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம், இனி எவ்விதமாயிருப்போமென்று இன்னும் வெளிப்படவில்லை; ஆகிலும் அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிறவண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால், அவருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிந்திருக்கிறோம்.
Write a public review