கர்த்தரின் வருகை
 /   Blog /  Created by Kingslin R Last updated Thu, 01-Jan-1970



கர்த்தரின் வருகை

ஏசாயா  13:6. "அலறுங்கள், கர்த்தரின் நாள் சமீபமாயிருக்கிறது, அது சர்வவல்லவரிடத்திலிருந்து மகா சங்காரமாய் வரும்."  

கர்த்தரின் நாள் என்பது கிறிஸ்துவின் இரண்டாம் வருகையும் அதன்பின் அவரது அரசாட்சியும் குறிக்கிறது. இன்று  எல்லா நாடுகளிலும் மக்கள் திகில் அடையும்படி கொரானா வைரஸ் மக்களையும், ஆளுகிறவர்களையும் , வேதனைப்படுத்தி கொண்டிருப்பதை நாம் பார்க்கிறோம். 

ஏசாயா 13:7-9  இல் , கடைசி காலத்தில் எல்லோருடைய கைகளும் தளர்ந்து, அவர்கள் வேதனையோடும் திகிலோடு இருப்பார்கள் என்றும், வாதைகள் அவர்களை பிடிக்கும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.  9 வது வசனத்தில் , கர்த்தர் , நான் தேசத்தை  பாழாக்கி , பாவிகளை அழிப்பேன் என்று ஆண்டவர் கோபத்தோடு  சொல்வதை பார்க்க முடிகிறது. 

இன்று வேதத்தில் சொல்லப்பட்ட அந்த நிகழ்வுதான் நம்மை சுற்றி நடந்து கொண்டிருக்கிறது .  இது ஏன் நடக்குது என்று நாம் கேட்க முடியாது. அதே நேரத்தில் தேவனுடைய இரக்கம் கிடைக்க ஜெபிக்கலாம். இது இயேசுகிறிஸ்துவினுடைய வருகைக்கு ஒரு அடையாளமாக இருக்கிறது.  

கர்த்தரை அறிகிற அறிவில் வளர்ந்து, அவருக்குள் நாம் நிலைத்திருந்து, கர்த்தருடைய இரக்கத்தை பெறுவோம், வருகையிலே அவரோடு சேர்ந்து செல்வோம். ஆமென்.





  :   28 Likes

  :   114 Views