எல்லா விஷயங்களிலும் நல்லது
 /   Blog /  Created by Kingslin R Last updated Thu, 01-Jan-1970



எல்லா விஷயங்களிலும் நல்லது

ரோமர் 8:28   அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம். 

சிறு வயதில் என்னுடைய ஆசிரியர்களிடமிருந்து மற்றும் பெற்றோரிடம் இருந்தும் அனேக நேரங்களில் அடி வாங்கியிருக்கிறேன். அது அப்பொழுது கசப்பாக இருந்தது. இப்போது நினைக்கையில் இனிப்பாக இருக்கிறது. சில விஷயங்களை புரிந்து கொள்வதற்கு நாட்களும் , பக்குவமும் தேவைப்படுகிறது. 

வாழ்க்கையில் கடினமான சூழ்நிலையிலும் அது என் நன்மைக்கே என்று எடுத்துக் கொள்வது மிகவும் கடினம். தேவனோடு ஐக்கியமும், விசுவாசமும் ,அன்பும் உள்ளவர்கள்தான் இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் அதை எளிதாக கர்த்தருடைய கிருபையோடு அதை புரிந்து கொள்கிறார்கள். 

இயேசுவின் கொடூரமான துன்பத்தையும், மரணத்தையும் எல்லாவற்றிலும் மிகப் பெரிய நன்மைக்காகச் தேவன் நமக்கு செய்தார்: அது நமது நித்திய இரட்சிப்பு.  ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களை செய்கிறவர் நம் ஆண்டவர். 

நாம் தேவனோடு அன்பாக இருக்கிற பட்சத்தில், நம் வாழ்க்கையில் என்ன காரியங்கள் நடந்தாலும் அது நன்மைக்கு ஏதுவான பாதைதான் என்று முழு மனதோடு விசுவாசிப்போம். நாம் ஜெபிக்க வேண்டியது என்னவென்றால், ஆண்டவரே கடினமான காலத்திலும், நல்ல காலத்திலும் எனக்கான உங்கள் நல்ல நோக்கத்தை புரிந்துகொள்ள எனக்கு உதவுங்கள்.  ஆமென். 





  :   41 Likes

  :   125 Views