கிரீடம்
 /   Blog /  Created by Kingslin R Last updated Thu, 01-Jan-1970



கிரீடம்

கிரீடம்! (CROWN) - ஒருவருடைய உயர்ந்த ஸ்தானம் , அவருடைய அதிகாரம் ஆகியவற்றிற்கு கிரீடம் ஓர் அடையாளமாகும்.

வேதாகமத்தில் பல எபிரெய வார்த்தைகளும் , கிரேக்க வார்த்தைகளும் கிரீடத்தை குறிப்பதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளன .

வஸ்தி (எஸ்தர் 1:10) எஸ்தர் (எஸ்தர் 2:17) ஆகியோர் கிரீடங்களை அணிந்திருந்தார்கள்.

இஸ்ரவேல் தேசத்தின் ஆரம்ப கால வரலாற்றில் ஆசாரியர்களும், இராஜாக்களும் கிரீடங்களை அணிந்திருந்தார்கள். இது அவர்களுடைய அதிகாரத்திற்கும், ஆளுகைக்கும் அடையாளமாக விளங்கிற்று (லேவியராகமம் 8.9, 2 சாமுவேல் 1:10 ).

கிரேக்க தேசத்தில் விளையாட்டுப் போட்டிகள் நடக்கும்போது அதில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆலிவ் இலைகளால் பின்னப்பட்ட கிரீடத்தை சூட்டுவார்கள். அப்போஸ்தலர் பவுல் இதைப்போன்ற கிரீடத்தை குறிப்பிட்டிருக்கிறார் (1 கொரிந்தியர் 9:25, 2 தீமோத்தேயு 4:8). 

ரோமபேரரசின் போர்வீரர்கள் இயேசு கிறிஸ்துவை பரியாசம் பண்ணி அவருடைய தலையில் முள்முடியை சூட்டி, யூதர்களின் இராஜாவே, வாழ்க என்று கூறி அவரை பரியாசம் பண்ணினார்கள் (மத்தேயு 27:29, மாற்கு 15:17, யோவான் 19:2,5). 

வெளிப்படுத்தின விசேஷத்தில் இயேசுகிறிஸ்துவின் சிரசின் மேல் அநேக கிரீடங்கள் இருந்ததாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது (வெளி 19:12). இது அவருடைய ராஜரீக அதிகாரத்தை குறிக்கிறது.

கர்த்தரிடத்தில் நாம் விசுவாசம் வைத்து அவருக்கு உண்மையுள்ளவர்களாக ஜீவிக்கும் போது நாமும் அழியாத கிரீடத்தை பெற்றுக்கொள்வோம் (1 கொரிந்தியர் 9:25 ) ஆமென்!

"சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்; அவன் உத்தமனென்று விளங்கினபின்பு கர்த்தர் தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணின ஜீவகிரீடத்தைப் பெறுவான்" (யாக்கோபு 1:12). ஆமென்!

வேதாகமத்தில் கூறப்பட்டிருக்கும் கிரீடங்கள்:

1. கனத்தின் கிரீடம் (நீதி 12:4, நீதி 17:6, எஸ்தர் 8:15, யோபு 19:9)

2. இராஜாக்களின் கிரீடம் (2 சாமு 12:30, எஸ்தர் 1:11, எஸ்தர் 2:17, வெளி 19:12-16)

3. பிரதான ஆசாரியனின் கிரீடம் (யாத்திராகமம் 29:6)

4. பெருமையின் கிரீடம் (ஏசாயா 28:1-5)

5. முள் கிரீடும் (மத்தேயு 27:29, மாற்கு 15:17, யோவான் 19:2-5)

6. மகிமையின் கிரீடம் (1 பேதுரு 5:4, நீதி 4:9, நீதி 16:31, ஏசாயா 62:3)

7. நீதியின் கீரிடம் (2 தீமோத்தேயு 4:8)

8. ஜீவகிரீடம் (யாக்கோபு 1:12, வெளி 2:10)

9. அழிவுள்ள கிரீடம் (1 கொரிந்தியர் 9:25)

10. ஆத்தும ஆதாயம் செய்கிறவர்களின் கிரீடம் (1 தெச 2:19)ஆமென்!




  :   38 Likes

  :   162 Views