நித்திய வழியிலே நடப்போம்
 /   Blog /  Created by Kingslin R Last updated Thu, 01-Jan-1970



நித்திய வழியிலே நடப்போம்

சங்கீதம் 139:24 "வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து நித்திய வழியிலே என்னை நடத்தும் என்று தாவீது சொன்னார்".

பொதுவாக நாம் ஜெபம் செய்யும் பொழுது சில பாவங்களை அறிக்கை செய்கிறோம்.அநேக நேரங்களில் நம்முடைய எண்ணம் நான் எந்த தவறும் செய்யவில்லை என்று நினைத்து நாம் ஜெபம் பண்ணுவது வழக்கம். இது எல்லா மனிதனுக்கும் உள்ள ஒரு சுவாபம்.

தாவீது ஆண்டவரை நோக்கி ஒரு ஜெபம் செய்கிறார். ஆண்டவரே உம்முடைய பார்வையில், வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்க்கும்படி அவன் தேவனிடம் கேட்கிறார். அப்படி இருந்தால் அதிலிருந்து தன்னை மீட்டு கர்த்தருடைய நித்திய வழியிலே ,செம்மையான வழியிலே நடத்தும்படி அவர் கேட்கிறதை இங்கே பார்க்க முடிகிறது. மனிதன் எல்லாவற்றையும் அறிந்தவன் அல்ல, தேவன் ஒருவரே எல்லாவற்றையும் அறிந்தவர்.சில நேரங்களில் நமது பார்வையில் சரியாக தெரிகிற ஒரு காரியம் ,தேவனுடைய பார்வையில் அது தவறுதலாக காணப்படலாம்.

கர்த்தரிடம் நாம் நம்மை முழுமையாக அர்ப்பணித்து நம்முடைய இருதயத்தை ஆராய்ந்து பார்க்க கேட்கும்பொழுது , கர்த்தர் அவருடைய பார்வையில் தவறாக இருக்கிற காரியத்தை நமக்கு உணர்த்தி, நாம் அதற்காக ஜெபித்து கர்த்தரிடமிருந்து ஒரு மீட்பை பெற்று நித்திய வழியிலே நாம் நடக்க முயற்சிக்கலாம்.

நம்மை முழுமையாக கர்த்தருக்கு அர்ப்பணிப்போம்! நித்திய வழியிலே நடப்போம்! ஆமென்.




  :   34 Likes

  :   117 Views