கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள்
 /   Blog /  Created by Kingslin R Last updated Thu, 01-Jan-1970



கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள்

இந்த உலகத்தில் மனிதன் தன்னை தாழ்த்துவதை விரும்புவது இல்லை. தாழ்த்துவது ஒரு கசப்பான காரியம். தாழ்மைபடுவது என்பது சுயத்தை அழிப்பது. இயற்கையான மனிதனில் இது ஒரு இம்மி அளவுக்கூட கிடையாது. ஆனால் பெருமையோ கடலளவு இருக்கிறது. இது எவ்விதம் மனிதனுக்கு வந்தது? ஆதிப் பெற்றோராகிய ஆதாம், ஏவாளிடத்திலிருந்து நாம் சுதந்தரித்துக் கொண்டது. இது ஒரு மலையைப் போன்றது. இதை உடைப்பது என்பது சாதாரண காரியம் அல்ல. 

பெருமை தேவனுக்குறியதல்ல. அது உலகத்துக்குறியது. பெருமை நரகத்தின் வாசலும், வழியுமாக இருக்கிறது. பெருமயுள்ளவனுக்கு தேவனே எதிர்த்து நிற்கிறார். பெருமையுள்ளவன் இருதயத்தில் சமாதானம் கிடையாது. 

பெருமையின் விளைவு என்ன? ஆத்தும மரணம், நரக ஆக்கினை. ஆகவே இந்தத் தீர்ப்பு ஒவ்வொரு மனிதனுக்கென்று நியமிக்கப்பட்டு இருக்கிறது. இதிலிருந்து தப்பிக்கும்படியான ஒரு வழி என்ன? தாழ்மைதான். தேவனுக்கு முன்பாக தாழ்த்தி, பாவியாகிய என்மேல் கிருபையாய் இரும் என்று சொல்லுவதுதான். தாழ்த்தும்போது கிடைக்கும் பலன் என்ன? கிருபை ஆம் தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார். ஆமென். 





  :   52 Likes

  :   114 Views