எச்சரிக்கை
 /   Blog /  Created by Kingslin R Last updated Thu, 01-Jan-1970



எச்சரிக்கை

 "லோத்தின் மனைவியை நினைத்துக் கொள்ளுங்கள். (லூக்கா 17:32).  

வேதத்தில் நாம் திருஷ்டாந்தமாக வைக்கப்பட்ட மனிதர்களைக் குறித்து வாசிக்கிறோம். நல்ல முன்மாதிரியாக, அவர்களைப்  பின்பற்றக் கூடிய அருமையான சாட்சிகளை  வைத்து போனவர்கள் உண்டு. அதே விதமாக நம்மை எச்சரிப்பதாகவும், நாம் பின்பற்ற கூடாத கெட்ட முன்மாதிரியையும் வைத்து போனவர்களும் உண்டு. இந்த இடத்தில் ஆண்டவர் ஏன் லோத்தின் மனைவியை நினைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லுகிறார்?  

ஆண்டவர் அவர்களைத்  தப்புவிக்கும் படியாக முயற்சித்த வேளையில் அவள் இருதயம் சோதோமில் நிலைத்திருந்தது. தேவதூதர்கள் எச்சரித்ததை, சிறிது தூரம் கடைப்பிடித்தால். முழுமையாக கீழ்படியாததால், எச்சரிப்பை மீறி, அவன் மனைவியோ பின்னிட்டுப் பார்த்து, உப்புத்தூண் ஆனாள்;  (ஆதி 19:26)  என்று சொல்லப்படுகிறது. 

கர்த்தரோடு செல்ல வேண்டும் என்று நினைக்கும் போது, உலகத்தையும் அதன் இச்சையையும் உற்றுப் பார்த்துக்கொண்டு இருந்தால் , பின்னிட்டு போவது நிச்சயம் என்று எச்சரிப்பு கொடுக்கப்பட்டுள்ளது.  

மத்தேயு 24:13 "முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்."  

வேதத்தில், இதைப்போன்ற செயல்களை நாம் பார்க்கும் பொழுது, தேவன் எச்சரிக்கிறார் என்று நாம் உணர வேண்டும். அவளுடைய முடிவை ஒருவரும் சந்திக்க கூடாதபடிக்கு கர்த்தர் நம்மை காப்பாராக. ஆமென். 





  :   35 Likes

  :   103 Views