ஜெபம் - 04
 /   Blog /  Created by Kingslin R Last updated Thu, 01-Jan-1970



ஜெபம் - 04

நம்முடைய முதல் பாடத்தில், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து எவ்வாறு தனித்து ஜெபித்தார் என்றும் ஒவ்வொரு நொடியிலும் தேவனோடு தொடர்புடையவர்களாய் நம்முடைய வாழ்க்கையை எவ்வாறு வாழ வேண்டும் என்பதையும் பார்த்தோம்.

இரண்டாவதாக, அப்போஸ்தலர்கள் தங்களுடைய சபைகள் தேவனை அறிகிற அறிவில் நிறைந்திருக்க வேண்டும் என்றும் அவருக்காக மாத்திரமே வாழ வேண்டும் என்பதற்காகவும் எவ்வாறு ஜெபித்தார்கள் என்று பார்த்தோம். தங்களுடையா சொந்த தேவைகளுக்காக ஒருபோதும் அவர்கள் ஜெபிக்கவில்லை. ஒவ்வொரு ஜெப விண்ணப்பங்களும் சபையின் சார்பாக அவர்களுடைய ஆவிக்குரிய வாழ்க்கைக்கு தொடர்புடையதாயிருந்தது.

இந்த பாடத்தில், ஆதிக்கால சபை மற்றும் அப்போஸ்தலர்கள் எதற்காக ஜெபிக்க நமக்கு கட்டளையிட்டிருக்கிறார்கள் என்று பார்ப்போம்.

1 தெசலோனிக்கேயர் 5:17: "இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள்

பின்வரும் காரியங்களை பற்றி ஆய்வு செய்வோம்:

ரோமர் 15:30-32 (NCV), மேலும் சகோதரரே, தேவசித்தத்தினாலே நான் சந்தோஷத்துடனே உங்களிடத்தில் வந்து உங்களோடு இளைப்பாறும்படியாக, "யூதேயாவிலிருக்கிற அவிசுவாசிகளுக்கு நான் தப்புவிக்கப்படும்படிக்கும், நான் எருசலேமிலுள்ள பரிசுத்தவான்களுக்குச் செய்யப்போகிற தர்மசகாயம் அவர்களால் அங்கிகரிக்கப்படும்படிக்கும். "நீங்கள் தேவனை நோக்கிச் செய்யும் ஜெபங்களில் நான் போராடுவதுபோல நீங்களும் என்னோடுகூடப் போராட வேண்டுமென்று நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினிமித்தமும், ஆவியானவருடைய அன்பினிமித்தமும், உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்.

முதலாவதாக, ஆண்டவர் தன் இருதயத்தில் வைத்து வைத்த பணியை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக பவுல் அவர்களிடம் ஜெபிக்கும்படி வேண்டினார்.

இரண்டாவதாக, ஆண்டவருடைய விடாமல் அவருக்கு எதிராக அவ்விசுவாசிகளிடமிருந்து பணியை செய்ய எழும்பும் அவரை காத்துக்கொள்ள வேண்டும் என்றும் அதனால் தொடர்ந்து ஆண்டவரின் ஊழியத்தை செய்ய முடியும் என்பதற்காகவும் ஜெபிக்க சொன்னார்.

மூன்றாவதாக, மக்கேதொனியா சபைகளிலிருந்து அவர் சுமந்து கொண்டு வந்த பரிசு பொருட்களை எருசலேமிலுள்ள கிறிஸ்தவர்கள் ஏற்று கொள்ள வேண்டும் என்பதற்காக ஜெபிக்க சொன்னார். இப்போது ஒரு நிமிடம் சிந்தித்து பாருங்கள். பிரசங்கிமார்கள் என்று அழைக்கப்பெரும் இப்போதைய போதகர்கள் மற்றும் தொலைக்காட்சி ஊழியர்கள் எதை பற்றி பிரசங்கிக்கிறார்கள்? தேவன் தன்னுடைய பொக்கிஷ சாலையை உங்களுக்காக திறந்து வைத்திருக்கிறார் என்று சொல்லுகிறார்கள் அனால் அதற்கு நீங்கள் செய்ய வேண்டிய ஒரே காரியம் "விதையை" மாத்திரம் விதைக்க வேண்டுமாம். இந்த தவறு எங்கே இருந்து வந்தது?

கொரிந்தியருக்கு எழுதின நிருபத்தை பாருங்கள்.

2 கொரிந்தியர் 1:8-11 (NKJV), *ஆகையால் சகோதரரே ஆசியாவில் எங்களுக்கு நேரிட்ட உபத்திரவத்தை நீங்கள் அறியாதிருக்க எங்களுக்கு மனதில்லை. என்னவெனில், பிழைப்போம் என்கிற நம்பிக்கை அற்றுப்போகத்தக்கதாக, எங்கள் பலத்திற்கு மிஞ்சின அதிக பாரமான வருத்தம் எங்களுக்கு உண்டாயிற்று. நாங்கள் எங்கள்மேல் நம்பிக்கையாயிராமல், மரித்தோரை எழுப்புகிற தேவன்மேல் நம்பிக்கையாயிருக்கத்தக்கதாக, மரணம் வருமென்று நாங்கள் எங்களுக்குள்ளே நிச்சயித்திருந்தோம். ° அப்படிப்பட்ட மரணத்தினின்றும் அவர் எங்களைத் தப்புவித்தார். இப்பொழுதும் தப்புவிக்கிறார். இன்னும் தப்புவிப்பார் என்று அவரை நம்பியிருக்கிறோம். "அநேகர்மூலமாய் எங்களுக்கு உண்டான தயவுக்காக அநேகரால் எங்கள் நிமித்தம் ஸ்தோத்திரங்கள் செலுத்தப்படும் பொருட்டு, நீங்களும் விண்ணப்பத்தினால் எங்களுக்கு உதவிசெய்யுங்கள்.

இங்கே பவுல் அவர்கள் நடுவிலிருந்த துன்பத்தையும் மற்றும் ஜெப கூட்டுபங்காண்மை (partnership) மூலம் அவற்றை மேற்கொள்ள தேவன் எவ்வாறு உதவி செய்தார் என்றும் விவரிக்கிறார்.!

2 கொரிந்தியர் 9:12-15 (NLT), 'இந்தத் தர்மசகாயமாகிய பணிவிடை பரிசுத்தவான்களுடைய குறைவுகளை நீக்குகிறதுமல்லாமல், அநேகர் தேவனை ஸ்தோத்திரிப்பதினாலே சம்பூரணபலனுள்ளதாயும் இருக்கும். " அவர்கள் இந்தத் தர்மசகாயத்தினாலாகிய நன்மையை அநுபவித்து. நீங்கள் கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் கீழ்ப்படிதலோடே அறிக்கையிட்டிருக்கிறதினிமித்தமும், தங்களுக்கும் மற்ற அனைவருக்கும் நீங்கள் உதாரத்துவமாய்த் தர்மஞ்செய்கிறதினிமித்தமும், அவர்கள் தேவனை மகிமைப்படுத்தி, “உங்களுக்காக வேண்டுதல்செய்து, தேவன் உங்களுக்கு அளித்த மிகவும் விசேஷித்த கிருபையினிமித்தம் உங்கள்மேல் வாஞ்சையாயிருக்கிறார்கள். " தேவன் அருளிய சொல்லிமுடியாத ஈவுக்காக அவருக்கு ஸ்தோத்திரம்.

எருசலேமிலுள்ள சபைக்கு கொரிந்து சபை செய்யும் தர்ம சகாயத்தினால் தேவன் மகிமைப்படுவார் என்று பவுல் குறிப்பிடுகிறார் எருசலேமில் ஏற்பட்ட மிகப் பெரிய பஞ்சமே இந்த கொடுத்தலுக்கு காரணம். அப்போஸ்தலர் பவுல் அங்கு துன்பப்படுகிற விசுவாசிகளை பார்த்து கொள்ளவதற்காக மக்கேதொனியாவிலுள்ள சபைகளில் பணம் சேகரித்தார்.

அப்போஸ்தலர் பவுல் தன்னுடைய ஊழியத்திற்காகவோ அல்லது அவருடைய சொந்த தேவைக்காகவோ ஒருபோதும் பணம் சேகரிக்கவில்லை.

  எபேசியர் 6:18-20 (NLT), எந்தச் சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம்பண்ணி, அதன்பொருட்டு மிகுந்த மனஉறுதியோடும் சகல பரிசுத்தவான்களுக்காகவும் பண்ணும் வேண்டுதலோடும் விழித்துக்கொண்டிருங்கள். சுவிசேஷத்திற்காகச் சங்கிலியால் கட்டப்பட்டிருக்கிற ஸ்தானாபதியாகிய நான் அதைப்பற்றிப் பேசவேண்டியபடி தைரியமாய்ப் பேசத்தக்கதாக, “நான் தைரியமாய் என் வாயைத்திறந்து சுவிசேஷத்தின் இரகசியத்தை அறிவிக்கிறதற்கு வாக்கு எனக்கு கொடுக்கப்படும்படி எனக்காகவும் விண்ணப்பம்பண்ணுங்கள்.

மறுபடியும் இங்கே அப்போஸ்தலனாகிய தன்னுடைய சுவிசேஷத்தை தைரியமாய் பேசத்தக்கதாக பவுல் பிரசங்கிக்கும் போது ஜெபிக்கும்படி வேண்டிக்கொள்கிறார். அந்த தருணத்தில், சங்கிலியால் கட்டப்பட்டிருந்தபோதிலும் விடுதலைக்காக அவர்களிடம் அவருடைய ஜெபிக்க வேண்டிக்கொள்ளவில்லை மாறாக தேவனுடைய செய்தியை தைரியமாக பிரசங்கித்தார்.

அவர்களை ஆவியினால் நிறைந்து மற்ற விசுவாசிகளுக்காக ஜெபிக்கும் படி கட்டளையிட்டார்.!!

பிலிப்பி பட்டணத்தில் உள்ள சபைக்கு

பிலிப்பியர் 4: 6-7 (NKJV), நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்.' அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.

கொலோசே பட்டணத்தில் உள்ள சபைக்கு:

கொலோசெயர் 4:2-4 (NKJV), இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள், ஸ்தோத்திரத்துடன் ஜெபத்தில் விழித்திருங்கள்.' கிறிஸ்துவினுடைய இரகசியத்தினிமித்தம் கட்டப்பட்டிருக்கிற நான் அந்த இரகசியத்தைக்குறித்துப் பேசவேண்டியபிரகாரமாய்ப் பேசி, அதை வெளிப்படுத்துவதற்கு, திருவசனம் செல்லும்படியான வாசலை தேவன் திறந்தருளும்படி எங்களுக்காகவும் வேண்டிக்கொள்ளுங்கள்.

தெசலோனிக்கே பட்டணத்தில் உள்ள சபைக்கு:

1 தெசலோனிக்கேயர் 5:23-25 (NKJV),  சமாதானத்தின் தேவன் தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக, உங்கள் ஆவி ஆத்துமா சரீரம்முழுவதும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாகஉங்களை அழைக்கிறவர் உண்மையுள்ளவர், அவர் அப்படியே செய்வார். சகோதரரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.

2 தெசலோனிக்கேயர் 3:1-5 (NLV),  கடைசியாக, சகோதரரே, உங்களிடத்தில் கர்த்தருடைய வசனம் பரம்பி மகிமைப்படுகிறதுபோல எவ்விடத்திலும் பரம்பி மகிமைப்படும்படிக்கும், துர்க்குணராகிய பொல்லாத மனுஷர் கையினின்று நாங்கள் விடுவிக்கப்படும்படிக்கும். எங்களுக்காக  வேண்டிக்கொள்ளுங்கள், விசுவாசம் எல்லாரிடத்திலுமில்லையே.' கர்த்தரோ உண்மையுள்ளவர். அவர் உங்களை ஸ்திரப்படுத்தி. தீமையினின்று விலக்கிக் காத்துக்கொள்ளுவார். மேலும், நாங்கள் கட்டளையிடுகிறவைகளை நீங்கள் செய்துவருகிறீர்களென்றும், இனிமேலும் செய்வீர்களென்றும், உங்களைக்குறித்துக் கர்த்தருக்குள் நம்பிக்கையாயிருக்கிறோம். கர்த்தர் உங்கள் இருதயங்களை தேவனைப்பற்றும் அன்புக்கும் கிறிஸ்துவின் பொறுமைக்கும் நேராய் நடத்துவாராக.

1 தீமோத்தேயு 2:1-5 (NLV), நான் பிரதானமாய்ச் சொல்லுகிற புத்தியென்னவெனில், எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும் பண்ணவேண்டும்: நாம் எல்லாப் பக்தியோடும் நல்லொழுக்கத்தோடும் கலகமில்லாமல் அமைதலுள்ள ஜீவனம் பண்ணும்படிக்கு, ராஜாக்களுக்காகவும், அதிகாரமுள்ள யாவருக்காகவும் அப்படியே செய்யவேண்டும். நம்முடைய இரட்சகராகிய தேவனுக்குமுன்பாக அது நன்மையும் பிரியமுமாயிருக்கிறது. ' எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்.' தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே

எபிரேயர் 13:18-19 (NKJV), எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள், நாங்கள் நல்மனச்சாட்சியுள்ளவர்களாய் எல்லாவற்றிலும் யோக்கியமாய் நடக்க விரும்புகிறோமென்று நிச்சயித்திருக்கிறோம். நான் அதிசீக்கிரமாய் உங்களிடத்தில் வரும்படிக்கு நீங்கள் இப்படி வேண்டிக்கொள்ளும்படி அதிகமாய்க் கேட்டுக்கொள்ளுகிறேன்.

அப்போஸ்தலனாகிய பவுல் விசுவாசிகளிடம் தனக்காக ஜெபிக்க வேண்டுவதற்கு முன்பு அவர்களுக்காக அவர் ஜெபிக்கிறார். மற்றும் ஜெபம் தங்களுடைய நடைமுறை வாழ்க்கையிலும் இருக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறார். அதன் பின்பு, அவருக்காகவும், முக்கியமாக தேவனுடைய செய்தியை தைரியமாக பிரசிங்கிக்கும்படியாகவும் இரண்டாவதாக ஜனங்களின் நலனுக்காகவும் ஜெபிக்கும்படி வேண்டுகிறார்.

ரோமர் 15:30-32 அவர்களிடத்தில் தனக்காக ஜெபிக்க வேண்டும் என்று அவர் கேட்டபோது, மற்றவர்களுக்கு பிரயோஜனப்படும்படியாக சில காரியங்களை குறித்து விண்ணப்பம் பண்ணினார் பவுல் முதலாவதாக அவர்களுக்கு ஜெபித்தார் (ரோமர் 1:9-12). அதன் பின்பு இரட்சிக்கப்படாதவர்களுக்காக ஜெபத்தார். (ரோமர் 10:1).

எபேசியர் 6:18-20 தான் சுவிசேஷம் பிரசிங்கிக்கும் பொது சுவிசேஷத்தை வலியுறுத்தி அதிகாரப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும் அது மற்றவர்களுக்கு பிரயோஜனமாயிருக்க வேண்டும் என்பதற்காகவும் ஜெபிக்கும்படி வேண்டிக்கொள்கிறார். பவுல் முதலாவதாக அவர்களுக்கு ஜெபித்தார் (1:15-19 and 3:14- 19) பின்பு எல்லா இடத்திலும் இருக்கிற கிறிஸ்தவர்களுக்காகவும் ஜெபிக்க வேண்டிக்கொண்டார்.

கொலோசெயர் 4:2-4 இங்கே திரும்பவும், தான் சுவிசேஷம் பிரசிங்கிக்கும் பொது சுவிசேஷத்தை வலியுறுத்தி அதிகாரப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும் அது மற்றவர்களுக்கு பிரயோஜனமாயிருக்க வேண்டும் என்பதற்காகவும் ஜெபிக்கும்படி வேண்டிக்கொள்கிறார். (1:9-12).

2 தெசலோனிக்கேயர் 3:1-2 அவர்களிடத்தில் தனக்காகவும் தன்னோடு இருப்பவர்களுக்காகவும் மற்றும் சுவிசேஷத்தை அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவும் அதை அவர்கள் ஏற்று கொள்ளவேண்டும் என்பதற்காகவும் ஜெபிக்கும்படி வேண்டிக்கொண்டார். சுவிசேஷத்தை ஏற்று கொள்ளாதவர்களிடமிருந்து அவர்கள் விடுவிக்கப்பத வேண்டும் என்பதற்காகவும் ஜெபிக்க வேண்டினார். பவுல் முதலாவதாக அவர்களுக்கு ஜெபித்தார் (1:11-12)

அப்போஸ்தலனாகிய பேதுருவும், கிறிஸ்தவர்களிடம் ஜெபிக்கும்படி வேண்டினார்.

1 பேதுரு 4:7-11 (NKJV), எல்லாவற்றிற்கும் முடிவு சமீபமாயிற்று, ஆகையால் தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து ஜெபம்பண்ணுவதற்கு ஜாக்கிரதையுள்ளவர்களாயிருங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவரிலொருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாயிருங்கள், அன்பு திரளான பாவங்களை மூடும். முறுமுறுப்பில்லாமல் ஒருவரையொருவர் உபசரியுங்கள். அவனவன் பெற்ற வரத்தின்படியே நீங்கள் தேவனுடைய பற்பல கிருபையுள்ள ஈவுகளைப் பகிர்ந்துகொடுக்கும் நல்ல உக்கிராணக்காரர்போல ஒருவருக்கொருவர் உதவிசெய்யுங்கள். ஒருவன் போதித்தால் தேவனுடைய வாக்கியங்களின்படி போதிக்கக்கடவன், ஒருவன் உதவிசெய்தால் தேவன் தந்தருளும் பெலத்தின்படி செய்யக்கடவன்; எல்லாவற்றிலேயும் இயேசுகிறிஸ்துமூலமாய் தேவன் மகிமைப்படும்படியே செய்வீர்களாக; அவருக்கே மகிமையும் வல்லமையும் சதாகாலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென்.

மேற்கண்ட காரியங்களிலிருந்து பின்வரும் முடிவுகளை கண்டரியலாம்:

1. அப்போஸ்தலர்கள் கிறிஸ்தவர்களை ஜெபத்தேவைக்காக தங்களிடத்தில் வந்து ஜெபிக்குமாறு ஒருபோதும் கேட்டதில்லை.

 

இதுவரை நாம் படித்த வேத பகுதியிலிருந்து பார்த்தோமென்றால் ஒரு அப்போஸ்தலராகிலும் தங்களிடம் வந்து ஜெபிக்குமாறு கேட்கவில்லை.

பிறகு எதற்காக இந்த பிரசங்கிமர்கள் ஜனங்களிடம் ஜெபத்திற்காக தங்களுக்கு கடிதம் எழுத வேண்டும் என்றும் தொலைபேசியின் மூலம் அழைக்க வேண்டும் என்றும் இடிக்கிறார்கள்.?

ஜனங்களை தவறாக அவர்கள் வழிநடத்துவது சரி என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

ஜெப எண்ணெய் விற்பது, ஜெபத்துணி, ஜெப புஸ்தகம், பங்காளர் திட்டம் போன்றவற்றின் மூலம் ஜெபத்தை ஒரு வியாபார கருவியாக்கிவிட்டார்கள். ஒரு அப்போஸ்தலரும் தங்களுடைய ஊழியத்திற்காகவோ அல்லது அவர்களுடைய சொந்த தேவைக்காகவோ ஒருபோதும் பணம் கேட்கவில்லை. பிறகு, எதற்காக தேவ மனுஷர்கள் என்று அழைக்கபெரும் இந்த ஊழியர்கள் தொலைகாட்சியின் மூலம் கூட்டு நிகழ்ச்சிகளை நடத்தி ஏமாற்றுகிறார்கள்.?

2. அப்போஸ்தலர்கள் தங்களுக்காக கிறிஸ்தவர்களிடம்  ஜெபிக்குமாறு கேட்டுக்கொண்டார்கள்.

வேத பகுதியிலிருந்து இதை வேறு விதமாக பார்க்க முடியும் - அப்போஸ்தலர்கள் விசுவாசிகளிடம் ஜெபிக்க வேண்டுகிறார்கள். பிறகு ஏன் இந்த ஊழியர்கள் உங்களிடம் தங்களுக்காக வேண்டுவதில்லை.? ஜெபிக்க ஒரு போதகரோ சொல்லி அல்லது ஊழியக்காரனோ தான் (he/she) சுத்த மனசாட்சியோடே ஜனங்களுக்கு முன்பாக நன்மதிப்போடு வாழ வேண்டும் என்று ஜெபிக்குமாறு ஏன் உங்களிடம் கேட்பதில்லை.?

3. கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலனாகிய பவுலின் ஜெப விண்ணப்பங்கள்

<!--[if !supportLists]-->Ø  <!--[endif]-->அவருக்கும் அவர் கூடே இருந்தவர்களுக்கும் சுவிசேஷத்தை பற்றி பேசவும் கேட்கப்படவும் ஒரு சந்தர்ப்பத்தை தேவன் ஏற்படுத்தி தர வேண்டும் !! கொலோசெயர் 4:3.

<!--[if !supportLists]-->Ø  <!--[endif]-->அவர் அதைப்பற்றிப் (சுவிசேஷம்) பேசவேண்டியபடி தைரியமாய்ப் பேசத்தக்கதாக! எபேசியர் 6:19.

<!--[if !supportLists]-->Ø  <!--[endif]-->சுவிசேஷத்தை அவர் தெளிவாக பறைசாற்றும் படியாக! கொலோசெயர் 4:4.

<!--[if !supportLists]-->Ø  <!--[endif]-->அவர் வெளியரங்கமாய் சுவிசேஷம் அறிவித்தது போல பயமில்லாமல் தைரியமாகவும் இருக்கும்படியாக ! எபேசியர் 6:19-20

<!--[if !supportLists]-->Ø  <!--[endif]-->இந்த செய்தி (கர்த்தருடைய வசனம்) அநேகரால் ஏற்றுக்கொள்ளப்படுவது மாத்திரமல்ல அது எல்லா இடங்களிலும் பரம்பி மகிமைப்பட வேண்டும். 2 தெசலோனிக்கேயர் 3:1

ஆனால் இன்றைக்கு நம்மில் சிலர் ஊழியக்காரர்களோ என்னத்தை கேட்கிறார்கள்?! தேவ

<!--[if !supportLists]-->Ø  <!--[endif]-->பயணத்தின் போது இரக்கம் (விவிலிய காலத்தை விட ஆயிரமடங்கு வசதியான போக்குவரத்து இருந்தாலும்)

<!--[if !supportLists]-->Ø  <!--[endif]-->பணத்தேவைகள் சந்திக்கப்பட வேண்டும்!

<!--[if !supportLists]-->Ø  <!--[endif]-->நல்ல உடல் சுகம்!

<!--[if !supportLists]-->Ø  <!--[endif]-->தேவனுடைய பாதுகாவல்!

<!--[if !supportLists]-->Ø  <!--[endif]-->கடைசியாக, ஆவிக்குரிய அபிஷேகம் அவர்களை தேவனுடைய காட்டிக்கொள்வதற்கு. மனிதர்களாக பெரிதாக

<!--[if !supportLists]-->Ø  <!--[endif]-->எந்த வேதாகமத்தை அவர்கள் வாசிக்கிறார்கள் அல்லது தேவனுடைய வார்த்தைக்கு தவறாக விளக்கம் வைத்திருக்கிறோமா? கொடுக்கப்பட்டதை

மனிதனின் பாரம்பரிய காரியங்களை பின்பற்றுவதற்கு பதிலாக தேவனுடைய வார்த்தையின்படி நடப்பதற்கு தயவு செய்து ஒரு தீர்மானத்தை எடுப்பீர்களா?

 

 




  :   18 Likes

  :   62 Views