நெரிந்த நாணலை முறியார்
 /   Blog /  Created by Kingslin R Last updated Thu, 01-Jan-1970



நெரிந்த நாணலை முறியார்

"அவர் நெரிந்த நாணலை முறியாமலும், மங்கியெரிகிற திரியை அணையாமலும், நியாயத்தை உண்மையாக வெளிப்படுத்துவார்."  (ஏசாயா 42 : 3 )  

இந்த வசனம் நமக்கு எவ்வளவு பெரிய நம்பிக்கையை கொடுக்கிறது பாருங்கள். இந்த உலகில் தளர்ந்துபோன , பலவீனமான  மக்கள் வரவேற்கப்படுவதில்லை. ஆனால் தேவன் செயல்படும் விதம் எவ்வளவு வித்தியாசமானதாக இருக்கிறது.  

நானோ நெரிந்த நாணலாக இருக்கிறேன். இந்த உலகில் எல்லா போராட்டங்களின் மத்தியில் கடந்துச் செல்லமுடியாதவனாய் இருக்கிறேன். மிகச்சிறிய சோதனையிலும் சோர்ந்து தடுமாறுகிறேன். நம்பிக்கையில்லாத ஒரு மனிதனாகத் தீமைக்கு எதிர்த்து நிற்க திரானியற்றவனாக வாழுகிறேன். ஆனாலும் தேவன் என்னை முறித்து விடமாட்டேன் என்று சொல்லுகிறார்.  

நான் பிரகாசமுள்ள திரியாக அல்ல, மங்கியெரிகிற திரியாக இருக்கிறேன். என்னில் ஒளி எவ்வளவு குறைவாய் இருக்கிறது. வெறும் புகையை வெளிப்படுத்துகிறவனாய் சில நேரங்களில் காணப்படுகிறேன். ஆனாலும் என் தேவன் என்னை அணைத்து விடமாட்டேன் என்று சொல்லுகிறார். அப்படி அவர் சொல்லியிருக்க நான் ஏன் பயப்படவேண்டும். 

என்னை அழைத்த தேவன் வல்லவராயிருக்கிறார். அவர் என்னை அவருடைய சித்தத்தின்படி முற்றும் முடிய இரட்சிப்பார். ஸ்தோத்திரம் இயேசப்பா. ஆமென். 





  :   37 Likes

  :   127 Views