விரோதம்
 /   Blog /  Created by Kingslin R Last updated Thu, 01-Jan-1970



விரோதம்

யாக்கோபு 5: 9. "சகோதரரே, நீங்கள் நியாயந்தீர்க்கப்படாதபடிக்கு ஒருவருக்கொருவர் விரோதமாய் முறையிடாதிருங்கள்; இதோ, நியாயாதிபதி வாசற்படியில் நிற்கிறார்."  

உன் சகோதரன் உனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்தால், அவனைக் கடிந்துகொள், அவன் மனஸ்தாபப்பட்டால், அவனுக்கு மன்னிப்பாயாக என்று வேதம் நமக்கு  சொல்கிறது. 

 கடிந்து கொள்வது என்பது வேறு, புறங்கூறுதல் என்பது வேறு, ஒருவருக்கு விரோதமாக முறையிடுவது வேறு. இயேசுகிறிஸ்து யாரையும் குறை சொல்லவில்லை ஆனால் கடிந்துகொண்டார். இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் உண்டு. 

நாம் நியாயம் தீர்க்கப்படாத படிக்கு, சகோதரர் நமக்கு விரோதமாக குற்றம் செய்யும் பொழுது, அவர்களை எல்லோரிடமும் ஒரு குறையாக சொல்லிக் கொண்டிராமலும், அவர்களை ஒரு விரோதியாக பார்க்காமலும், பழிவாங்கும் எண்ணம் இல்லாமலும், அவருடைய எல்லா செயலையும் ஒரு குற்றமாகத் தீர்க்காமல், அவர்கள் கெட்டுப் போக வேண்டுமென்ற எண்ணத்தில், அவர்களை நியாயம் தீர்க்காமல் இருக்க வேண்டும். 

 நாம் பொறுமையாக இருக்கும்பொழுது நியாயாதிபதியாகிய கர்த்தர் நம் பட்சத்தில் இருந்து நமக்கு நீதி செய்வார். ஆமென். 






  :   26 Likes

  :   100 Views