நீங்கள் இளமையாக இருப்பதால் யாரும் உங்களை இழிவாக பார்க்க வேண்டாம்
 /   Blog /  Created by Kingslin R Last updated Thu, 01-Jan-1970



நீங்கள் இளமையாக இருப்பதால் யாரும் உங்களை இழிவாக பார்க்க வேண்டாம்

எந்தவொரு இளைஞனும் அவர்களின் புரிதல் மற்றும் அனுபவமின்மையால் அநேக நேரங்களில் மற்றவர்களால் கேவலமாகப் பார்க்கப்படுகிறான். 

1 தீமோத்தேயு 4:12

"உன் இளமையைக்குறித்து ஒருவனும் உன்னை அசட்டைபண்ணாதபடிக்கு, நீ வார்த்தையிலும், நடக்கையிலும், அன்பிலும், ஆவியிலும், விசுவாசத்திலும், கற்பிலும், விசுவாசிகளுக்கு மாதிரியாயிரு"

பவுல் தீமோத்தேயுக்கு ஒரு ஆலோசனையாக கூறுகிறார். நீ வாலிபனாக இருக்கிறாய் உன்னை யாரும் அசட்டை பண்ணாத படிக்கு செயலிலே மற்றவர்களுக்கு மாதிரியாக இருக்க வேண்டும் என்கிறார். அப்படி என்றால் வேதம் இளைஞர்களை மற்றவர்களுக்கு மாதிரியாக இருக்க வலியுறுத்துகிறது. 

உலகம் உங்களை அசட்டை செய்யலாம் ,கேவலமாக பார்க்கலாம். ஆனால் கர்த்தர் வாலிபர்களை அப்படி பார்க்கவில்லை , அவர் வாலிபர்களை பராக்கிரமசாலிகளாக கிறிஸ்துவுக்குள் ஜெயம் பெறுகிறவர்களாக பார்க்கிறார். இதை உணர்ந்து  ஒவ்வொரு வாலிபர்களும் நீங்கள் மற்றவர்களுக்கு மாதிரியாக இருக்க உங்களை அர்ப்பணித்துக் கொள்ளுங்கள். இந்த வார்த்தையின் படி கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து மேன்மைப்படுத்துவாராக.




  :   30 Likes

  :   71 Views