அப்போஸ்தலர் 9:20. "தாமதமின்றி, கிறிஸ்து தேவனுடைய குமாரனென்று ஆலயங்களிலே பிரசங்கித்தான்."
சிலர் கர்த்தரை அறிந்து எத்தனை வருடங்கள் ஆனாலும் அவரைப் பற்றி மற்றவர்களுக்கு சொல்வதற்கு, ஆண்டவருக்கு ஊழியம் செய்வதற்கு முன்வருவதில்லை. ஆனால் இங்கே பவுல் ஆண்டவரை அறிந்த உடனே வசனம் சொல்கிறது "தாமதமின்றி" கிறிஸ்துவைப் பற்றி தேவாலயங்களில் பிரசங்கம் செய்தார்.
உண்மையான தேவ அன்பு ,இரட்சிப்பின் சந்தோஷம் நமக்குள் இருக்குமானால், ஆண்டவருக்காக நான் ஏதாவது செய்யவேண்டும் என்கிற ஒரு உந்துதல் நமக்குள் இருந்துகொண்டே இருக்கும். பரிசுத்த ஆவியானவர் கொடுக்கிற அந்த உந்துதலினால் நாம் பிரகாசிக்க பட்டு, மற்ற ஜனங்களுக்கு பிரயோஜனமாக இருக்கிறோம்.
பூமியிலே ஒருவர் ரட்சிக்க படும்பொழுது பரலோகம் சந்தோஷப் படுகிறது என்று நாம் வேதத்திலே பார்க்கிறோம் . ஒருவேளை கர்த்தரை பற்றி சொல்ல தயக்கத்தோடு யாராவது இருப்பீர்களனால், இன்று முதல் இந்தப் பவுலை போல தாமதமின்றி ஆண்டவருக்காக எழும்பி பிரகாசியுங்கள். ஆமென்.
Write a public review