மத்தேயு 7:24-25 - "ஆகையால், நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன். பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதியும், அது விழவில்லை; ஏனென்றால், அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது."
வாழ்க்கையில் நல்ல அடித்தளத்தை உருவாக்க என்ன செய்ய வேண்டும்:
கிறிஸ்துவோடு நல்ல ஐக்கியத்தில் தினமும் வாழ்வது
வேதத்தை படிப்பதும், தவறாமல் ஜெபிப்பதும்
விசுவாச நண்பர்களை உருவாக்குதல்
விசுவாசத்தில் வளருதல்
ஆவிக்குரிய நடைமுறைகள் மூலம் நெகிழ்ச்சியை உருவாக்குதல்
தாவீது இஸ்ரவேல் தேசத்துக்கு ராஜாவாக இருந்தும் தினமும் கர்த்தரின்
வார்த்தையை தியானித்தார், பெரும்பாலான சங்கீதங்களை எழுதினார், இஸ்ரவேல் தேசத்தை நேர்மையாக வழிநடத்தினார். அவர் கற்பனையில் கட்டளைகளையும் கைக்கொண்டு நடந்தார். தாவீதை குறித்து கர்த்தரே அநேக இடங்களில் சாட்சி கொடுத்திருக்கிறார்.
இன்று கிறிஸ்துவாகிய பாறையின் மேல் நாம் நின்று எடுக்கும் ஒவ்வொரு முடிவிலும், நமக்கு வழிகாட்டு கிறிஸ்து இருக்கிறார் நம்முடைய வாழ்க்கை அடித்தளம் நிகர் பலமாக இருக்கும். நமக்கு வழிகாட்ட உதவுகிறது.
Write a public review