2 கொரி 10:4 எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக் கேற்றவைகளாயிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்குத் தேவபலமுள்ளவைகளாயிருக்கிறது
நாம் வாழ்க்கையில் சந்திக்கும் படியான போராட்டங்கள் பல உண்டு. வாழ்க்கையில் ஓட்டத்தில் கடந்து போகும் எதிராளிகள் அநேகர் உண்டு. இந்தப் போராட்டங்களை சந்திக்க வேண்டும் என்பது நிர்ணயிக்கப்பட்ட ஒன்று. நாம் வாழ்க்கையில் சந்திக்கின்ற எதிர்மாறான சூழ்நிலையில் எந்த பெலத்தைக் கொண்டு போராட ஆயத்தமாக இருக்கிறோம். நம் சொந்த பெலத்தைக் கொண்டா? அல்லது ஆவியானவரின் துணையைக் கொண்டா?
சிலர் அநேக சமயங்களில் தங்களின் மாம்ச பெலத்தைக் கொண்டு போராட முயற்சிக்கிறார்கள். அதின் முடிவு தோல்வியே. ஆனால் ஒரு மெய்யான விசுவாசியின் பலம் என்பது ஆவியான கடவுளை சார்ந்து காணப்படும்.
நாமோ தெளிந்தவர்களாயிருந்து, விசுவாசம் அன்பு என்னும் மார்க்கவசத்தையும், இரட்சிப்பின் நம்பிக்கையென்னும் தலைச்சீராவையும் தரித்துக்கொண்டிருக்கக்கடவோம் (1 தெச 5:8) என்று பவுல் சொல்லுகிறார். இந்த போராயுதங்களைத் தரித்து நாம் வாழாவிட்டால், நாம் எளிதில் வீழ்ந்து போகிற நபராய்க் காணப்படுவோம். நம்முடைய பலம் ஒன்றுக்கும் உதவாது. ஆனால் கர்த்தரின் போராயுதங்கள் சகலத்தையும் ஜெயிக்கும். ஆகவேதான் பவுல்: இந்த மகத்துவமுள்ள வல்லமை எங்களால் உண்டாயிராமல், தேவனால் உண்டாயிருக்கிறதென்று விளங்கும்படி, இந்தப் பொக்கிஷத்தை மண்பாண்டங்களில் பெற்றிருக்கிறோம் (2 கொரி 4:7) என்று சொல்லுகிறார். கர்த்தரின் வல்லமையைக் கொண்டு ஜெயம் பெறுவோம். ஆமென்.
Write a public review