கர்த்தரை சார்ந்து திடமனதாயிருபோம்
 /   Blog /  Created by Kingslin R Last updated Thu, 01-Jan-1970



கர்த்தரை சார்ந்து திடமனதாயிருபோம்

" திட மனது என்பது தைரியத்தைக் குறிக்கிறது. யோசுவா, மிகப் பெரிய பணியை செய்யவேண்டிய காலக்கட்டத்தில் தேவன் யோசுவாவைப் பார்த்து இவ்விதம் சொன்னார். பலங்கொள்ளாமல் திட மனது வராது".

" கர்த்தரை சார்ந்து திடமனதாயிருபோம்  பலங்கொண்டு திட மனதாயிரு  (யோசு 1:7)  

       திட மனது என்பது தைரியத்தைக் குறிக்கிறது. யோசுவா, மிகப் பெரிய பணியை செய்யவேண்டிய காலக்கட்டத்தில் தேவன் யோசுவாவைப் பார்த்து இவ்விதம் சொன்னார். பலங்கொள்ளாமல் திட மனது வராது. ஆனால் இந்த பலம் எங்கிருந்து வரும்? இது மனித பலம் அல்ல, தேவ பலம். இது தேவனிடத்திலிருந்து மட்டுமே நமக்குக் கிடைக்க வேண்டும். 

இதைச் சொல்லுகிறவர் யார்? தேவன். தேவாதி தேவன். அவர் சொன்னால் செய்கிறவர்.  இவரைச் சார்ந்துகொள்ளமுடியும். யோசுவாவைப் போல  நாம் நிறைவேற்றவேண்டிய பணி மிகப்பெரிய பணியாய் இருக்காலாம் அல்லது  செய்யவேண்டிய எந்த காரியமாக இருந்தாலும் அவர் நமக்கு பெலன் கொடுப்பார். அதன் மூலம் திடமனதாய் இருக்கலாம்.   

சங்கீதக்காரன் கர்த்தர் என் பெலன் என்று சொல்லுகிறார். இன்று அநேகர் கர்த்தரை தன் பெலனாகக் கொள்ளாததினால் எதற்கும் பயப்படுகிறார்கள். திடமனது என்பது அவர்களில் இருப்பதில்லை. எதற்கெடுத்தாலும் பயம். எதிர்காலத்தைக் குறித்த பயம். அநேகர் தேவனை அல்ல தங்களின் சுய பெலத்தையும் செல்வத்தையும் சார்ந்திருக்கிறார்கள். உண்மையான பெலன் கர்த்தரை சார்ந்து இருப்பது கர்த்தர்மேல் நம்பிக்கை வைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான்  (எரேமியா 17:7).  கர்த்தரை சார்ந்து திடமனதாயிருபோம். ஆமென். 





  :   32 Likes

  :   113 Views