மறுபிறப்பு
 /   Blog /  Created by Kingslin R Last updated Thu, 01-Jan-1970



மறுபிறப்பு

நீங்கள் மறுபடியும் பிறக்கவேண்டும் (யோவான் 3 : 7)  

மறுப்பிறப்பு அவ்வளவு முக்கியமானதா? ஆம்! இது மிக மிக முக்கியமானது, அவசியமானது. ஏனென்றால் ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் பரலோக ராஜ்யம் செல்லமுடியாது என்று வேதம் தெளிவாய் போதிக்கிறது.  ஒருவர் கிறிஸ்தவக் குடும்பத்தைச் சேர்ந்தவரா? கிறிஸ்தவ பெயருண்டா? கிறிஸ்தவ பாரம்பரியத்தில் வளர்க்கப்பட்டவரா? என்பதெல்லாம் அவசியமில்லை. மறுபடியும் பிறந்தவரா என்பதுதான் அவசியம். 

மறுபிறப்பில் இரண்டு காரியங்கள் உண்டு. பிறப்பு என்று சொல்லும்போது அது முற்றிலும் புதிதாக நடைபெறும் காரியம். பழையதை செவ்வைப்படுத்துவதல்ல. இரண்டாவது ஒருவர் மறுபடியும் பிறந்திருந்தால் ஒரு புதிய மனிதனாக இருப்பார். பழையவைகள் யாவும் ஒழிந்துப் போயின. ஆவியானவரால் பிறந்த புது சிருஷ்டியாக  இருப்பார்.  

நான் மறுபடியும் பிறந்த மனிதனா என்பதை எப்படி அறியமுடியும் ? இது மனிதனின் முழு ஆள்தத்துவத்தில் நடைபெறும் காரியம். இது தேவன் மனிதனில் செயல்படுத்தும் காரியம். புது ஜீவனை நமக்குள் வைத்து அதன் மூலம் ஆளப்படும் வாழ்க்கை. நிக்கொதேமு மறுபிறப்படைய வேண்டும் என்பதை இயேசுவின் மூலம் கேட்டபொழுது அதைக்குறித்து அவன் கோபப்படவில்லை. அதற்கு பதிலாக அதை அறிய வாஞ்சித்து மேலும் கேள்விகளைக் கேட்டான். பிறகு அவன் ஒரு மறுபிறப்படைந்த மனிதன் ஆனான், நாம் நம்மை  ஆராய்ந்து பார்த்து மனந்திரும்புவோம். தேவன் மறுபிறப்படையச் செய்வார். ஆமென். 





  :   29 Likes

  :   105 Views