This website uses cookies to personalize content and analyse traffic in order to offer you a better experience. Cookie policy

Accept
எதை சம்பாதிக்க வேண்டும்?
 /   Blog /  Created by Kingslin R Last updated Tue, 01-Oct-2024



எதை சம்பாதிக்க வேண்டும்?

நீதிமொழிகள் 4:7    "ஞானமே முக்கியம் ஞானத்தைச் சம்பாதி என்னத்தைச் சம்பாதித்தாலும் புத்தியைச் சம்பாதித்துக்கொள்." 

  சம்பாதிப்பது என்பது நாம் வேலை செய்து அல்லது ஒரு தொழில் செய்து பணம் சம்பாதிப்பது . இது நமக்கு நன்றாக தெரியும். ஆனால் வேதம் நமக்கு சொல்கிறது , நீங்கள் ஞானத்தை கண்டிப்பாக சம்பாதிக்க வேண்டும். 

   ஏன் ஞானத்தை சம்பாதிக்க வேண்டும்?  

   1 கொரிந்தியர் 1:32  இல் இயேசு கிறிஸ்துவே தேவனால் நமக்கு ஞானமாய் இருக்கிறார். கிறிஸ்துவே நமக்கு ஞானம். ஆகையால் கிறிஸ்துவாகிய ஞானம் இல்லாமல் நமக்கு ஒரு வாழ்வு இல்லை.  

   எபேசியர் 1:17  இல்,  நாம் பிதாவை அறிந்து கொள்வதற்கு நமக்கு ஞானம் தேவை . தேவனை அறிந்து கொள்ள வேண்டுமென்றால் இந்த மனித அறிவு போதாது . அதற்கு மேலாக கர்த்தர் நமக்கு கொடுக்கிற ஒரு தெய்வீக ஞானம் நமக்கு தேவை. இந்த தெய்வீக ஞானத்தை ஜெபித்து தான் நாம் பெற முடியும். 

  ஞானத்தைப் பெற்றுக் கொள்ள நாம் ஜெபிப்போம் , கர்த்தரை மேலும்மேலும் அறிவோம் .நித்திய ஜீவனை பெறுவோம். ஆமென். 





  :   20 Likes

  :   66 Views