இந்த பாடத்தில் இயேசு தம்முடைய சீஷர்களுக்காக எவ்வாறு ஜெபம் பண்ணினார் என்பதையும் மற்றும் ஆரம்ப கால சபைகளின் அப்போஸ்தலர்கள் தங்களுடையவர்களுக்காக எவ்வாறு ஜெபம் பண்ணினார்கள் என்பதையும் காணலாம்.
முதலாவதாக
இயேசுவை பற்றி பார்ப்போம்.
அப்போஸ்தலனாகிய
பேதுருவுக்காக இயேசு எவ்வாறு ஜெபம் பண்ணினார் என்பதை தெளிவாக ஒரு இடத்தில் நினைவுபடுத்த
முடியும்.
லூக்கா
22:31-32, பின்னும்
கர்த்தர் சீமோனே. சீமோனே, இதோ கோதுமையைச் சுளகினால்
புடைக்கிறது போலச் சாத்தான் உங்களைப் புடைக்கிறதற்கு உத்தரவு கேட்டுக்கொண்டான். "நானோ உன் விசுவாசம்
ஒழிந்துபோகாதபடிக்கு வேண்டிக்கொண்டேன். உனக்காக நீ குணப்பட்டபின்பு உன்
சகோதரரை ஸ்திரப்படுத்து என்றார்.
பேதுரு
இப்படிப்பட்ட சோதனைக்குள் கடந்து போக கூடாதுஎன்று இயேசு
ஜெபம் பண்ணவில்லை மாறாக இந்த சோதனையில் அவருடைய
விசுவாசம் ஒழிந்து போகாதபடிக்கு வேண்டிக்கொண்டார்.
இயேசு,
தம்மை சுற்றி இருந்தவர்களின் ஒவ்வொரு தேவைகளையும் சந்தித்தார். அதற்காக அவர் பிதாவிடம் மற்றவர்கள்
முன்னிலையில் ஜெபம் பண்ணவில்லை!
இயேசு
குஷ்டரோகியை சுகப்படுத்தினார் மற்றும் இயேசு பிசாசுகளை துரத்தினார். இயேசு, இந்த உடனடி தேவைகளை
செய்வதற்கு பிதாவை கேட்கவில்லை ஏனென்றால் இப்படிப்பட்ட காரியங்களை தாமாக செய்வதற்கு பிதா அவருக்கு ஏற்கனவே
சகல அதிகாதத்தையும் கொடுத்திருக்கிறார் என்பது இயேசுவுக்கு தெரியும்.
தமக்கு
முன்பாக வைத்திருக்கும் பணிகளை செய்வதற்கு ஒரு நாளும் பிதாவிடம்
அவர் செய்யுமாறு இயேசு கிறிஸ்து கேட்கவில்லை அது போல நாமும்
கேட்க கூடாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
வேதாகமத்தில்,
அப்போஸ்தலனாகிய பவுல் தன்னுடைய நிருபங்களில் அவர் பதிவு செய்திருக்கிற
ஜெபங்களை பார்க்கலாம்.
1. பவுல்
அவர்களுக்கு சுவிசேஷத்தை பிரசங்கிக்க ஒரு சந்தர்ப்பத்திற்கான ஜெபம் / விண்ணப்பம்.
ரோமர்
1:8-12, உங்கள் விசுவாசம் உலகமெங்கும் பிரசித்தமாகிறபடியினாலே, முதலாவது நான் உங்களெல்லாருக்காகவும் இயேசு கிறிஸ்து
மூலமாய் என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்.
ஜெபம்பண்ணும்போதெல்லாம்
9 நான் இடைவிடாமல் உங்களை நினைத்துக் கொண்டிருக்கிறதைக்குறித்துத் தமது குமாரனுடைய சுவிசேஷத்தினாலே
என் ஆவியோடு நான் சேவிக்கிற தேவன்
எனக்குச்சாட்சியாயிருக்கிறார்.
ஆவிக்குரிய சில கொடுக்கும்படிக்கும். விசுவாசத்தினால் ஆறுதலடையும்படிக்கும்,
"நீங்கள் ஸ்திரப்படுவதற்காக வரங்களை உங்களுக்குக் உங்களிலும் என்னிலுமுள்ள உங்களோடேகூட
உங்களைக் நானும் காண வாஞ்சையாயிருக்கிறபடியினாலே. 12. எவ்விதத்திலாவது நான் உங்களிடத்தில்
வருகிறதற்குத் தேவனுடைய சித்தத்தினாலே எனக்கு நல்ல பிரயாணம் சீக்கிரத்தில் கிடைக்கவேண்டுமென்று
வேண்டிக்கொள்ளுகிறேன்.
2. தன்னுடைய
நாட்டார் இரட்சிக்கப்பட வேண்டும் என்பதற்காக அவர் தாம் சபிக்கப்படுவதை ஏற்று கொள்ள
தயார்.
ரோமர்
10:1, சகோதரரே, இஸ்ரவேலர்
இரட்சிக்கப்படவேண்டும் என்பதே என் இருதயத்தின் விருப்பமும் நான் தேவனை நோக்கிச்செய்யும்
விண்ணப்பமுமாயிருக்கிறது.
3. ரோமாபுரியில்
உள்ள சபை ஒற்றுமையாக இருக்க வேண்டும் அப்பொழுது அவர்கள் தேவனை மகிமைப்படுத்த முடியும்
என்பதற்கான ஜெபம்.
ரோமர்
15:5-6, நீங்கள் ஒருமனப்பட்டு
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனை ஒரே வாயினால் மகிமைப்படுத்தும்படிக்கு,
*பொறுமையையும் ஆறுதலையும் அளிக்கும் தேவன் கிறிஸ்து இயேசுவினுடைய மாதிரியின்படியே.
நீங்கள் ஏகசிந்தையுள்ளவர்களாயிருக்கும்படி உங்களுக்கு அநுக்கிரகஞ்செய்வாராக.
4. ஊழியத்தில்
எல்லா விதத்திலும் சபையானது முழுமை அடைந்திருக்க வேண்டும் என்பதற்கான ஜெபம்.
1 கொரிந்தியர்
1:49, 'கிறிஸ்துவைப்பற்றிய
சாட்சி உங்களுக்குள்ளே ஸ்திரப்படுத்தப்பட்டபடியே, நீங்கள் இயேசுகிறிஸ்துவுக்குள்ளாய்
எல்லா அறிவிலும், எல்லா உபதேசத்திலும் மற்றெல்லாவற்றிலும் சம்பூரணமுள்ளவர்களாக்கப்பட்டிருக்கிறபடியால்,
அவர் மூலமாய் உங்களுக்கு அளிக்கப்பட்ட தேவகிருபைக்காக நான் உங்களைக்குறித்து எப்பொழுதும்
என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன். அப்படியே நீங்கள் யாதொரு வரத்திலும் குறைவில்லாதவர்களாய்,
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வெளிப்படுவதற்குக் காத்திருக்கிறீர்கள். நம்முடைய
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாளிலே குற்றஞ்சாட்டப்படாதவர்களாயிருக்கும்படி நீங்கள்
முடிவுபரியந்தம் அவர் உங்களை ஸ்திரப்படுத்துவார். தம்முடைய குமாரனும் நம்முடைய கர்த்தருமாயிருக்கிற
இயேசுகிறிஸ்துவுடனே ஐக்கியமாயிருப்பதற்கு உங்களை அழைத்த தேவன் உண்மையுள்ளவர்
2 கொரிந்தியர்
13:7-9, மேலும் நீங்கள்
ஒரு பொல்லாங்கும் செய்யாதிருக்கும்படியாக. தேவனை நோக்கி விண்ணப்பம் பண்ணுகிறேன். நாங்கள்
பரீட்சைக்கு நின்றவர்களென்று காணப்படும்பொருட்டல்ல. நாங்கள் பரீட்சைக்கு நில்லாதவர்கள்போலிருந்தாலும்,
நீங்கள் நலமானதைச் செய்யும்பொருட்டே விண்ணப்பம் பண்ணுகிறேன். சத்தியத்திற்கு விரோதமாக
நாங்கள் ஒன்றுஞ்செய்யக்கூடாமல், சத்தியத்திற்கு அநுகூலமாகவே செய்யக்கூடும். நாங்கள்
பலவீனரும் நீங்கள் சந்தோஷப்படுகிறோம்: பலமுள்ளவர்களுமாயிருக்கையில், நீங்கள் நற்சீர்பொருந்தும்
படிக்கும் விண்ணப்பம்பண்ணுகிறோம்.
5. எபேசு
சபையை, தேவன் ஆவிக்குரிய ஆசீர்வாதங்களால் நிறைந்திருக்கிறார் என்பதை அறிந்து கொள்ள
வேண்டும் என்பதையும் மற்றும் அதினால் அந்த சபை ஒரு முழுமைக்குள் நடக்க முடியும் என்பதற்கான
ஜெபம்.
எபேசியர்
1:15-23, "ஆனபடியினாலே,
கர்த்தராகிய இயேசுவின்மேலுள்ள உங்கள் விசுவாசத்தையும். பரிசுத்தவான்களெல்லார் மேலுள்ள
உங்கள் அன்பையுங்குறித்து நான் கேள்விப்பட்டு, "இடைவிடாமல் உங்களுக்காக ஸ்தோத்திரம்பண்ணி,
என் ஜெபங்களில் உங்களை நினைத்து. "நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவனும்
மகிமையின் பிதாவுமானவர் தம்மை நீங்கள் அறிந்துகொள்வதற்கான ஞானத்தையும் தெளிவையும் அளிக்கிற
ஆவியை உங்களுக்குத் தந்தருளவேண்டுமென்றும், தாம் நம்மை அழைத்ததினாலே நமக்கு உண்டாயிருக்கிற
நம்பிக்கை இன்னதென்றும். பரிசுத்தவான்களிடத்தில் தமக்கு உண்டாயிருக்கிற சுதந்தரத்தினுடைய
மகிமையின் 15 ஐசுவரியம் இன்னதென்றும் தாம் கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பி, அவரிடத்தில்
நடப்பித்த தமது பலத்த சத்துவத்தின் வல்லமைப்படியே விசுவாசிக்கிறவர்களாகிய நம்மிடத்திலே
காண்பிக்கும் தம்முடைய வல்லமையின் மகா மேன்மையான மகத்துவம் இன்னதென்றும், நீங்கள் அறியும்படிக்கு,
அவர் உங்களுக்குப் பிரகாசமுள்ள மனக்கண்களைக் கொடுக்கவேண்டுமென்றும் வேண்டிக்கொள்ளுகிறேன்.
*எல்லாத் துரைத்தனத்துக்கும். அதிகாரத்துக்கும். வல்லமைக்கும், இம்மையில்மாத்திரமல்ல
கர்த்தத்துவத்துக்கும். மறுமையிலும் பேர்பெற்றிருக்கும் எல்லா நாமத்துக்கும் மேலாய்
அவர் உயர்ந்திருக்கத்தக்கதாக, "அவரை உன்னதங்களில் தம்முடைய வலதுபாரிசத்தில் உட்காரும்படி
செய்து, "எல்லாவற்றையும் 23 அவருடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தி, எல்லாவற்றையும்
எல்லாவற்றாலும் நிரப்புகிறவருடைய நிறைவாகிய சரீரமான சபைக்கு அவரை எல்லாவற்றிற்கும்.
மேலான தலையாகத் தந்தருளினார்.
6. எபேசு
சபையானது தங்களுடைய தேவன் யார்? என்பதையும் அவர் அவர்களை எவ்வளவாய் நேசிக்கிறார் என்பதை
அறிந்துகொள்ளவும் அதினால் அவர்கள் தங்களுடைய ஊழியத்தில் வெற்றி காண முடியும் என்பதற்கான
ஜெபம்.
எபேசியர்
3: 14-21. "இதினிமித்தம்
நான் பரலோகத்திலும் பூலோகத்திலுமுள்ள முழுக்குடும்பத்துக்கும் நாமகாரணராகிய, 15.நம்முடைய
கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்துவினுடைய பிதாவை நோக்கி முழங்கால்படியிட்டு. 16.நீங்கள்
அவருடைய ஆவியினாலே உள்ளான மனுஷனில் வல்லமையாய்ப் பலப்படவும், 17.விசுவாசத்தினாலே கிறிஸ்து
உங்கள் இருதயங்களில் வாசமாயிருக்கவும், நீங்கள் அன்பிலே வேரூன்றி. நிலைபெற்றவர்களாகி,
18 சகல பரிசுத்தவான்களோடுங்கூடக் கிறிஸ்துவினுடைய அன்பின் அகலமும் நீளமும் ஆழமும்,
உயரமும் இன்னதென்று உணர்ந்து அறிவுக்கெட்டாத அந்த 10 அன்பை அறிந்துகொள்ள வல்லவர்களாகவும்.
தேவனுடைய சகல பரிபூரணத்தாலும் நிறையப்படவும், அவர் தமது மகிமையினுடைய ஐசுவரியத்தின்படியே,
உங்களுக்கு அநுக்கிரகம் வேண்டிக்கொள்ளுகிறேன். பண்ணவேண்டுமென்று 20 *நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும்
நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச்
செய்ய வல்லவராகிய அவருக்கு. சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாய்த் தலைமுறை தலைமுறைக்கும்
சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென்.
7. பிலிப்பி
சபை அன்பினால் நிறைந்திருக்கவும் மற்றும் அவர்கள் செய்யும் நற்கிரியைகளினால் அந்த அன்பு
மிகுதியாய் பெருகுவதற்கான ஜெபம்.
பிலிப்பியர்
1:3-6 & 9-11, 3.
சுவிசேஷம் உங்களுக்கு அறிவிக்கப்பட்ட நாள்முதல் இதுவரைக்கும் நீங்கள் அதற்கு உடன்பட்டவர்களானபடியால்,
4.நான் பண்ணுகிற ஒவ்வொரு விண்ணப்பத்திலும் உங்கள் அனைவருக்காகவும் எப்போதும் சந்தோஷத்தோடே
விண்ணப்பம்பண்ணி, 5. உங்களில் நற்கிரியையைத் தொடங்கினவர் அதை இயேசுகிறிஸ்துவின் நாள்பரியந்தம்
முடிய நடத்திவருவாரென்று நம்பி 6. நான் உங்களை
நினைக்கிறபொழுது என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்.
9. மேலும்,
உத்தமமானவைகளை நீங்கள் ஒப்புக்கொள்ளத்தக்கதாக உங்கள் அன்பானது அறிவிலும் எல்லா உணர்விலும்
இன்னும் அதிகமதிகமாய்ப் பெருகவும், 10. தேவனுக்கு மகிமையும் துதியுமுண்டாகும்படி இயேசுகிறிஸ்துவினால்
வருகிற நீதியின் கனிகளால் நிறைந்தவர்களாகி, 11. நீங்கள் கிறிஸ்துவின் நாளுக்கென்று
துப்புரவானவர்களும் இடறலற்றவர்களுமாயிருக்கவும் வேண்டுதல் செய்கிறேன்.
8. கொலோசே
சபையனது தேவன் யார் என்கிற அறிவில் நிறைந்திருக்கவும் மற்றும் அவரை அறிகிற அறிவில்
வளறுவதற்கான ஜெபம்.
கொலோசெயர்
1:3-14, கிறிஸ்து இயேசுவின்மேலுள்ள
உங்கள் விசுவாசத்தையும், பரிசுத்தவான்களெல்லார் மேலுமுள்ள உங்கள் அன்பையுங்குறித்து
நாங்கள் கேள்விப்பட்டு, பரலோகத்தில் உங்களுக்காக வைத்திருக்கிற நம்பிக்கையினிமித்தம்,
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரஞ்செலுத்தி,
எப்பொழுதும் உங்களுக்காக வேண்டுதல் செய்கிறோம் ° அந்த நம்பிக்கையைக்குறித்து. நீங்கள்
முன்னமே சத்தியவசனமாகிய சுவிசேஷத்தினாலே கேள்விப்பட்டீர்கள்: அந்தச் சுவிசேஷம் உலகமெங்கும்
பரம்பிப் பலன் தருகிறதுபோல, உங்களிடத்திலும் வந்து, நீங்கள் அதைக் கேட்டு, தேவகிருபையைச்
சத்தியத்தின்படி அறிந்துகொண்ட நாள்முதல், அது உங்களுக்குள்ளும் பலன்தருகிறதாயிருக்கிறது;
அதை எங்களுக்குப் பிரியமான உடன்வேலையாளும், உங்களுக்காகக் கிறிஸ்துவின் உண்மையான ஊழியக்காரனுமாயிருக்கிற
எப்பாப்பிராவினிடத்தில் நீங்கள் கற்றறிந்திருக்கிறீர்கள், ஆவிக்குள்ளான உங்கள் அன்பையும்
அவனே எங்களுக்குத் தெரியப்படுத்தினான். இதினிமித்தம், நாங்கள் அதைக்கேட்ட நாள்முதல்
உங்களுக்காக இடைவிடாமல் ஜெபம்பண்ணுகிறோம்; நீங்கள் எல்லா ஞானத்தோடும். ஆவிக்குரிய விவேகத்தோடும்
அவருடைய சித்தத்தை அறிகிற அறிவினாலே நிரப்பப்படவும், சகலவித நற்கிரியைகளுமாகிய கனிகளைத்
தந்து. தேவனை அறிகிற அறிவில் விருத்தியடைந்து, கர்த்தருக்குப் பிரியமுண்டாக அவருக்குப்
பாத்திரராய் "சந்தோஷத்தோடே நீடியசாந்தமும் நடந்துகொள்ளவும், எல்லாப்பொறுமையும்
உண்டாவதற்கு, மகிமையான அவருடைய வல்லமையின்படி எல்லா வல்லமையாலும் பலப்படுத்தப்படவும்,
உங்களுக்காக வேண்டுதல் 12 செய்கிறோம். ஒளியிலுள்ள பரிசுத்தவான்களுடைய சுதந்தரத்தில்
பங்கடைவதற்கு, தகுதியுள்ளவர்களாக்கினவரும், நம்மைத் "இருளின் அதிகாரத்தினின்று
நம்மை விடுதலையாக்கி, தமது அன்பின் குமாரனுடைய உட்படுத்தினவருமாயிருக்கிற 14 ராஜ்யத்திற்கு
பிதாவை ஸ்தோத்திரிக்கிறோம். [குமாரனாகிய] அவருக்குள். அவருடைய இரத்தத்தினாலே, பாவமன்னிப்பாகிய
மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது. எப்பாப்பிராத்தும் இதே காரியங்களினிமித்தம் சபைக்காக
விண்ணப்பம்பண்ணினான் .
கொலோசெயர்
4:12, எப்பாப்பிராவும்
உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறான், உங்களைச் சேர்ந்தவனும் கிறிஸ்துவின் ஊழியக்காரனுமாகிய
இவன், நீங்கள் தேவனுக்குச் சித்தமானவைகளெல்லாவற்றிலும் தேறினவர்களாயும் பூரண நிச்சயமுள்ளவர்களாயும்
நிலைநிற்கவேண்டுமென்று, தன் ஜெபங்களில் உங்களுக்காக எப்பொழுதும் போராடுகிறான்.
9. தெசலோனிக்கே
சபை ஆண்டவருடைய பணிகளிலும், விசுவாசத்திலும், அன்பிலும் பலப்படுத்துவதற்கான ஜெபம்.
1 தெசலோனிக்கேயர்
1:2-5 தேவனுக்குப் பிரியமான சகோதரரே, உங்கள் விசுவாசத்தின் கிரியையையும், உங்கள் அன்பின்
பிரயாசத்தையும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின்மேலுள்ள உங்கள் நம்பிக்கையின்
பொறுமையையும், நம்முடைய பிதாவாகிய இடைவிடாமல் தேவனுக்குமுன்பாக நினைவுகூர்ந்து, நாங்கள்
3 நீங்கள் தெரிந்துகொள்ளப்பட்டவர்களென்று நாங்கள் அறிந்து, எங்கள் ஜெபங்களில் இடைவிடாமல்
உங்களைக்குறித்து விண்ணப்பம்பண்ணி, உங்களெல்லாருக்காகவும் எப்பொழுதும் தேவனை ஸ்தோத்திரிக்கிறோம்.
‘எங்கள் சுவிசேஷம் உங்களிடத்தில் வசனத்தோடேமாத்திரமல்ல, வல்லமையோடும், முழுநிச்சயத்தோடும்
பரிசுத்த வந்தது. ஆவியோடும், நாங்களும் உங்களுக்குள்ளே இருந்தபோது உங்கள்நிமித்தம்
எப்படிப்பட்டவர்களாயிருந்தோமென்று அறிந்திருக்கிறீர்களே.
1 தெசலோனிக்கேயர்
3:9-13, மேலும், நம்முடைய தேவனுக்கு முன்பாக நாங்கள் உங்களைக்குறித்து அடைந்திருக்கிற
மிகுந்த சந்தோஷத்திற்காக நாங்கள் தேவனுக்கு எவ்விதமாய் ஸ்தோத்திரம் செலுத்துவோம்?
"உங்கள் முகத்தைக் கண்டு, உங்கள் விசுவாசத்தின் குறைவுகளை நிறைவாக்கும் பொருட்டு,
இரவும் பகலும் மிகவும் வேண்டிக்கொள்கிறோமே. "நம்முடைய பிதாவாகிய தேவனும் நம்முடைய
கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும் உங்களிடத்திற்கு எங்களை நேராக வழிநடத்துவாராக.
"நாங்கள் உங்களிடத்தில் வைத்திருக்கிற அன்புக்கொப்பாய், நீங்களும் ஒருவரிடத்தில்
ஒருவர் வைக்கும் அன்பிலும் மற்றெல்லா மனுஷரிடத்தில் வைக்கும் அன்பிலும் கர்த்தர் உங்களைப்
பெருகவும் நிலைத்தோங்கவும் செய்து, "இவ்விதமாய் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து
தமது பரிசுத்தவான்கள் அனைவரோடுங்கூட வரும்போது, நீங்கள் நம்முடைய பிதாவாகிய தேவனுக்கு
முன்பாகப் பிழையற்ற பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கும்படி உங்கள் இருதயங்களை ஸ்திரப்படுத்துவாராக.
1 தெசலோனிக்கேயர்
5:23-24, 23 சமாதானத்தின்
தேவன் தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக. உங்கள் ஆவி ஆத்துமா சரீரம்முழுவதும்,
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக.
24 உங்களை அழைக்கிறவர் உண்மையுள்ளவர். அவர் அப்படியே செய்வார். 2 தெசலோனிக்கேயர் 1:11-12, "ஆகையால்,
நம்முடைய தேவனும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும் அளிக்கும் கிருபையின்படியே, நம்முடைய
கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமம் உங்களிடத்திலும், நீங்கள் அவரிடத்திலும் மகிமைப்படும்பொருட்டாக
"நம்முடைய தேவன் உங்களைத் தமது அழைப்புக்குப் பாத்திரராக்கவும், தமது தயையுள்ள
சித்தம் முழுவதையும் விசுவாசத்தின் கிரியையையும் பலமாய் உங்களிடத்தில் நிறைவேற்றவும்
வேண்டுமென்று. உங்களுக்காக எப்பொழுதும் வேண்டிக்கொள்ளுகிறோம்.
10. எபேசு
சபையை நடத்தி வந்த ஆவிக்குரிய மகனான தீமோத்தேயுக்கு உண்டான தேவவரத்தை அவன் அனல்மூட்டி
எழுப்பிவிடும்படி அவனுக்கான ஜெபம்.
2 தீமோத்தேயு
1:3-7. 'நான் இரவும்
பகலும் இடைவிடாமல் என் ஜெபங்களில் உன்னை நினைத்து. உன் கண்ணீரை ஞாபகம்பண்ணி, சந்தோஷத்தால்
நிறையப்படும்படிக்கு வாஞ்சையாயிருந்து. விசுவாசத்தை உன்னைக் காண உன்னிலுள்ள மாயமற்ற
நினைவுகூருகிறதினால், என் முன்னோர்கள் முதற்கொண்டு சுத்த மனச்சாட்சியோடே ஆராதித்துவரும்
தேவனை நான் ஸ்தோத்திரிக்கிறேன். 'அந்த விசுவாசம் முந்தி உன் பாட்டியாகிய லோவிசாளுக்குள்ளும்
உன் ஐனிக்கேயாளுக்குள்ளும் நிலைத்திருந்தது. உனக்குள்ளும் தாயாகிய அது நிலைத்திருக்கிறதென்று
நிச்சயித்திருக்கிறேன். 'இதினிமித்தமாக, நான் உன்மேல் என் கைளை வைத்ததினால் உனக்கு
உண்டான தேவவரத்தை நீ அனல்மூட்டி எழுப்பிவிடும்படி உனக்கு நினைப்பூட்டுகிறேன். தேவன்
நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார்.
2. பிலேமோனுக்காக
ஜெபம்
பிலேமோன்
4-7, கர்த்தராகிய இயேசுவினிடத்திலும், எல்லாப் பரிசுத்தவான்களிடத்திலும் உம்முடைய அன்பையும்
உம்முடைய விசுவாசத்தையும் நான் கேள்விப்பட்டு, என் ஜெபங்களில் உம்மை நினைத்து, எப்பொழுதும்
என் தேவனுக்கு ஸ்தோத்திரஞ்செய்து, உங்களிலுள்ள சகல நன்மைகளும் தெரியப்படுகிறதினாலே
உம்முடைய விசுவாசத்தின் அந்நியோந்நியம் கிறிஸ்து இயேசுவுக்காகப் பயன்பட வேண்டுமென்று
வேண்டுதல் செய்கிறேன். சகோதரனே, பரிசுத்தவான்களுடைய உள்ளங்கள் உம்மாலே இளைப்பாறினபடியால்,
உம்முடைய அன்பினாலே மிகுந்த சந்தோஷமும் ஆறுதலும் அடைந்திருக்கிறோம்.
மேற்கண்ட காரியங்களிலிருந்து
நாம் கற்று கொள்ள வேண்டியது என்னவென்றால் இயேசுவோ அல்லது அவருடைய சீஷர்களோ ஆதி கால
சபையிலுள்ள தங்களுடைய சீஷர்களின் தேவைகளுக்காக ஜெபம் பண்ணவில்லை. ஆனால் நம்முடைய தேவைக்காக
நாம் ஏன் இன்னும் அதிகமாய் ஜெபிக்க வேண்டும்.?
சபையில் பிரசங்க
பீடத்திலிருந்து தேவனை அறிகிற அறிவில் வளர வேண்டும் அல்லது உங்களிடத்தில் இருக்கும்
ஆவிக்குரிய வரங்களை கட்டி எழுப்புவதின் மூலம் நீங்கள் சுவிசேஷத்தை பிரசங்கிக்கிற அதிகாரம்
நிறைந்த தேவனுடைய ஊழியக்காரராய் எழும்புவதற்கான ஜெபத்தை கடைசியாக எப்பொழுது நீங்கள்
கேட்டீர்கள்?
நம்முடைய வாழ்க்கையை
கண்ணாடியைப்போல தெளிவாக காட்டும் வேதத்தின் மூலம் பார்க்க வேண்டும். அனுபவத்தினாலோ
அல்லது சபை போதகரிடமிருந்தோ அல்லது உங்கள் ஆசிரியரிடமிருந்தோ வரும் போதனையின் நிமித்தம்
நாம் செயல்படக்கூடாது.
வேதம் சொல்லுகிறது.
I கொரிந்தியர் 15:19, இம்மைக்காகமாத்திரம் நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கையுள்ளவர்களாயிருந்தால்,
எல்லா மனுஷரைப்பார்க்கிலும் பரிதபிக்கப்படத்தக்கவர்களாயிருப்போம் சற்று உங்கள் சொந்த
வாழ்க்கையை சோதித்து பாருங்கள்.
உலகபிரகாரமான
ஆசீர்வாதங்களுக்காகவும் ஆவிக்குரிய ஆசீர்வாதங்களுக்காகவும் இன்னொருவரை வேண்டுகிறீர்களா?
ஜெபிப்பதற்குஉங்களுடைய ஆவிக்குரிய வாழ்க்கையை கட்டி எழுப்புவதற்கு கடைசியாக எப்பொழுது
நீங்கள் மற்றவரோடு ஜெபம் செய்தீர்கள்.?
அப்போஸ்தலனாகிய
பவுல், நம்மை ஜெபிக்க வேண்டும் என்றும் இடைவிடாமல் ஜெபம் பண்ண வேண்டும் என்று சொல்கிறார்.
அடுத்த பாடத்தில் எதற்காக ஜெபிக்க சொன்னார்கள் என்பதைப் பற்றியும் இயேசு எவ்வாறு ஜெபிக்க
கட்டளையிட்டார் என்பதைப் பற்றி விரிவாக பார்க்கலாம்.
இயேசு அவருடைய
இரண்டாம் வருகையைப் பற்றி எதிரொலிக்க செய்ய ஜெபத்தை பற்றி அவர் சொன்ன காரியங்களை உங்களிடம்
சொல்லாமல் என்னால் இந்த பாடத்தை நிறைவு செய்யமுடியாது.
லூக்கா
18:8, சீக்கிரத்திலே
அவர்களுக்கு நியாயஞ்செய்வாரென்று உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆகிலும் மனுஷகுமாரன் வரும்போது
பூமியிலே விசுவாசத்தைக் காண்பாரோ என்றார். (NLT)
Luk18:8, 1 tell you, he will grant justice
to them quickly! But when the Son of Man returns, how many will he find on the
earth who have faith?" (NLT)
Write a public review