கர்த்தரிடத்தில் பற்றுதலாயிருப்பது
 /   Blog /  Created by Kingslin R Last updated Thu, 01-Jan-1970



கர்த்தரிடத்தில் பற்றுதலாயிருப்பது

சங்கீதம் 118:8  "மனுஷனை நம்புவதைப் பார்க்கிலும், கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம்." 

இந்த உலகில் நாம் சில நேரங்களில் மனிதரை நம்புகிற சூழ்நிலைகள் வரும். ஆனால் அவர்கள் நமக்கு உதவி செய்ய நினைத்தாலும்,  சூழ்நிலையின் காரணமாக உதவி செய்ய முடியாத ஒரு சூழல் ஏற்படும். ஆனால் எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் நமக்கு உதவி செய்ய வல்லவர் கர்த்தர் ஒருவர் மட்டுமே. 

தானியேல் சிங்க குகைக்குள் போடப்பட்ட பொழுது, நாட்டிற்கு ராஜாவாக இருந்த நேபுகாத்நேச்சார்  உதவி செய்ய முடியாத ஒரு சூழ்நிலை இருந்தது. தானியேல் கர்த்தரை அறிந்திருந்தார் அவர் தன்னை தப்புவிக்க வல்லவராயிருக்கிறார் என்று விசுவாசித்தான். தானியேலை கர்த்தர் விடுவிக்கவும்செய்தார். 

இன்று நாம் எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் நம்மை தப்புவிக்க வல்லவராயிருக்கிற, அடைக்கலமாய் இருக்கிற கர்த்தரை நோக்கி பார்ப்போம். அவர் நம்மை தப்புவிக்க வல்லவராக இருக்கிறார். ஆமென்.  





  :   33 Likes

  :   101 Views