நல்ல நட்பு
 /   Blog /  Created by Kingslin R Last updated Thu, 03-Oct-2024



நல்ல நட்பு

சங்கீதம் 1:1 . "துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும்," 

நல்ல நட்புகள் தேவை ,நல்ல நண்பர்கள் தேவை, நல்ல ஐக்கியம் தேவை ,ஆனால் நட்புகள் நமக்கு நல்லது செய்ய வேண்டும். சிலருடைய நட்புகளால் நல்ல பொழுதுபோக்கு கிடைக்கும் . ஆனால் சிலவேளை அவை நம்மிடம் உள்ள நல்ல பண்புகளையும் நாசமாக்கிவிடும். நாம் நல்ல பண்புகளில் உறுதியாக இல்லாவிட்டால் மற்றவர்களின் ஆகாத பண்புகளுக்கு அடிமையாகி விடுவோம். 

சாலொமோன்  ராஜாவுடைய மகனாகிய ரெகொபெயாமினால் ஒரு வலிமையான தேசம் இரண்டாக உடைய நேரிட்டது . அதற்கு காரணம் அவருடைய ஆகாத நண்பர்களின் ஆலோசனையே. அதேபோல் முதியோர் ஆலோசனையை ஏற்கும் மனநிலைமையும் இல்லாமல் போனதினால். 

 எனவேதான் துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமல் இருக்கவேண்டும் என்று வேதம் ஆலோசனை சொல்கிறது. கர்த்தராகிய இயேசுவை நண்பனாக்கிக் கொண்டவர்கள் நல்ல பண்புகளில் வலிமை மிக்கவர்கள் . அவர்கள் பொல்லாதவர்களால் எளிதாக பாதிக்கப்படுவதில்லை. ஆமென். 





  :   17 Likes

  :   57 Views