நம்மை அறிந்திருக்கிற தேவன்
 /   Blog /  Created by Kingslin R Last updated Thu, 01-Jan-1970



நம்மை அறிந்திருக்கிற தேவன்

 சங்கீதம்  139:1. "கர்த்தாவே, நீர் என்னை ஆராய்ந்து அறிந்திருக்கிறீர்."  

மனிதர்களுக்கு அனேக உறவு முறைகள் உண்டு: குடும்ப உறவுகள் ,நண்பர்கள் மற்றும் அநேகர்  இருந்தாலும் , சில நேரங்களில் நம்மை மற்றவர்கள் புரிந்து கொள்ளவில்லை என்கிற ஒரு ஆதங்கம் நமக்குள் இருக்கும். இதனால் மனிதர்கள் ஒரு தனிமையை உணர்கிறார்கள். 

சிலர் நம் மேல் அக்கறை உள்ளவர்களாக இருந்தாலும், நம்முடைய சில பிரச்சனைகளில் அவர்கள் உதவ முடியாது. உடலில் ஏதோ ஒரு நோய் , மனதில் ஏதோ ஒரு காயம் இப்படிப்பட்ட சூழ்நிலையில் மனிதர்களால் முழுமையாக புரிந்து அதில் நமக்கு உதவி செய்ய முடியாது.  

இப்படிப்பட்ட சூழ்நிலையில் நம்மை முழுமையாக அறிந்து ஆராய்ந்து புரிந்து வைத்திருக்கிற நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவானவர் நம்மிடத்தில் உண்டு. அவரை சார்ந்து அவரில் நிலைத்து நிற்கும் போது ,அவர் நமக்கு உதவ வல்லவராக இருக்கிறார். நமது மனநிலைமையைப் புரிந்து அதற்கேற்ற  உதவி செய்ய இயேசு கிறிஸ்துவால் மட்டுமே முடியும். அவரில் ஐக்கியமாக இருந்து பரலோக சந்தோஷத்தை பெற்று வாழ்வோம்.  

  ஆமென். 




  :   28 Likes

  :   98 Views