தாழ்மை
 /   Blog /  Created by Kingslin R Last updated Thu, 01-Jan-1970



தாழ்மை

மத்தேயு 11:29. "நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்" .

தாழ்மை -  என்பது, பெருமை இன்றி, தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையோடும் மனுஷரிடத்தில் அன்பாகவும் நடந்துகொள்வது. 

 தேவனே எல்லாவற்றையும் ஆளுகை செய்கிறவர் என்பதை உணர்ந்து, அங்கீகரித்து, துன்மார்க்கரிடமும் கூட, தேவ மனுஷன் தாழ்மையுடன் நடந்து கொள்ள வேண்டும். 


 மனத்தாழ்மை என்பது பலவீனம் அல்ல. மனத்தாழ்மையும் அன்பும் சேர்ந்திருக்கும் போது அது மிகுந்த தைரியத்தையும் பலத்தையும் கொடுக்கும். அதே நேரத்தில் ஆசீர்வாதங்களையும் கொடுக்கும்.கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்கள் தாழ்மையை தரித்துக் கொள்ள வேண்டும். 

 வேதத்திலிருந்து தாழ்மையுள்ளவர்களின் எடுத்துக்காட்டுக்கள்: 

 1. ஆபிரகாம் (ஆதி 18:27.32 )

 2. யாக்கோபு (ஆதி 32.10-11)

 3. மோசே (யாத் 4.10; )

 4. தாவீது (2சாமு 7.18-19; )

 5.  பவுல் (எபே 3:8; 1தீமோ 1:15)

தாழ்மையை தரித்துக் கொள்வோம். தேவன்  தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார். ஆமென். 




  :   32 Likes

  :   136 Views