கிரீடம்! (CROWN) - ஒருவருடைய உயர்ந்த ஸ்தானம் , அவருடைய அதிகாரம் ஆகியவற்றிற்கு கிரீடம் ஓர் அடையாளமாகும்.
வேதாகமத்தில் பல எபிரெய வார்த்தைகளும் , கிரேக்க வார்த்தைகளும் கிரீடத்தை குறிப்பதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளன .
வஸ்தி ( எஸ் 1:11 ) எஸ்தர் ( எஸ் 2.17 ) ஆகியோர் கிரீடங்களை அணிந்திருந்தார்கள்.
இஸ்ரவேல் தேசத்தின் ஆரம்ப கால வரலாற்றில் ஆசாரியர்களும் , இராஜாக்களும் கிரீடங்களை அணிந்திருந்தார்கள் . இது அவர்களுடைய அதிகாரத்திற்கும் , ஆளுகைக்கும் அடையாளமாக விளங்கிற்று ( லேவி 8.9 ; 2 சாமு 1.10 ) .
கிரேக்க தேசத்தில் விளையாட்டுப் போட்டிகள் நடக்கும்போது அதில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆலிவ் இலைகளால் பின்னப்பட்ட கிரீடத்தை சூட்டுவார்கள் . அப்போஸ்தலர் பவுல் இதைப் போன்ற கிரீடத்தை குறிப்பிட்டிருக்கிறார் ( 1 கொரி 9:25 ; 2 தீமோ 4 : 8 )
ரோமபேரரசின் போர்வீரர்கள் இயேசுகிறிஸ்துவை பரியாசம் பண்ணி அவருடைய தலையில் முள்முடியை சூட்டி யூதர்களின் இராஜாவே வாழ்க என்று கூறி அவரை பரியாசம் பண்ணினார்கள் ( மத் 27:29 ; மாற் 15.17 ; யோவா 19:2,5 )
வெளிப்படுத்தின விசேஷத்தில் இயேசுகிறிஸ்துவின் சிரசின் மேல் அநேக கிரீடங்கள் இருந்ததாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது ( வெளி 19:12 ) . இது அவருடைய ராஜரீக அதிகாரத்தை குறிக்கிறது .
கர்த்தரிடத்தில் நாம் விசுவாசம் வைத்து அவருக்கு உண்மையுள்ளவர்களாக ஜீவிக்கும் போது நாமும் அழியாத கிரீடத்தை பெற்றுக்கொள்வோம் { 1 கொரி 9:25 ) ஆமென்!
சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான் ; அவன் உத்தமனென்று விளங்கினபின்பு கர்த்தர் தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணின ஜீவகிரீடத்தைப் பெறுவான் ( யாக் 1:12 ) . ஆமென்!
வேதாகமத்தில் கூறப்பட்டிருக்கும் கிரீடங்கள்:
1. கனத்தின் கிரீடம் ( நீதி 12 : 4 ; நீதி 17.6 ; எஸ் 8.15 ; யோபு 19 : 9 )
2. இராஜாக்களின் கிரீடம் ( 2 சாமு 12:30 ; எஸ் 1:11 ; எஸ் 2:17 ; வெளி 19 : 12-16 )
3. பிரதான ஆசாரியனின் கிரீடம் ( யாத் 29.6 )
4. பெருமையின் கிரீடம் ( ஏசா 28 : 1-5 )
5. முள் கிரீடும் ( மத் 27:29 ; மாற்கு 15.17 ; யோவான் 19 : 2-5 )
6. மகிமையின் கிரீடம் ( 1 பேதுரு 5 : 4 ; நீதி 4.9 ; நீதி 16:31 ; ஏசா 62 : 3 )
7. நீதியின் கீரிடம் ( 2 தீமோ 4 : 8 )
8. ஜீவகிரீடம் ( யாக் 1.12 ; வெளி 2.10 )
9. அழிவுள்ள கிரீடம் ( 1 கொரி 9:25 )
10. ஆத்தும ஆதாயம் செய்கிறவர்களின் கிரீடம் ( 1 தெச 2.19 )ஆமென்!
Write a public review