சங்கீதம் 39:7 "இப்போதும் ஆண்டவரே, நான் எதற்கு எதிர்பார்த்திருக்கிறேன்? நீரே என் நம்பிக்கை."
சில நேரங்களில், நம்முடைய வாழ்க்கையிலும் தேவனையே சார்ந்துக்கொள்ளும்படியாக சில சோதனைகள் அனுமதிக்கப்படுகின்றன. சோதனைகள் எவ்வளவு கடுமையானதாக இருந்தாலும் மனம் தளராமல் தேவனையே சார்ந்து அவர்மேல் நம்பிக்கையாக இருக்க வேண்டும்.
பவுல் அவருடைய சோதனை வேளைகளிலே, கடந்தகால சோதனைகளில் விடுவித்த தேவன், தன்னுடைய ஒவ்வொரு சோதனை வேளையிலும் விடுவிப்பார் என்று நம்பினார். பவுலை விடுவித்த அதே தேவன் இன்று நமக்கும் தேவன். அவர் மேல் நம்பிக்கையாய் இருப்போம்.
இன்றைக்கு மக்கள் எதிர்காலம் எப்படியாக இருக்குமோ என்று பயத்துடன் நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அநேகர் எதிர்காலத்தைக் குறித்து நம்பிக்கை அற்றவர்களாய் இருக்கிறார்கள். ஆனால், ஒரு கிறிஸ்தவனின் நம்பிக்கை என்ன? இம்மட்டும் வழிநடத்தின தேவன் இனிமேலும் அவ்விதமாகவே வழி நடத்த வல்லவராய் இருக்கிறார் என்பதே. இதில் மென்மேலும் பெலப்படுவோம். ஆமென். ',
Write a public review